மனிதன் குரங்கிலிருந்து வந்தவனா ?
டார்வினுடைய கொள்கை உண்மையா ?
பரிணாமம் குறித்து பேசுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் டார்வினின் கொள்கையையே ஆதாரமாக அல்லது அடிப்படையாக வைத்துப் பேசுகின்றனர். “மனிதன் குரங்கிலிருந்து வந்தான்” என்று டார்வின் கொள்கையின் அடிப்படையில் நம்பக்கூடிய சிலரது நம்பிக்கையை இங்கே சிதைக்கப் போகிறோம்.
டார்வினின் பரிணாமக் கொள்கை என்றால் என்ன?
உலகின் முதல் உயிரானது உயிரற்ற ஜடப் பொருளிலிருந்து தோன்றியதாக டார்வின் கொள்கை கூறுகிறது. அந்த முதல் உயிரானது படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று நாம் உலகில் காணும் எல்லா தரப்பட்ட உயிரினங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த உயிரினங்களின் வளர்ச்சியானது இயற்கையினால் தானாக நிகழ்ந்தது என்றும், தகுதியுடைய உயிரினங்கள் நீடித்து வாழ்கின்றன என்றும், சில உயிரினங்கள் அழிந்துவிட்டன என்றும் டார்வின் கொள்கை கூறுகிறது.
டார்வின் கொள்கை, டார்வின் விதி அல்ல
இத்தனைப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாகத் திகழும் டார்வினின் பரிணாமக் கொள்கை இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று என்பது மக்கள் அறியாத ஓர் உண்மையாகும். எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியாக இருந்தாலும், அது முதலில் கொள்கை வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் பின்னர் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அந்த விஞ்ஞானம் விஞ்ஞானமாக ஏற்கப்படும். இல்லாவிடில், அது வெறும் கற்பனையாகவே தொடர்ந்து இருக்கும்.
உதாரணமாக, நியூட்டனின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் முதலில் கொள்கைகளாக வடிக்கப்பட்டு, பின்பு ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, விதிகளாக மாற்றம் பெற்றன. கொள்கைகள் விதிகளாக மாறிய பின்னரே (அதாவது நிரூபிக்கப்பட்ட பின்னரே) அவை அறிவியலாக ஏற்கப்படுகின்றன. நிரூபிக்கப்படாவிடில் அவை வெறும் கொள்கைகளாகவே இருக்கின்றன.
ஒருவர் ஒரு கொள்கையைக் கூறலாம், மற்றவர் மற்றொரு கொள்கையைக் கூறலாம், கொள்கை என்பது ஓர் அபிப்பிராயமே தவிர நிதர்சனமான உண்மையல்ல. டார்வினுடைய பரிணாமக் கருத்துகளும் அதுபோன்ற ஒரு கொள்கையே. இதுவரை எல்லா இடங்களிலும் டார்வினின் பரிணாமக் “கொள்கை” என்றுதான் நாம் கேள்விப்படுகிறோம், இதுவரை எங்கும் யாரும் இதனை டார்வினின் பரிணாம “விதி” என்று கூறவில்லை.
வேறுவிதமாகக் கூறினால், டார்வினின் பரிணாமக் கொள்கை இதுவரை நிரூபணமாகாத ஒன்று என்பது அனைத்து விஞ்ஞானிகளும் அறிந்த அப்பட்டமான உண்மை; மேலும், இதனை எக்காலத்திலும் நிரூபிக்க முடியாது என்பதையும் அனைவரும் அறிவர். இருப்பினும், தங்களுடைய நாத்திகக் கருத்துகளை தக்க வைக்க உதவுவதால் டார்வினின் பரிணாமக் கொள்கையை விஞ்ஞானிகள் இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
தன்னுடைய கொள்கைகள் கற்பனையால் புனையப்பட்டவை என்பதை டார்வினே தன்னுடைய நூலில் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நிரூபிக்கப்படாத டார்வினின் பரிணாமக் கொள்கையை சாதாரண யதார்த்தத்தின் அடிப்படையில் யோசித்துப் பார்த்தால் போதும், அது முற்றிலும் பொய்யானது, போலியானது, ஏமாற்றுத்தனமானது, முட்டாள்தனமானது, அயோக்கியத்தனமானது என்பதை எந்தவொரு புத்திசாலியாலும் புரிந்துகொள்ள முடியும்.
அஞ்ஞான விஞ்ஞானிகள்
விஞ்ஞானிகள் பல விஷயங்களை அறியாதவர்களாக உள்ளபோதிலும், எல்லாம் அறிந்தவர்களைப் போல தங்களைக் காட்டிக்கொள்வதில் வல்லவர்கள். “எல்லாம் இயற்கையின்படி நடக்கின்றன,” என்று நினைக்கும் அவர்களால், இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இயலாது.
அறிவுடைய மனிதனால், இயற்கைக்குப் பின்னால் ஒரு சட்டம் உள்ளது என்பதையும், அதைக் கட்டுப் படுத்துபவர்கள் உள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதை அறியாத வெற்று விஞ்ஞானிகள் வெறுமனே நூல்களை எழுதித் தள்ளுகின்றனர், மக்களும் அதனை ஏற்கின்றனர்.
இருப்பினும், டார்வினின் கொள்கைகளில் இருக்கும் தவறுகளை விஞ்ஞானரீதியாக சுட்டிக்காட்டிப் பல்வேறு விஞ்ஞானிகள் நூல்களை எழுதி வருகின்றனர். அவற்றை அறிய ஆர்வமுடையவர்கள் Forbidden Archeology. Human Devolution, Rethinking Darwin போன்ற நூல்களைப் படிக்கலாம்.
டார்வினின் பரிணாமக் கொள்கையில் பல்வேறு உயிரினங்களுக்கு இடையிலான இணைப்புகள் இன்றுவரை விளக்கமளிக்கப்படாமல் வெறும் கற்பனையாகவே உள்ளது.

No comments:
Post a Comment