Tuesday, 3 October 2017

யகோவா & விஷ்ணு / கிருஷ்ணா - இருவரும் ஒன்றே !





கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டின் படி அவர்களது இறைவன் 'யஹோவா' என்பதே. இவர்களது இறைவனுக்கும், பகவான் விஷ்ணுவிற்கும் உள்ள தொடர்புகளை இங்கே தந்துளேன்....

பைபிளில் உள்ள 'யகோவா" (Yahwah)  என்கிற கடவுளுக்கும், வேத இலக்கியத்தில் உள்ள விஷ்ணு என்கிற கடவுளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பின்வருமாறு..

"கடவுள் அழித்து கொண்டிருக்கும் நெருப்பாக வர்ணிக்கபடுகிறார்" - உபாகமம் 4.24

"பகவான் கொழுந்துவிட்டெரியும் நெருப்போடு ஒப்பிடபடுகிறார்"  - வேத இலக்கியம், சைதன்ய சரிதமிர்தம் - ஆதி -7.116

"யஹோவா என்கிற கடவுள் விமோசனம் என்கிற கிரீடம் அணிந்து கொண்டுள்ளார்" - ஏசையா 59.16.18

"பகவன் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான ஒரு கிரீடம் அணிந்துள்ளார்" - ஸ்ரீமத் பாகவதம் 6.4.39

"அவர் குரல் இடி போன்று இருந்தது" - யோபு 40-9
"மகாவிஷ்ணு இடியை போல் குரலை உடையவர்" ஸ்ரீமத் பாகவதம் 4.30.7

"யகோவா கடவுள் கையில் ஒரு தடியையும், ஒரு குச்சியையும் வைத்திருப்பார்" சங்கீதம் 23.4, 89.32

"மகாவிஷ்ணு தன கையில் ஒரு கோலையும், கதையையும் வைத்திருக்கிறார்" ஸ்ரீமத் பாகவதம் 6.4.39, 4.30.7

"யகோவா கடவுள் தன் எதிரிகளை அளிக்க ஒரு நெருப்பை அனுப்புவார்" - சங்கீதம் 97.3,50.3, உபாகமம் 9.3

"விஷ்ணு தன எதிரிகளை அளிக்க ஒரு நெருப்பு சக்கரத்தை அனுப்புவார்" - ஸ்ரீமத்  பாகவதம் 6.8.23
"யகோவா ஒரு கேடயத்தை எடுத்து செல்வார்" - உபாகம் 33.29, சங்கீதம் 6.4.39

அதே போல் மகாவிஷ்ணு -ஸ்ரீமத் பாகவதம் 6.4.39
இப்படி இத்தகைய ஒற்றுமைகளை கூறிகொண்டே போகலாம்.

விஷ்ணுவும், யகோவாவும் ஒரே கடவுள் தான் என்பதற்கு மேலும் வலிமை கொடுக்கும் மற்றுமொரு பொதுவான அம்சம் உள்ளது. டில்மன், டப் மற்றும் பல கல்விமான்கள் விஷ்ணுவின் பறவைக்கும், யகோவா கருடனுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்கிறார்கள். இவ்விசயம் யூதர்களின் கலை களஞ்சியம் என்கிற நூலில் 'Cherule' என்கிற வார்த்தை எப்படி வந்தது என்பதை ஆராயும் பகுதியில் உள்ளது.

"விஷ்ணு கருடன் மீது தான் அமைந்து செல்கிறார்" என்பது எல்லோருக்கும் தெரியும், அதுபோலவே யோகவாவும் ஒரே ஒரு பறவை மீது மட்டும் அமர்ந்து செல்கிறார்பைபிளில் பல பறவைகள் பற்றிய வர்ணனை உள்ள போதும், அவர் இந்த கருடன் மீது தான் செல்கிறார்.

எனவே, யஹோவா என்பது பகவான் விஷ்ணுவே தான் என்பதை இதன் முலம் அறிந்து கொள்ளலாம். ஆகவே, எல்லா மதங்களுமே பகவான் விஷ்ணு /கிருஷ்ணரை தான் சொல்கிறது. ஆனால், அவர்களால் இதை புரிந்து கொள்ள தான் முடியவில்லை.


-           --- தொடரும் ...

No comments:

Post a Comment