Sunday, 1 October 2017

இந்து வேதங்களில் பசு மாமிசம் சாப்பிட அனுமதிக்கிறதா.?



சில நாத்தீகவாதிகள் கூறும் வார்த்தை இந்து வேதங்களில் பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டதாகவும், ராமரே மாமிசம் சாப்பிட்டதாகவும் கூறுகிறார்கள். அதன் உண்மை தன்மையை இங்கே வழங்கியுள்ளேன்.

அடுத்து, அந்த காலங்களில் வேதங்களில் வேள்வியின் போது விலங்குகள் பலியிடப்பட்டன என்பது உண்மை தான். ஆனால், இப்படி பலியிடப்பட்ட விலங்குகள் உடனேயே உயர்ந்த பிறவியினை அடைகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது அந்தகால பிராமணர்கள் அந்தளவுக்கு உயர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களது மந்திரத்திற்க்கு அவ்வளவு சக்தி இருந்தது. மேலும் விலங்குகளை இப்படி வேள்வியில் போட அனுமக்கிறதேயெழிய, அந்த விலங்கினை கசாப்பு கடையில் போய் சாதாரணமாக வெட்டி சாப்பிட சொல்லவில்லை.

ஆனால், இந்த கலியுகத்தில் இப்படிபட்ட சரியாக மந்திரங்கள் சொல்கிற உயர்ந்த சக்தியுடைய பிராமணர்கள் கிடையாது. எனவே தான் இதை கலியுகத்தில் விலங்குகளை பலியிட அனுமதிக்கவில்லை.

எனவே, வேள்வியில் விலஙகுகளை பலியிட இந்தகலியுகத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.

அடுத்து, பசு நமது குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் தான் மற்ற விலங்குகளை விட இதனை ஒரு தாயாக பார்க்கின்றனர். இப்படி அதன் பாலை குடித்துவிட்டு நன்றியில்லாமல் இவைகள் எதற்க்கு உதவாத சமயத்தில் கொன்று சாப்பிடுவது மனசாட்சியுள்ளவன் தவறானது என அறிவான். சிலர் கூறுவது பசு வயதானபோது மட்டுமே இறைச்சிக்காக அறுக்குறோம் என்கின்றனர். அப்படியெனில் உங்களை பெற்ற தாய்,தந்தையரை எதற்க்கும் உதவாத வயதான காலத்தில் அவர்களும் இப்படி நமக்கு தேவையற்றவர்களாகவே உள்ளனர். அவர்களையும் நீங்கள் இப்படி தான் செய்வீர்களா!

வேதஙகளில் ஏதோ ஒரு இடத்தில் சொல்லப்பட்டதை வைத்து இது தான் அதன் மொத்த கருத்தே என முடிவு செய்வது முட்டாள்தனமானது.

மேலும் மனு -5-51 'பிராணிகளைக் கொல்பவன்,கொல்ல சொல்பவன், வெடடுபவன் வாங்குபவன்,விற்பவன்,பரிமாறுபவன்,சாப்பிடுபவன இவர்கள் அனைவரும் கொடியவர்கள் மற்றும் பாவத்தை சேர்ப்பவர்கள்' என்கிறது.

மேலும் மனு -5-55 'இவ்வுலகில் எதனுடைய மாமிசத்தை ஒருவன் உண்கிறானே, அது வேறு பிறவியில் அவனுடைய மாமிசத்தை உண்ணும் என்பதே மாமிசம் என்பதன் பொருள்.'

மேலும் மனு 49 ல் 'மாமிச ஆசையின் காரணமாக ஒருவன் பிராணிகளை பிடிக்கவும் கொல்லவும் தூண்டுகின்றன. இதை எண்ணிப் பார்த்து ஒருவன் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்' எனகிறார்.

இப்படி மனு கூறியுள்ளார். மேலும் இது ஒருவனுடைய குணமாகிய தமோ குணம், ரஜே, சத்வ குணங்களை உடையவனின் உணவைப் பற்றியும் கூறுகிறார்.
தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை தேவர்களுக்கு பலியிட்டு பின்பு சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி மனு சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதையும் கூறுகிறார்.

முடிவு நமது கைகளில் தான்.
.

வேதங்களில் விலங்குகளை கொல்ல அனுமதிக்கவில்லை. இதோ வேத ஆதாரம்...

ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம்

அதர்வ வேதம் 6.140.2

பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்

யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் 8.6.23

நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்

அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் 10.1.29

வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!

.'அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:'...யஜுர் வேதம் 1.1
மனிதனே மிருகங்கள் அக்ஃன்யா அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக

'பஷுன்ஸ்த்ராயேதாம்' ....யஜுர் வேதம் 6.11
மிருகங்களைக் காப்பீர்

'த்விபாதவா சதுஷ்பாத்பாஹி' ....யஜுர் வேதம் 14.8
இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்



இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?

No comments:

Post a Comment