ஹோலி பண்டிகை
”வண்ணங்களின்
திருவிழா” என்று வர்ணிக்கப்படும் ஹோலி
பண்டிகை பிப்ரவரி – மார்ச் மாதங்களிலும், ஃபால்குணா
மாதம் என்றழைக்கப்படும் பங்குனி மாதத்திலும், பெளர்ணமி
நன்னாள் அன்றும் இந்தியாவெங்கும் கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை கொண்டாடும் விதமாக இசைக்கருவிகளின் இன்னிசை
முழக்கத்தோடு, பல்வேறு வண்ணங்களை தண்ணீரில்
கலந்து மக்கள் ஒருவர்மீது ஒருவர்
வீசிக்கொள்வார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் மற்ற திருவிழாக்கள் போல
ஹோலியும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தீமையை நன்மைவென்ற நாளாக
ஹோலி குறிக்கப்படுகிறது. பழங்கால புராண வரலாற்றுப்படி
ஹிரண்யகசிபு வாழ்க்கை வரலாற்றோடு ஹோலி சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஹோலியின்
வரலாறு:
ஹிரண்யகசிபு
பழங்கால இந்தியாவில் ஒரு அரசனாகவும், அரக்கனைப்
போலவும் வாழ்ந்தவன். விஷ்ணு பெருமாள் இவனது
இளைய சகோதரனை கொன்று விட்டதால்
விஷ்ணு பெருமாளை பழிதீர்த்துக் கொள்ள விரும்பினான். அவனது
விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக வரம் வேண்டி
பல வருடங்கள் பிராத்தனை செய்தான் – கடுமையான பிராத்தனையின் இறுதியில் பெரும் வரம் பெற்றான்ஹிரண்யகசிபு.
வரம் பெற்றதால் தன்னை கடவுள் என
நினைத்த கசிபு, தன்னை கடவுளாக
மதித்து வழிபட வேண்டுமென தன்
குடி மக்களுக்கு ஆணையிட்டான்.
இந்த
கொடூர அரசனுக்கு பிரகலாதன் என்ற இளம் வயது
மகன் ஒருவன் இருந்தான். அவன்
விஷ்ணு பெருமாள் மீது மாறா பற்றுக்
கொண்ட பக்தனாக இருந்தான். குடிமக்கள்
அடிபணிந்தாலும் ஹிரண்யகசிபுக்கு தன் மகன் பிரகலாதன்
பணியவில்லை. விஷ்ணு பெருமாளின் திருநாமத்தைதான்
நாள் முழுவதும் உச்சரித்து வந்தான். இதைக் கண்ட கசிபு
ஆத்திரம் கொண்டான். கல் மனம் கொண்ட
அவன் தன் மகனை கொல்லத்
திட்டமிட்டான். இந்தக் கொடுங்காரியத்தை நிறைவேற்றுவதற்கு
தன் சகோதரி ஹோலிகாவை உதவிக்கு
அழைத்தான். அவளோ நெருப்பால் தீங்கு
ஏற்படாத பெரும் வரத்தைப் பெற்றவள்.
ஆகவே எரிகின்ற சிதையில் உட்கார்ந்து தன் மகனை அவள்
மடியில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். அதன்படியே நடந்தது. நாள் முழுவதும் பிரகலாதன்
விஷ்ணு பெருமாளின்
திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்ததால், நெருப்பிலிருந்து அவனை விஷ்ணு பெருமாள்
காப்பாற்றினார். தன் வரத்தை தவறாக
பயன்படுத்திய கசிபுவின் சகோதரி ஹோலிகா நெருப்பில்
எரிந்து சாம்பலானாள். ஆகையால் ஹோலிகா சாம்பலான
தினத்தைதான் அனைத்து தீமையும் எரிந்த
நாளாக மக்கள் கொண்டாடுகிறார்கள். ஹோலிகா
சம்பவத்திற்குப் பிறகுதான் விஷ்ணு பெருமாள் இரண்ய
கசிபுவைக் கொன்றார். இந்தியாவில் பீகார் போன்ற சில
மாநிலங்களில் ஹோலி பண்டிகை விமரிசையாக
கொண்டாடப்படுகிறது. ‘ஹோலி’ தினத்திற்கு முதல்
நாள், தீமையின் மரணத்தை நினைவுகூரும்
விதமாக மக்கள் வெளிப்புறப்பகுதியில் சிதைபோல் வடிவமைத்து
நெருப்பை மூட்டி எரியவிட்டு பண்டிகையைக்
கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை
வரலாறும் – கொண்டாடும் விதமும்
பழங்கால
பண்டிகைகளில் ஒன்றுதான் ஹோலி. இந்தியாவின் கிழக்குப்
பகுதிகளில் பெருமளவு கொண்டாடப்படும் இப்பண்டிகை, ஆரியர்களினால் கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கிருத்துவ மதம் பிறப்பதற்கு முன்பாக,
பல நூற்றாண்டுகளாக இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை, பல்வேறு வகைகளில் மக்கள்
கொண்டாடுகிறார்கள். பண்டிகையின் கொண்டாட்டக் காரணமும் மாறியுள்ளது. திருமணமானப் பெண்கள், அவர்களது சந்தோசத்திற்காகவும், அவர்களது குடும்பங்களின் நன்மைக்காகவும் பூஜைகள், சடங்குகள் செய்து, பெளர்ணமி தினத்தன்று
வழிபடுகிறார்கள்.
வண்ணங்கள்
வீசும் வழக்கம் வந்த வரலாறு:
விஷ்ணுவின்
அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பகவானின்
காலத்தில், அதாவது பழங்காலத்தில் இந்த
பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணபகவான் வண்ணங்களை வீசி பண்டிகையை கொண்பாடியதாகவும்,
அதானல்தான் புகழ்பெற்ற பண்டிகையாக ஆனதாகவும் நம்பப்படுகிறது. விருந்தாவன், கோகுலம் போன்ற இடங்களில் ஸ்ரீகிருஷ்ணபகவான்
தன் நண்பர்களோடு விளையாடும் போது ஹோலிபண்டிகையை நடத்திக்காட்டி,
குழந்தைக்குரிய சில தந்திரங்களை நிகழ்த்திகாட்டி
இப்பண்டிகையை சமூகத்தின் நிகழ்ச்சியாக உருவாக்கினார். ஆகையால்தான் விருந்தாவனத்தில் இந்த ஹோலி, இணையில்லா
வகையில் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் குளிர் காலத்தை
வழியனுப்பி வசந்த காலத்தை கொண்டாடுவதாக
ஹோலி அமைகிறது. சிலபகுதிகளில் வசந்த விழாவின் கதிரறுவடை
தினமாகக் கொண்டாடப்படுகிறது. புது தானியங்களை மக்கள்
தங்களது களஞ்சியங்களில் வைத்த பின்பு, அந்த
மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆகையால்
இதை ”வசந்த மஹோற்சவம்” என்றும்
“காம மஹோச்வம்” என்றும் அழைக்கிறார்கள்.
பண்டிகையின்
போது வீசப்படும் வண்ணங்கள் குலால் என்றழைக்கப்படும் தேசு
அல்லது பாலஷ் மரத்தின் பூக்களால்
தயாரிக்கப்பட்டதாகும். இவ்வண்ணங்கள் நம் தோலுக்கு நன்மையளிக்கக்கூடியது,
எவ்வித இராசாயன கலவையும் சேராதது
என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெருவாரியான மாநிலங்களில் ஹோலிப்பண்டிகை மூன்று நாட்கள் கொண்டாபப்படுகிறது.
முதல்நாள்:
புனித பூர்ணிமா அல்லது பெளர்ணமி நாளன்று
சிறிய பித்தளைப்பாத்திரத்தில் வண்ணங்களை தண்ணீரில் கலந்து வைத்து குடும்பத்தின்
மூத்த ஆண்மக்கள் அவர்களுடைய குடும்பத்தார் மீது வண்ணத்தைத் தெளிப்பார்கள்.
இரண்டாம்
நாள்: புனோ என்று அறியப்படும்
இந்நாளன்று ஹோலிகாவின் உருவங்களை நெருப்பிட்டும், ஹோலிகா, பிரகலாதனை நினைவு கூரும் வகையில்
வெளிப்புறப்பகுதியில் தீபோற்சவம் செய்து அந்தத் தீபோற்சவத்தை
தாய்மார்களும் குழந்தைகளும் கடிகார முட்கள் இயங்கும்
திசையில் 5 முறை சுற்றி வலம்வந்து
நெருப்புக்கடவுளின் ஆசிர்வாதம் வேண்டி வணங்குகிறார்கள்.
மூன்றாம்
நாள்: பார்வா என்று அறியப்படும்
பண்டிகையின் இறுதி நாளான இந்நாளில்
நீரால் கலக்கப்பட்ட வண்ணங்களை ஒருவருக்கொருவர் தெளித்துக் கொண்டும் உடலில் பூசிக்கொண்டும் ஸ்ரீகிருஷ்ணா ராதா
தெய்வங்களை வணங்கியும் வழிபடுகிறார்கள். வேதபுராணங்களிம் நாரத, பவிஷ்ய புராணங்களில்
இந்த ஹோலி குறித்த செய்திகள்
இடம் பெற்றுள்ளன. கி.பி. 300ல்
கண்டுபிடிக்கப்பட்ட ராம்நகர் கல்வெட்டுக் குறிப்பில் ஹோலி குறித்து கூறப்பட்டுள்ளது.
ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனர் இயற்றிய இரத்னா வளியில்
இப்பண்டிகை குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பண்டிகைப்பற்றி
மற்ற சில புராணங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவைகளில் சிவன், காமதேவன் கதைகளும்
இணைந்துள்ளன என்பது ஈண்டு நோக்கத்தக்கது.
இந்தியாவில் ஹோலிபண்டிகையை இந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்கள் உட்பட அனைவரும்
கொண்டாடுகிறார்கள்.
இது
நமது தேச ஒருமைப்பாடுக்கு கிடைத்த
மிகப்பெரிய வெற்றியாகும்.
No comments:
Post a Comment