Tuesday, 3 October 2017

லிங்கம் என்பது என்ன.?



சிவலிங்க வழிபாட்டைப் பற்றி தவறான கருத்துகள் சைனர்கள், பௌத்தர்கள் காலம் தொடங்கி, முகாலயர் காலத்தில் அவதூறாக்கி, ஆங்கிலேயர் காலத்தில் ஆபாசமாக்கி, பிறகு வந்த இந்து-விரோத சித்தாந்திகள் அசிங்கமாக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால், உண்மை அறியாமல் அல்லது மறைத்து இன்றும் அத்தகைய துன்மார்க்க முறையில் எழுதி வருகின்றனர்.

ஆனால் பாவம், இன்றும் உள்ள அத்தாட்சிகள் அவர்களுடைய கொடிய மனங்களை, குரூரச் சிந்தனைகளை, ஆபாச போக்கை………………. வெளிக்காட்டுகின்றன.

லிங்கம் என்றால் "SYMBOL", (or) "குறியீடு" என்று பொருள்! சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! அம்புட்டு தான்!

சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை.

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். 'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும், ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்].
அருவ உருவ வழிபாட்டு முறை தான் லிங்க வழிபாட்டின் கோட்பாடு.அருவம் என்றால் "உருவம் இல்லாத "என்று பொருள். ,--லிங்கம் குறிப்பிட்ட வரைமுறை இல்லாத வடிவம்.

* உருவமும் உண்டு, அருவமும் உண்டு! () உருவமும் இல்லை, அருவமும் இல்லை = அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? = அருவுருவம்! சிவலிங்கம் என்பது அருவுருவம்!

உருவம் ஏதோ ஒரு வடிவம் உள்ளது அல்லவா ??அதைக்குறிக்கின்றது.எனவே உருவம் உள்ளதும் ,உருவம் அற்றதும் கலந்ததுவே சிவலிங்கம் அல்லது லிங்கம்.தெரியாதவர்கள் பழம்தமிழ் அகராதிகளை கொஞ்சம் புரட்டியும் பார்க்கலாம்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்ததுஇதை அவ்வப்போது நாம் உணர்ந்து கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம் என்னும் ஒரு குறியீடு!

சூதர், நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை கூறினார். இதில் லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும்

இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.
  
லிங்க புராணம்-  அத்தியாயம் 17. லிங்கம் தோற்றுவாய், வரும் கதை பின்வருமாறு ..

ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது அவ்வமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட, அடியைக் காண வராக வடிவில் விஷ்ணுவும் புறப்பட்டார். இருவரும் முடி, அடி காணமுடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக, ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர்.

"சிவபெருமானின் பேரொளியாக வந்த ஜோதியை கண்டனர். இதுவே லிங்கம் அல்லது ஜோதி லிங்கம் ஆனது' என லிங்க புராணம் -  அத்தியாயம் 17, வசனம் 33  இந்த ஜோதிலிங்கத்தை விளக்குகிறது.

இதுவே முதன் முதலாக சிவபெருமான் எடுத்த  லிங்க  வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார்.

ஆதி காலமனிதன் வழிபாட்டு முறை லிங்க வடிவிலே இருந்திருக்கிறது கொஞ்சம் மண்ணை ஈரபடுத்தி அதை லிங்கமாக வடிவமைத்தே முதலில் வழிபாட்டு முறை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதற்கு தொல்லியல் துறை பல சான்றுகளை அளித்திருக்கிறது. கல்லில் கடவுள் ரூபத்தை வரைய அல்லது செதுக்க தெரியாத ஆதிகால வழிபாட்டில் உருவாக்க பட்டவைதான் இந்த லிங்க வழிபாடு.இப்போது கூட கிராமங்களில் நடக்கும் குலதெய்வ வழிபாடுகளில் இஷ்ட தெய்வத்தை மக்கள் லிங்க வடிவில் வைத்தே வழிபடுகிறார்கள்.

லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத் தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும்

இதோ, சமீபத்தில் சிதம்பரத்தில் பிப்ரவரி 5 முதல் 7 வரை 2010ல் நடந்த பன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டில் ஆய்வாளர் – கோ. வே. ராமகிருஷ்ண ராவ், சென்னை அவர்களால் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை – “ஆய்வுக்கோவை-தொகுதி-2, பக்கங்கள்.375-386ல் காணலாம்.
வசதிக்காக, இங்கே பதிவிடப்படுறது.

https://tamilheritage.wordpress.com/2010/05/11/linga-worship-was-prevalent-throughout-the-world/


No comments:

Post a Comment