கிருஷ்ணரின் ராஸ நடனத்தின் உண்மைகள் ?
முதலாவதாக, இந்த சமயத்தில் கிருஷ்ணரின் வயது வெறும் 7 தான், அந்த வயதில் ஒரு சிறுவனுக்கு காம உணர்வு ஏற்படுவதில்லை .
இப்படி
7 வயதுடைய கிருஷ்ணரும், 7 வயதுடைய கோபிகை சிறுமிகளும் செய்தது காமம் இல்லை.
இது
ஒருவகை குறும்பு தான் .
கிருஷ்ணர்
பெண்களின் சேலையை ஒளித்துவைப்பதும், ரஸா லீலா நடனம் ஆடும் போதும் வ்ரிந்தாவனத்தில்
இருக்கிற இந்த சமயத்தில் அவரது வயது வெறும் 7 தான். அதாவது, அவர் 10 வயதில் மதுராவிற்கு
போய் விடுகிறார் . கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையில் மயங்கியே கோபியர்கள் அவரை தேடி
வந்தனர். இதில் எந்த வித காமமும் இல்லை. அப்படி எந்தவித குறிப்பும் உண்மையில் இல்லை.
ஸ்ரீமத்பாகவதத்தில்
இந்த அத்யாய தலைப்பே' கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையில் கோபியர் மயக்கம்' என்பதே தான்.
ராசா
லீலா (ஸ்ரீமத் பாகவதம் 10 காண்டம்-
அத்தியாயம் 29 )
இந்த
உலகிலுள்ள உயிர்வாழியின் சாதாரண நடனத்திற்கும், கிருஷ்ணரின்
ராசா நடனத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. இதை,
ஸ்ரீமத் பாகவதத்தில் சுகதேவரிடம், பரிட்சித்து கேட்கிறார் 'கிருஷ்ணர் கோபியர்கள் நடனம் எனக்கு ஆச்சர்யம்
அளிக்கிறது' என்கிறார். மேலும், கிருஷ்ணர் தர்மத்தை
நிலைநாட்டவும், அதர்மம் ஓங்குவதை தடுக்கவும்
அவதரிக்கிறார்' என்று கேட்கிறார். அதன்
பதில் சுகதேவர் பின்வருமாறு கூறுகிறார்
முதலாவதாக,
இந்த சமயத்தில் கிருஷ்ணரின் வயது வெறும் 8 தான்,
அந்த வயதில் ஒரு சிறுவனுக்கு
காம உணர்வு ஏற்படுவதில்லை . மேலும்,
கிருஷ்ணர் 'ஆப்தாகாம எனப்படுகிறார்,
அதாவது அவர் தன்னில் திருப்தியடைந்தவர்
. அவர் காமவயப்பட்டிருந்தாலும் தம் இச்சையை பூர்த்தி
செய்து கொள்ள அவர் பிறரின்
உதவியை நாட தேவையில்லை. மேலும்,
இதில் 'யது - பதி' என்கிற
சொல், யது குல அரசர்கள்
நற்பண்புகளில் பெயர் வாங்கியவர்கள், எனவே
கிருஷ்ணரும் அவ்வாறே இருந்தார் என்கிறார்.
அதாவது, கோபிகைகளாலும் இவரின் உணர்வுகளை தூண்டமுடியாதவராவார்
என்கிறார் பரிட்சித்து மகாராஜ்.
ஆனாலும்,
இந்த சூழ்நிலையை தெளிவுபடுத்த பரிட்சித்து, பிகையுயர்ந்த பிரம்மச்சாரியான சுகரிடம் கேட்கிறார், அதன் பதிலாக சுகர்
கூறுகிறார்.
'உன்னத
ஆளுநர் தர்மத்தின் கோட்பாடுகளை மீறுகிறார் என்பது, அது அவருக்குள்ள
மாபெரும் அதிகாரத்தை காட்டுகிறது. உதாரணமாக, வெறுக்கத்தக்க எதையும் நெருப்பு எரித்து
விழுங்கலம். அது நெருப்பின் உன்னத
சக்தி. அதுபோல, மலம், மூத்திரம்,
வேறு அழுக்கானவை ஆகியவதிலுள்ள
நீரை சூரியன் கிரகிக்கலாம். இதனால்
சூரியன் மாசுஅடைவதில்லை. மாறாக சூரிய ஒளிபட்டு
மாசடைந்த இடம் விஷ கிருமிகள்
நீக்கப்பட்டு பரிசுத்தமடைகிறது.
கிருஷ்ணர்
உன்னத அதிகாரியாகையால் அவரது செயல்பாடுகள் பின்பற்றப்பட
வேண்டுமெனவும் விவாதிக்கலாம்.
இதற்க்கு சுகதேவர் கூறுகிறார்.
'ஈஸ்வராணாம்'
அதாவது உன்னத ஆளுநர் சில
வேளைகளில் தம் கட்டளைகளையும் மீறலாம்.
ஆனால் இது ஆளுநராகிய அவருக்கு
மட்டுமே சாத்தியமேயன்றி, ஆளுநரின் சாதாரண உயிர்வாழி அல்லது
வழக்கமல்லாத செயல்களை மற்றவர்கள் பின்பட்டக்கூடாது. ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் ஆள்பவர்கள் அல்ல. அவர்கள் கட்டுண்ட
ஆத்மாக்கள். ஆகையால் அவர்கள் ஆளுநரை
போல் செயல்பட முடியாது. ராசா
லீலா நடனத்தை யாரும் நகல்
செய்யவோ, அதை பற்றி என்னவும்
கூடாது என்று சுகதேவர் எச்சரிக்கிறார்.
ஆனால், ஒருவன் இப்படி
முட்டாள் தனமாக இதை செய்தால்,
சிவனை போல் விஷத்தை குடிக்க
முயந்தவன், மடிந்தது போல மடிவது நிச்சயம்
என்கிறார்.
பொதுவாக,
பகவத் கீதை போதனைகளின் படி
மக்கள் நடக்கவேண்டும்.
கிருஷ்ணரின் ரஸா நடனத்தை ஒருவன்
நகல் செய்யக்கூடாது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் கையால்
தூக்கியது, பூதனை அரக்கி வதம்
இப்படி பல அற்புத செயல்கள்
அசாதாரணமானவை என்பதில் சந்தேகமில்லை. அதுபோலவே, ரஸா நடனமும் வழக்கில்லாத
ஒரு நிகழ்ச்சி. எனவே சாதாரணமானவர்கள் இது
போல் செய்ய நினைப்பது ஒரு
முறையில்லாத செயலாகும்.
கிருஷ்ணருடன்
நடனமாடிய கோபியர்களில் நான்கு பிரிவினர் உள்ளனர்:
(1)
ஆன்மீக உலகிலிருந்து கிருஷ்ணருடன் வந்த நித்ய ஸித்தர்களான கோபியர்கள்,
(2)
தண்டகாரண்ய ரிஷி கோபியர்கள் (ஸ்ரீ இராமர் தண்டகாரண்யத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த
ரிஷிகள் அவரது துணைவியராக விரும்பினர். தான் ஏக பத்தினி விரதம் மேற்கொண்டிருப்பதால்
அடுத்த அவதாரத்தில் அதற்கு வாய்ப்பளிப்பதாக பகவான் அவர்களுக்கு உறுதியளித்தார். அவர்கள்
கோபியர்களாக ராஸ நடனத்தில் கலந்து கொண்டனர்.),
(3)
தேவ கன்னியர்கள், மற்றும்
(4)
ஷ்ருதி-சாரி கோபியர்கள் (கோபியர்களின் வடிவில் வந்த வேதங்கள்).
இப்பிரிவுகளை
விளக்கி இவர்களில் யாருமே சாதாரண பெண்கள் அல்ல என்பதை பத்ம புராணம் உறுதிப்படுத்துகிறது.
எனவே, கோபியர்களை சாதாரண பெண்களாக நினைப்பது முற்றிலும் தவறு.
இவர்களே,
கோபியர்களாக வந்து 'துர்கா' தேவியை
வழிபட்டு கிருஷ்ணர் கணவனாக வரவேண்டுமென விரதமிருந்தனர்.
கோபியர்கள் ஏற்கனவே அளிக்கப்பட்ட வரத்தின்படி
அவர் நடந்து கொண்டார்.
கீதையில்
கூறப்பட்டது 'தம் செயல்களில் விளைவுகளை
கிருஷ்ணர் அனுபவிப்பதுமில்லை, அவைகளால் அவர் துன்புறுவதுமில்லை' என்கிறார்.
எனவே அதர்மமாக நடப்பது அவருக்கு சாத்தியமல்ல,
அவர் தர்மங்களையும், செயல்க்ளையும் கடந்தவர். ஜட இயற்கையின் குணங்கள்
அவரை தொடுவதில்லை. எல்லா உயிர்களுக்கும் அவரே
ஆளுநர். எனவே தர்மம், அதர்மம்
என்பனவெல்லாம் அவருக்கு பொருந்தாது. ஒவ்வொருவரின் உடலிலும் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறார்.
எனவே, அவர் ஒருவரை பார்த்தாலோ,தழிவி கொண்டாலோ அது
முறைதவறியதாகாது.
மேலும்,
கிருஷ்ணருடன் நடனமாடிய கோபிகைகள் எல்லோரும் தம் ஜட உடலில்
இருக்கவில்லை. அவர்கள் தங்கள் ஆன்மீக
உடலில் கிருஷ்ணருடன் நடனமாடினர். ஆனால், அவர்களது உடல்கள்,
அவர்களது கணவர்களது
பக்கத்திலேயே இருந்தன. அதாவது, கோபியர்கள் உடல்கள்
அவர்களது கணவருடன் படுத்திருந்த பொது, கிருஷ்ணரின் அம்சங்களான
கோபியர்களின் ஆன்மாக்கள் அவருடன் நடனமாடி கொண்டிருந்தன.
உன்னத புருஷரும் முழுமையான ஆத்மாவுமான கிருஷ்ணர் கோபியர்கள் ஆன்மிக உடல்களுடன் நடனமாடி
கொண்டிருந்தார்கள்.
எனவே,
இந்த உலக நியதிப்படி கிருஷ்ணர்
பிறரின் இந்த ஆன்மாவுடன் நடனமாடியதை
எப்படி குற்றம் சாட்ட முடியும் ? (ஸ்ரீமத்
பாகவதம் 10 காண்டம்- அத்தியாயம் 29 )
கிருஷ்ணரும்
கோபியர்களும் ஓர் இரவு முழுக்க
நடனமாடியதாக கூறப்படுகிறது. ஆயினும், உண்மையில் அவர்கள் ஆடியது சாதாரண
மனிதர்களின் இரவு அல்ல, பிரம்மாவின்
கணக்கில் ஓர் இரவாகும் (ஸ்ரீமத்
பாகவதம் 10.33.38).
சாதாரண
மக்களின் கண்களுக்கு அவர்கள் ஆடியது ஓர்
இரவாகத் தோன்றலாம், ஆனால் காலத்தின் அதிபதியான
கிருஷ்ணரோ அந்த இரவினை பிரம்மாவினுடைய
இரவிற்கு சமமாக நீட்டித்தார். பிரம்மாவினுடைய
ஓர் இரவு என்பது நமது
கணக்கின்படி 432 கோடி வருடங்கள் என்பது
பகவத் கீதையில் (8.17) கூறப்பட்டுள்ளது. 432 கோடி வருடங்கள் கிருஷ்ணரும்
கோபியர்களும் நடனமாடினர் என்பதை மனிதர்களால் கற்பனை
செய்ய இயலாமல் போகலாம். ஆம்,
அதுவே உண்மை, கிருஷ்ணரின் அதிஅற்புத
சக்தியை யாராலும் கற்பனை செய்ய இயலாது.
திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்பாலினர்
என பலருக்காக நடனமாடும் இன்றைய மக்களால் உண்மையில்
432 நிமிடங்கள்கூட தொடர்ந்து நடனமாட முடியாது
எல்லா
கோபியர்களும் கிருஷ்ணரின் சக்தியே என்பதால், கிருஷ்ணர்
தன்னுடைய சொந்த சக்தியுடன் விளையாடுவதில்
என்ன தவறு? சக்திகள் அனைவரும்
கிருஷ்ணருடைய பிரதிபிம்பம் என்பதால், அவர்களுடன் நடனமாடுவது என்பது கண்ணாடியின் முன்பு
நடனமாடுவதைப் போன்றதாகும்.
மேலும்,
இந்த கோபியர்கள் யாவரும் 432 கோடி வருடங்கள் நடனமாடியதாகக்
கண்டோம். அவர்கள் சராசரி பெண்களாக
இருந்திருந்தால் அத்தகு நடனம் சாத்தியமா?
உண்மையில், அவர்கள் யாரும் பௌதிக
உடலில் கிருஷ்ணருடன் நடனமாடவில்லை. பௌதிக உடலுடன் இத்தனை
கோடி வருடங்கள் ஆட இயலுமா?
கணவன்மார்களை
பிரிந்து கிருஷ்ணரிடம் வந்தது தவறு என்று
நினைப்பவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள்.
கணவன்மார்களுக்குச்
சொந்தமானது மனைவியரின் ஜட உடல்களே. ஆன்மீக
உடல்கள் கிருஷ்ணருக்கு மட்டுமே சொந்தமானவை. கிருஷ்ணருக்குச்
சொந்தமான ஆன்மீக உடலில், கிருஷ்ணருடன்
நடனமாடியவர்களை கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த
கணவனால் உரிமை கொண்டாட முடியும்?
மறுபுறம்
பார்த்தால், கோபியர்களுடன் நடனமாடிய போது கிருஷ்ணரின் வயது எட்டு. எட்டு வயது சிறுவனும்
சிறுமியும் நடனமாடியதில் காமத்தைக் கொண்டு வருவது நியாயமா?
ஆகவே,
ஒருவன் பகவத் கீதை போதனைகளின் படி மக்கள் நடக்கவேண்டும். கிருஷ்ணரின் ரஸா நடனத்தை ஒருவன்
நகல் செய்யக்கூடாது.
கோபியர்களுடனான
கிருஷ்ணரின் தெய்வீக நடனத்தை சாதாரண
மக்களின் காம நடனத்துடன் ஒப்பிடுதல்
அறியாமையின் உச்சகட்டமாகும்.
No comments:
Post a Comment