Tuesday 3 October 2017

'பாகவதம்' என்பது என்ன ?

அது கிருஷ்ணரின் ஸ்ரீமத்-பாகவத புராணத்தை சொல்கிறதா ? இல்லை 
தேவி-பாகவதத்தை சொல்கிறதா ?




பகவான் கிருஷ்ணரின் புகழை பாடும் புராணங்களில் ஸ்ரீமத்-பாகவத புராணம் மிக முக்கியமானதாகும். இது  எல்லாம் உயர்ந்தது என்று எல்லா புராணங்களிலும் குறிப்புகள் உள்ளன.

ஆனால், சில சைவர்கள் புராணங்களில் சொல்கிற 'பாகவதம்' என்பது 'தேவி-பாகவதத்தை' தான் என்கிறார்கள். மேலும், ஸ்ரீ-மத பாகவதம் மஹாபாரத கதையில் உள்ள கருத்துக்களும் வித்தியாசப்படுவதால், இந்த புராணத்தினை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

ஆனால், ஸ்ரீமத்-பகவத் புராணம் பல்வேறு ஆண்டுகளாக வைஷ்ணவர்களால் பெரிதும் மதிக்கப்படுகிற ஒரு புராணமாக ஏற்கிறார்கள். எனவே, அதன் உண்மை தன்மையை பற்றிய ஒரு விளக்கம் இங்கு கொடுத்துளோம்..

இதனை மூன்று வகையான விளக்கங்களை பார்க்கலாம் ...

1) மஹாபாரதத்தில், பரிட்சித் மகாராஜ் என்பவர் ஒரு முனிவரின் சாபத்தினால் 7 நாட்களில் பாம்பு கடித்து இருப்பதாக வருகிறது. இந்த பாகவதம் கூறும் பரிட்சித் கதை இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. அதாவது,முதலில் இவரது கதை மஹாபாரதத்தில், பரிட்சித் தன்னை பாம்பு கடிப்பதிலிருந்து தன்னை பாதுகாக்க ஓர் நீளமான தூண் அமைத்து, அதன் மேல் ஓர் சிறிய அரண் அமைத்து அங்கே காற்று கூட போகமுடியாதபடியான பாதுகாப்பான ஓர் அரண் அமைத்து, அதில் இருந்ததாகவும்  கிறுகிறது.

2)  இந்த கதை பாகவதத்தில் சொல்வது, பரிட்சி 7 நாட்களில் இறப்பதால், அவரது மரணத்திற்கு பயப்படாமல், இந்த 7 நாட்களில் எப்படி இந்த வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றி, பகவானிடம் செல்வது என்பதை பற்றிய, தகவல்களை சுகதேவ கோஸ்வாமி முனிவரின் மூலம் ஸ்ரீமத் பகவத்தினை, இந்த ஏழு நாட்கள் கேட்டு முக்தியடைத்ததாக கூறுகிறது.

இதனை நாம் எப்படி அணுகவேண்டுமென, ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி மற்றும் விஸ்வநாத சக்ரவர்த்தி தாக்குறார் என்பவர்கள் கூற்றுப்படி, பொதுவாக புராணங்கள் பற்பல கல்பங்களுக்கு (யுகங்களுக்கு) ஏற்ப மாறுபடுகிறது என்கிறார்கள். அதனாலே தான் இந்த பரிட்சின் கதை மஹாபாரதத்தில் ஒரு விதமாகவும், பாகவதத்தில் வேறு விதமாகவும் சொல்கிறது. ஆனால், இரண்டுமே உண்மைதான். அதாவது இவைகள் இரண்டுமே வேறு வேறு கல்பத்தில் (யுகங்களில்) நடந்தவைகள், அதனாலே தன இந்த வித்யாசங்கள் என்கிறார்.

இரண்டாவதாக ஒவ்வொரு புத்தகத்தின் ஒரு குறிப்பிட்ட கவனம் உள்ளது. அதாவது பாகவதத்தில், பகவான் கிருஷ்ணரே உன்னத இறைவனாக மையப்படுத்துகிறது. இதன் நோக்கமும் இதுவே தான். ஆனால், மஹாபாரதத்தில் முக்கியமாக கூறுவது தர்மம்,அர்த்த, காம மற்றும் மோக்ஷம் ஆகியவைகளை மையமாக வலியுறுத்திகிறது. இந்த மஹாபாரதத்தில் கிருஷ்ணரின் பக்தியை மையமாக கூறவில்லை.

3) அடுத்து, மத்வசார்ய தெளிவாக கூறுகிறார், மஹாபாரதம் பல வசனங்கள் இடை சொருகல்களும், மாற்றப்பட்ட வசனங்களும் உடையதாக உள்ளது என்கிறார். எனவே, இதன் உண்மை தன்மையை அறிவது மிக கடினம். 'மஹாபாரத தாற்பரிய நிர்ணய' என்பவர்களால் கூறப்படுவது உண்மை மஹாபாரதம் அழிந்துவிட்டது என்கிறார்கள். எனவே இவர்கள் இந்த மஹாபாரதத்தை, பிற புராணங்களின் மூலம் அதன் உண்மை வாக்கியங்களை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, மத்வசார்ய மஹாபாரதத்தில், திரௌபதி சுயம்வரத்தில் கர்ணன் வந்ததாகவும், வில் வித்தையில் தோல்வி அடைந்ததாகவும் உள்ளன. ஆனால் சில மஹாபாரதங்களில், கர்ணனை, திரௌபதி நிராகரித்ததாக உள்ளன.இப்படி பல வசனங்கள் மாறுபடுகிறது .

BhadarkarOriental Research Institute , இவர்கள் மஹாபாரத்தின் திருத்திய பதிப்பை வெளியிடுவதற்கு, பற்பல புராணங்களின் வாயிலாக இதை சரிசெய்கிறார்கள். எனவே இதுவே உண்மை மஹாபாரதமாக இருக்கும்.


மேலும், புராணங்கள் வரிசைகள் பார்த்தால் பத்ம புராணம் கூறுகிறது 'பாகவத புராணம்' என்று  கூறுகிறது. ஆனால்,சில சைவர்கள் இதை தேவி பாகவதம் என்று கூறுவதுண்டு. ஆனால் அதற்க்கு வாய்ப்பில்லை,ஏனெனில் தேவி புராணமெனில் அதை சத்வ புராணங்கள் பட்டியலிலும், விஷ்ணுவின் 6 புராணங்கள் பட்டியலிலும் வருவதால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. மேலும், அப்படி தேவி புராணமெனில், அந்த பெயரிலேயே இதை கூறியிருக்கலாமே. அதாவது 'தேவி பாகவதம்' என. ஆனால் இப்படி இது கூறவில்லையே !

vaisnavanam naradiyam ca tatha bhagavatam subham
garudam ca tatha padmam varaham subha-darsane
இந்த பாகவதம் புராணம் வைஷ்ணவ புராணம் என்கிறது - பத்ம புராணம்.

பதினெட்டு புராணங்கள் மூணு பிரிவுகளை  பத்ம புராணம் (உத்தர காண்ட  236.18-21) இல்சிவபெருமான்உமா தேவிக்கு சொல்கிறார் ...

" அழகான பெண் (பார்வதி)!, விஷ்ணு, நாரத, பாகவத, கருடன், பத்ம மற்றும் வராக புராணங்கள் நற்குணத்தின் (சத்வ குண) புராணங்கள் என்பதை அறிய வேண்டும். ப்ரஹ்மாண்ட, பிரம்மா வைவர்த்த, மார்க்கண்டேயர், பவிஷ்ய, வாமன மற்றும் பிரம்மா ஆகியவை தீவிர (ரஜோ குண) புராணங்களாக உள்ளன. மத்ஸ்ய, கூர்ம, லிங்க, சிவ, ஸ்கந்த அக்னி ஆகியவை அறியாமை (தமோ குண) புராணங்களாக உள்ளன. "

மேலும்மத்ஸ்ய புராணம் , 290 வது அத்தியாயத்தில் கூறுவது
மத்ஸ்ய புராணம் (53.65, 68-69)

" ஸாத்விக  புராணங்கள் பகவான் ஹரியின்  புகழையும். ரஜோ குண புராணங்கள் பிரம்மா புகழையும், தாமச குண  புராணங்கள் சிவன் மற்றும் அக்னி ஆகியோர்களின் புகழை சொல்கிறது

சாத்வீக புராணங்கள் (உண்மை; தூய்மை): - 
விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம், பத்ம புராணம், வராக புராணம் ஆகியவைகள்.

இதன் படி பார்த்தாலும், இங்கே விஷ்ணுவின் புகழை கூறும் பாகவதம் புராணம் என்பதையே குறிக்கிறது.

மத்ஸ்ய  புறநா  -53.20-22  and அக்னி  புராண (272.6.7)

yatradhikrtya gayatrim vamyate dharma-vistarah
vrtasura-vadhopetam tad bhagavatam istyate

likhitva tac ca yo dadyad dhema-simha-samanvitam
prausthapadyam paurnamasyam sa yati paramam gatim

asta-dasa-sahasrani puranam tat prakirtitam

இதில் தெளிவாக உள்ளது, 'புராணங்களில் உயந்த இடத்திலுள்ளது இந்த பாகவத புராணம், அதில் காயத்ரி மந்திரத்தை துதி, வ்ரதசுர வதம் ஆகியவையும். இது 18000 வசனங்களை உடையது……......... "

இப்படி பாகவதம் புராணம் பற்றி கூறுகிறது. இந்த தகவல்கள் பாகவதத்தில் உள்ளவையே. இது தேவி-பாகத்தை கூறவில்லை .

ஸ்கந்த  புராண  (விஸ்ணு -காண்ட  6.4.3) கூறுகிறது ....

srimad bhagavatasyatha srimad bhagavatah sada
svarupam ekam evasti sac-cid-ananda-laksana

ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவான் ஆகியவை எப்போதும் உன்னத இயற்கையும், நித்யமானதும், முழுமையான அறிவும், பேரின்பமும் கொண்டவை ஆகும்' என்கிறது.

இதில், ஸ்கந்த புராணம் தெளிவாக கூறுகிறது ஸ்ரீமத்-பாகவதம் என்று. எவேறு எந்த புராணத்தையும் ஸ்ரீமத் என்று அழைப்பதில்லை. இதில் பாகவதத்திற்கும், பகவானுக்கும் வேறுபாடில்லை என்றும் கூறுகிறது. எனவே இது ஸ்ரீமத் பகவாதத்தையே சொல்கிறது. சைவர்கள் சொல்வதை போல் இது 'தேவி-பாகவதத்தை' சொல்லவில்லை என்பதை அறியலாம்.

ஸ்கந்த  புறநா - விஷ்ணு காண்டம்  (5.16.40-42, 44,33)  கூறுகிறது ...

sataso 'tha sahasrais ca kim anyaih sastra-samgrahaih
na yasya tisthate gehe sastram bhagavatam kalau
katham sa vaisnavo jneyah sastram bhagavatam kalau
grhe na tisthate yasya sa viprah svapacadhamah
yatra yatra bhaved vipra sastram bhagavatam kalau
tatra tatra harir yati tridasaih saha narada
yah pathet prayato nityam slokam bhagavatam mune
asta-dasa-purananam phalam prapnoti manavah

பாகவத கலியுகத்தில், என்ன பலனளிக்கவில்லை ?நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பிற நூல்களையும் தொகுப்பாகும்? வைஷ்ணவர் என்று இந்த கலியுகத்தில் அடையாளம் காண முடியும்அவர் ஒரு ப்ராஹ்மணர் நிலையாக, அவர் ஒரு தாழ்ந்த குளத்தில் பிறந்தாலும் கூட , நாரதரே! எங்கே எல்லாம் இந்த கலியுகத்தில் பாகவதம் உள்ளதோ, அவர்களுக்கு எல்லா தேவர்களின் கருணையும், பதினெட்டு புராணங்களின் சாரமும் உள்ளது எனலாம்'

இங்கும், வைஷ்ணவர் என்கிற வார்த்தை வருகிறது. அதாவது வைஷ்ணவர்களால் புகழப்படும் புராணம் 'பாகவதம்' ஆகும். எனவே இங்கு கூறுவது 'ஸ்ரீ-மத பாகவத' புராணமே ஆகும். இங்கே சைவர்கள் கூறுவது போல் இது தேவி-புராணம் என உரிமை கொண்டாட முடியாது.

பத்ம  புராண (உத்தர -காண்ட 193.3) கூறுவது .....

puranesu tu sarvesu srimad bhagavatam param
yatra prati-padam krsno giyate bahudharsibhih

'எல்லா புராணங்களில் சிறந்தது பாகவத புராணம், இந்த புராணத்தின் ஒவ்வொரு வரியும் பகவான் கிருஷ்ணரின் புகழையே பாடுகிறது'

இந்த ஒரு வசனமே பொது, புராணங்களில் வரும் 'பாகவதம்' என்கிறது கிருஷ்ணரின் புகழ் பாடும் 'ஸ்ரீ-மத பாகவதம்' கூறுகிறது என்று அறியலாம். இங்கே, சைவர்கள் கூறுவது போல் தேவி-புராணம் என உரிமை கொண்ண்டாட முடியாது .

மேலும், பத்ம  புராண  கூறுகிறது ....

padau yadiyau prathama-dvitiyau trtiya-turyau kathitau yad-uru
nabhis tatha pancama eva sasto bhujantaram dor-yugalam tathanyau
kanthas tu rajan navamo yadiyo mukharavindam dasamam praphullam
ekadaso yas ca lalata-pattam siro’pi yad dvadasa eva bhati
namami devam karuna-nidhanam tamala-varnam suhitavataram
apara-samsara-samudra-setum bhajamahe bhagavata-svarupam

'பகவாதத்தின், முதல் மற்றும் இரண்டாவது காண்டங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களாகவும், மூன்றாவது மற்றும் நான்காவது காண்டங்கள் அவரது தொடையாகவும்ஐந்தாவது காண்டம் அவரது தொப்புள், ஆறாவது காண்டம் அவரது மார்பு, ஏழாம், எட்டாம் காண்டங்கள் அவரது கைகள், ஒன்பதாவது காண்டம் அவரது தொண்டை. பத்தாவது காண்டம் அவரது அழகான தாமரை முகம். பதினோராம் காண்டம் அவரது நெற்றி, பனிரெண்டம் காண்டம் அவரது தலையாகவும் உள்ளன' என்கிறது .

இந்துவும் கிருஷ்ணரின் புகழை கூறுவதால் 'ஸ்ரீமத்-பகவாதத்தையே சொல்கிறது. சைவர்கள் சொல்வது போல் இந்த வார்த்தை 'பாகவதம்' என்பது 'தேவி-பாகவதத்தை' குறிக்கவில்லை என அறியலாம்.

கருட  புராண  கூறுகிறது

artho ’yam brahma-sutranam bharatartha-vinirnayah
gayatri-bhasya-rupo ’sah vedartha-paribrmhitah
grantho ’stadasa-sahasrah srimad-bhagavatabhidhah

'பாகவத புராணம், பிரம்ம சூத்திரத்தின் அங்கீகரிக்கப்பட்ட விளக்கம், மற்றும்  மகாபாரதத்தின் விரிவான விளக்கம் உள்ளது. அது காயத்ரி-மந்திரம் விரிவாக்கம் மற்றும் அனைத்து வேத அறிவு. இந்த பாகவத சாரம், பதினெண்ணாயிரம்பேரைத் வசனங்கள் உள்ளடக்கிய அனைத்து வேத இலக்கிய விளக்கம். "

எனவே, இதன் முடிவாக நாம் அறிவது என்னவெனில் ....

1. பரீட்சித்தின் மஹாபாரத கதையும், பாகவத பரீட்சித் கதையும் பல வேறுபாடுகள் உள்ளன என்று அறியலாம். இதற்க்கு கரணம் ...

2. மஹாபாரதம் பல இடை சொருகல்களும், பல வசனங்கள் சேர்த்தும், அழியும் உள்ளதால். இதன் உண்மையை அறிவது கஷ்டம் என ''மஹாபாரத தாற்பரிய நிர்ணய' என்பவர்களால் கூறப்படுவது உண்மை மஹாபாரதம் அழிந்துவிட்டது என்கிறார்கள்.

3. அடுத்து, யுக-பேதம், அதாவது ஒவ்வொரு யுகத்திற்குமான புராணங்களும், அதன் நிகழ்வுகளும் மாறுபடும் என்கிறது சாஸ்திரங்கள். எனவே, நம்முடைய தற்கால பாகவத புராண கதைலுள்ள பரீட்சித்தின் கதை, வேறு யுகங்களில் நடந்தவையாக இருக்கிறது . எனவே, தான் இந்த மஹாபாரதத்திற்கு வேறுபடுகிறது.


4. பல புராணங்களில் வரும் 'பாகவதம்' என்கிறது வார்த்தை,எல்லா புராணங்களிலும் கிருஷ்ணர், விஷ்ணு தொடர்புடைய இடங்களில் வருவதால் இது கிருஷ்ணரின் புகழ் பாடும் 'ஸ்ரீமத்-பகவத்' புராணத்தை தான் கூறுகிறது என்பதை மேலே ஆதாரதோடு பார்த்தோம். எனவேசைவர்கள் சொல்வது போல் தேவி-பகவாதத்தினை கூறவில்லை.

1 comment: