Thursday, 5 October 2017

இந்து என்கிற  வார்த்தை எப்போது வந்தது ?


எங்களது தர்மம் 'சனாதன தர்மம்' தான்.

இந்து என்பது ரிக் வேத ரிஷிகள் பாரத தேசத்தை சேர்ந்தவர்களை அழைத்த ஒரு  பெயர் தான் ஸிந்து . அதாவது ஸிந்து நதியை மையமாக வைத்து வந்த பெயர் ! இது மக்களை குறிக்கும் ஒரே பெயர் ! ஆனால் அவர்களது வேத தர்மத்தை  குறிப்பிடும் பெயர் "சனாதன தர்மமே"

ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது. சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன.

 இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலும், ஆகமங்களிலும் உள்ளன.

விஷ்ணு புராணம், பத்ம புராணம் மற்றும் பிரஹஸ்பதி சம்ஹிதா  ஆகியவற்றில் இருந்து பின்வரும் வசனம் கூறுகிறது ..


ஆஸிந்தோ ஸிந்து பர்யந்தம் யஸ்ய பாரத பூமிகாஹ்
மாத்ரூபூஹ் பித்ருபூச்சைவ வை ஹிந்து ரித்திஸ்ம்ரிதாஹ்


சப்த சித்துவுக்கும் இந்திய பெருங்கடலுக்கும் இடையில் பாரத பூமி நிலத்தை அவரின் தாய்நாடு மற்றும் தந்தையர் எனக் கருதுகிற எவரும் இந்துவாக அறியப்படுவர் "

இங்கே பாரத பூமி என்பது இந்தியாவின் உண்மையான பண்டைய புராணத்திலுள்ள பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "பூமி" என்றால், புவியின் பொருள், பாரத தேசம், பாரத வர்ஷா, இந்தியாவின் நிலம். இதை  புராணங்கள், மகாபாரதம் மற்றும் பிற வேத நூல்களில் ஏராளமான வேத குறிப்புகளில் இந்திய பரவலாக பாரத வர்ஷா அல்லது பரத தேசம் மற்றும் இந்துஸ்தான் என குறிப்பிடப்படுகிறது.

  
ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் |
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே || - (பிரஹஸ்பதி ஆகமம்)


கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது.”  இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.

  
Rig Veda (Nadistuti Sukta नदिस्तुति सूक्त, X.75)


ஹிந்து என்பதன் அர்த்தம் ஹிம்சையில் துய்ப்பவன் அடுத்தவர் படும் கஷ்ட்டத்தை ஹிம்சையை தான் படுவதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து.

இதை ரிக் வேத ஸ்ருதி வாக்கியத்தின் வாயிலாக அறியலாம்.
"ஹிம்சைச துய்யதாம்ய -ஹிம்துனே அக்ஷகம்""

ப்ருஹஸ்பதீய சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்கிற சொல் குறிக்கப்பட்டுள்ளதோடு அதற்க்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன ...

"ஹிம்ஸாயா தூயதே  யஷ்ச ஸதாசரண தத்பர:
வேத, கோ, ப்ரதிமா  ஸேகி ஹிந்து முகவர்ணபாக்"
(புத்த ஸ்ம்ருதி கி.மு. 4ம் நூற்றாண்டு)

பொருள்: யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து'

"ஹிமாலயாத் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தாத்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரஷாத"

                             (ப்ருஹஸ்பதீய ஆகமம் கி.மு. 4ம் நூற்றாண்டு)

பொருள்: ஹிமாலாயம் முதல் ஹிந்து மஹாசஹரம் வரை பரந்து கிடைக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம்  என அழைக்கப்படுகிறது.


" ஜானுஸ்தானே  ஜைன ஸப்த ஸப்த சிந்துஸ் ததைவ :
ஸப்த ஹிந்துர்யாவனீய  புனர்நேயா  குருண்டிகா: "

                                                ( பவிஷ்ய  புராணம் கி.மு. 4ம் நூற்றாண்டு)
பொருள்: '' என்கிற எழுத்து யவனர்கள் (கிரேக்க முதலானவர்கள்பாஷையில் 'ஷா' என்று திரிகிறதுஎனவே தான் 'ஸப்த ஸிந்து' என்கிற வாக்கியம் 'ஷப்த' ஹிந்து என் மாறியது'.

  
சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.


ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன.
 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர்தாசர், குருநானக், தாதூ தயால், நாபா தாசர் ஆகிய பக்தி இயக்கக் கவிஞர்களின் பாடல்களில் ஹிந்து, துரக் ஆகிய சொற்கள் முறையே இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் பயின்று வந்துள்ளன. பாரதத்தின் கிழக்குப் பகுதியான வங்கத்தைச் சேர்ந்த தர்க்க சாஸ்திர நூல் ஒன்றில்….

சிவ சிவா, அவன் ஹிந்துவும் அல்ல யவனனும் அல்ல
(சிவ சிவ ஹிந்துர் யவன:) என்ற சொற்றொடர் காணப் படுகிறது.

தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில்ஹிந்து ராய ஸுரத்ராணஎன்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது.

ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில்ஹிந்துஸ்தான் பளாவலேம்போன்ற வரிகள் உள்ளன.

இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம்ஹிந்து பதபாதசாஹிஎன்றே தன்னை அழைத்துக் கொண்டது.

ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்
என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.

தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே முதன் முதலில் ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது.

சீக்கிய குருமார்களின் பல பாடல்களில் தங்களது அற நெறியை ஹிந்து தர்மம் என்று குறிப்பிடுகின்றனர். குரு தேக்பகதூர் அவர்களை இஸ்லாமிய மத அதிகார வர்க்கம் அச்சுறுத்திய போது, அவர்
என்னுடையது ஹிந்து தர்மம்; உயிரினும் மேலாக இதை நேசிக்கிறேன்
(uttar bhanyo dharam ham hindu, ati priyako kima kare nikandu) என்று பதிலிறுத்தார்.

சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு காலசா என்று பெயரிட்ட குரு கோவிந்த சிங் (1666 – 1708) அந்தப் பிரகடனத்தையே ஹிந்து என்ற சொல்லால் அலங்கரிக்கிறார்
sakal jagat mein khAlsA panth gAje
jAge dharam hindu sakal bhaND bhAje

பற்றி பவிஷ்ய புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது
சம்ஸ்க்ருதஸ்யைவ வாணீ து பாரதம் வர்ஷமுஹ்யதாம் |
அன்யே கண்டே கதா ஸைவ ம்லேச்சா ஹ்யானந்தினோபவன் ||
ஜாதுஸ்தானே ஜைனசப்த: ஸப்தஸிந்துஸ் ததைவ |
ஹப்தஹிந்துர் யாவனீ புனர்க்ஞேயா குருண்டிகா ||

-          பவிஷ்ய புராணம், பிரதிஸர்கபர்வம், 5ம் அத்தியாயம்

ஹிந்து தர்மம் வாழ்வதற்காகவும், பொய்மைகள் அனைத்தும் அழிவதற்காகவும் சம்ஸ்கிருத பாஷை அன்னிய பிரதேசங்களில் அங்கு வாழ்வோரையும் இன்புறச் செய்யுமாறு யாவனீயாக, மிலேச்ச வாணியாக மாறுவது
  
இவ்வாறு, கி.மு.4ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த சனாதன தர்மத்தை பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
  
எனவே, இந்து என்கிற பெயர் ரிக் வேத முனிவர்களால் பாரத தேச  மக்களை அழைத்த பெயர் என அறியலாம், ஆனால் இந்த மக்கள் கடைபிடித்து "சனாதன தர்மம்".  நாளடைவில் பாரத மக்களை குறிப்பிடும் இந்து என்கிற பெயர், வேத மதத்தை கடைபிடிக்கும்  மக்களையும் 'இந்து' என அழைக்க ஆரம்பித்தார்கள்.

எனவே, உண்மையான வேத பெயர் ' சனாதன தர்மமே" !

தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II

-மஹாபாரதம் - 3.48-267

வேத தர்மமான ஸநாதன தர்மத்தின் ஸர்வ வல்லமை மிக்க  கடவுள் ஸ்ரீமந் நாராயணனே / கிருஷ்ணரே!

2 comments:

  1. மராட்டிய மன்னன் சிவாஜியின் அரசு,
    வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.
    என்று கூறியுள்ளீர்கள்... இது தவறு.

    ReplyDelete
  2. மிகவும் அற்புதமான, அருமையான பதிவுகள். நன்றி. ஹரேகிருஷ்ணா.

    ReplyDelete