Monday 2 October 2017

கிருஷ்ணர் கோபியர்கள் ஆடைகளை திருடுதல் சரியா ?



முதலாவதாக, இந்த சமயத்தில் கிருஷ்ணரின் வயது வெறும் 7 தான், அந்த வயதில் ஒரு சிறுவனுக்கு காம உணர்வு ஏற்படுவதில்லை .

இப்படி 7 வயதுடைய கிருஷ்ணரும், 7 வயதுடைய கோபிகை சிறுமிகளும் செய்தது காமம் இல்லை. இது ஒருவகை குறும்பு தான் .

கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையில் மயங்கியே கோபியர்கள் அவரை தேடி வந்தனர். இதில் எந்த வித காமமும் இல்லை. அப்படி எந்தவித குறிப்பும் உண்மையில் இல்லை.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சிறுவயது முதல் தனது பக்தர், பக்தைகளுடன் பல லீலா வினோதங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றுல்  கோபிகா வஸ்திராபரணம், ராஸலீலா நடனம் .

இந்த லீலையை செய்யும்போது கிருஷ்ணருக்கு வயது ஏழு. அதை பாலபருவம் என்போம். அப்பருவத்தில்  பாலியல் எண்ணமோ தோன்றுவது அசாத்தியம். கிருஷ்ணர் குறும்புக்காரர் அவர் எதை செய்தாலும் அதில் குறும்புகளிருக்கும். அது லீலைகளாக இருந்தாலும் சரி, சம்ஹாரங்களாக இருந்தாலும் சரி. ஆகவே இதை மேலாட்டமாக பார்த்துவிட்டு அதை காமம்சாரந்ததாக பாவித்தால் அவர்களைவிட காமாந்தகர்கள் உலகில் இல்லை.

கோபியர்கள் தன் அன்பினால் கண்ணனை  அடைய பாவை நோன்பு நோற்றனர். துர்க்கை உருவத்தை வைத்து காத்யாயனி விரதம் நோற்றனர்.

அந்நேரத்தில் ஒரு குழலோசை. உடனே அது வெளிவர அவர்களின் ஆடைகளை காணவில்லை. உடனே கோபியர் வேணுகாணம் வந்த திசையை நோக்க மரத்தில் அமர்ந்துகொண்டு ஆடைகளை மரக்கிளைகளை தொங்கவிட்டுகொண்டிருந்தான். உடனே கோபியர்கள் தன் உடலை மறைத்துகொண்டு கண்ணா! உன்னை நம்பியவருக்கு இதுவா கதி? உன்னை தவிற வேறொன்றுமஎ தேவையில்லை என்று உன்னை சரணடைந்தவரை இப்படியா நடத்துவாய் என்று கேட்கலானர்.

உடனே கிருஷ்ணர் கூறுகிறார்"காத்யாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நிர்வாணமாக நீராடலாமா? இது வருண பகவானின் கோபத்திற்குள்ளாகும் செயல் என்று தெரியாதா என்று கேட்டான். கோபியர்கள் தவறை உணர்ந்து மெளனித்தனர். மேலும் கூறலானான் கண்ணன் "என்னை தவிற வேறு ஏதும் முக்கியமில்லை என்று கூறிய நீங்கள் ஆடையின்றி வெளியே வருவது எப்படி? " என்கிறீர்களே. எனில் உங்களுக்கு தேகாபிமானம் தானே முக்கியம். உலகப்பற்றையும் உடல்பற்றையும் விட்டவர்கள்தானே என்னை அடையமுடியும். என்னை தவிர்ந்த எந்த பற்றுகொண்டாலும் அது மோக்ஷ தடை என்றான் மாயக்கண்ணன்.

அவனது உபதேசத்தை கேட்ட கோபியர் தனஎ தவறை உணர்ந்து தேகாபிமானத்தை விட்டு கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்து இரு கரங்களையும் தூக்கி அவனை துதிபாடலாயினர். கலங்கமற்றதும், அற்ப ஆசை அற்றதுமான கோபியர் பக்தியில் குளிர்ந்த கண்ணன் அவர்களுக்கு ஆடையை அளித்து மறைந்தான். இதுவே வஸ்திராபரண கதை.

கோபியர்களுக்கு பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னை சரணடைந்தாரை காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த "கோபிகா வஸ்திராபரணம்" நடத்தினார்.

இதில் ஏதாவது காமாந்தகமோ, ஆபாசமோ உண்டா? இல்லை. மஹாபாரதத்தில் திரெளபதியின் துகிலை துச்சாதனன் உரித்தபோது தன் மானத்தை பற்றி கவலைகொள்ளாமல் எல்லாம் அவனே! என்று கைகளை உயர்த்தி வணங்கி ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்என்று துதிபாட பற்றற்ற பக்தியின்காரனமாக அவளை காப்பாற்றினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.ஆக இது காமம் சார்ந்த விடயம் என்பது பேரபத்தம்

பொதுவாக, பகவத் கீதை போதனைகளின் படி மக்கள் நடக்கவேண்டும். கிருஷ்ணரின் ரஸா நடனத்தை ஒருவன் நகல் செய்யக்கூடாது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் கையால் தூக்கியது, பூதனை அரக்கி வதம் இப்படி பல அற்புத செயல்கள் அசாதாரணமானவை என்பதில் சந்தேகமில்லை. அதுபோலவே, ரஸா நடனமும் வழக்கில்லாத ஒரு நிகழ்ச்சி. எனவே சாதாரணமானவர்கள் இது போல் செய்ய நினைப்பது ஒரு முறையில்லாத செயலாகும்.

கோபியர்கள் முந்தய பிறவிகளில் வேத விற்பனர்களான மஹான்களாக இருந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் கிருஷ்ணர், போன யுகத்தில் அவர் 'ராமராக இருந்த பொது அவரின் அழகில் மயங்கி அவரையே கணவனாக அடைய வேண்டுமென நினைத்த பெண்களே அவர்கள். அப்போது, ராமரே அவர்களுக்கு அடுத்த யுகத்தில் கிருஷ்ணராக வந்து இந்த விருப்பத்தினை பூர்த்தி செய்ய வரமளித்தார். இவர்களே, கோபியர்களாக வந்து 'துர்கா' தேவியை வழிபட்டு கிருஷ்ணர் கணவனாக வரவேண்டுமென விரதமிருந்தனர். கோபியர்கள் ஏற்கனவே அளிக்கப்பட்ட வரத்தின்படி அவர் நடந்து கொண்டார்.


கீதையில் கூறப்பட்டது 'தம் செயல்களில் விளைவுகளை கிருஷ்ணர் அனுபவிப்பதுமில்லை, அவைகளால் அவர் துன்புறுவதுமில்லை' என்கிறார். எனவே அதர்மமாக நடப்பது அவருக்கு சாத்தியமல்ல, அவர் தர்மங்களையும், செயல்க்ளையும் கடந்தவர். ஜட இயற்கையின் குணங்கள் அவரை தொடுவதில்லை. எல்லா உயிர்களுக்கும் அவரே ஆளுநர். எனவே தர்மம், அதர்மம் என்பனவெல்லாம் அவருக்கு பொருந்தாது. ஒவ்வொருவரின் உடலிலும் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறார். எனவே, அவர் ஒருவரை பார்த்தாலோ,தழிவி கொண்டாலோ அது முறைதவறியதாகாது.

1 comment: