சூரியனுக்கும், குந்திக்கும் பிறந்தவனா கர்ணன்..?
முதலில் சனாதன தர்மத்தில் இதை தெரிஞ்சுக்குங்க...
எல்லா பௌதீக உலகங்களும் இறைவனின் கட்டளைபடி பல தேவர்களால் பராமறிக்கபடுகிறது்.
அதாவது சூரியனை பராமரிக்க சூரியதேவன், மழைக்கு வருணன்,.....இபபடி எல்லாவற்றிக்கும் உள்ளன.
இந்த சூரியதேவனது வரத்தினால், இவர்கள் தங்களது ஆன்ம வடிவில் இணைந்து, அவளை தொடாமலேயே அவரது சக்தியினால் தனது அம்சமான கர்ணனை உடனடியாக ஒரு குழந்தையாக கொடுத்தார்.
பஞ்ச பாண்டவர்கள் பற்பல தேவர்களின் முலமே பிறக்கிறார்கள். இது சாதாரண மக்களாகிய நமக்கு பொருந்தாது. அப்படி இந்த காலத்திலேயும் பற்பல தேவர்கள் முலம் பிறக்க சாத்தியமில்லை. மேலும், குந்திக்கு இப்படி பிறக்கும் குழந்தையினால், அவளது கற்புக்கு எந்த வித களங்கங்களும் ஏற்படாது. அதாவது இது தேவர்களின் செயல்
குந்திபோஜனின்
இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்திக்கு
மந்திரத்தை வரமளித்தார். பின் குந்தி, துர்வாசரின் மந்திரத்தைச் சோதித்து பார்க்க; சூரியன் தேவன் வந்தான்.
பின் இவர் குந்திக்கு ஒரு குழந்தையை கொட்டுகிறார். இந்த குழந்தையே கர்ணன்; இப்படி குந்தி 5 தேவர்களின் அருளால், இவளது
கற்பதில் அவர்களது குழந்தை உருவாகியது. (அதற்காக அவளை தொடடு அனுபவித்து தான் குழந்தை
பிறக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை )
கர்ணன் பிறப்பு பற்றி மஹாபாரததம் - சூரியதேவன், குந்தியிடம் கூறுவது....
"ஓ இளவரசி, இந்தக் காரியம் உனக்குப் பாவத்தைக் கொடுக்காது, எனக்காக, இந்த எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" என்றான். குந்திபோஜனின் மகளிடம் இப்படிச் சொல்லி உலகத்தை ஒளியூட்டும் அந்தச் சிறப்புமிக்கத் தபனன், அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். இந்தத் தொடர்பால், உடனடியாக ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தை இயற்கையான கவசத்துடனும், முகத்தைப் பிரகாசிக்க வைக்கும் காது குண்டலங்களுடனும் இருந்தது. அந்த மகனே கர்ணன் என்றும். அந்த வீரன் கர்ணன் ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையானவனாக இருந்து, நற்பேறு அருளப்பட்டு, தேவலோகக் குழந்தை போல அழகுடன் இருந்தான்.
-
மஹாபாரதம்,
‘பிறந்தான் கர்ணன்’ - ஆதிபர்வம் பகுதி 111, வசனம் -17-19
‘குழந்தை பிறந்த பிறகு, அந்தச் சிறப்பு மிகுந்த தபனன் பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னித்தன்மையைத் திரும்பக் கொடுத்து விண்ணேகினான்.’ - ஆதிபர்வம் பகுதி 111, வசனம் -20
இவர்கள் தங்களது ஆன்ம வடிவில் இணைந்து, உடனடியாக குழந்தையை கொடுத்தார்கள். இது தேவர்களால் மட்டுமே தான் முடியும். ஒரு சாதாரண மனிதர்களால் இப்படி செய்ய முடியாது.
எனவே, இதன் மூலம் நாம் அறிவது புராண காலத்து மக்களை, தற்கால சாதாரண மக்களுடன் ஒப்பிடுவதே தவறானது. ஏனெனில், சாதாரண மனிதர்களால் இப்படிப்பட்ட செயல்களை செய்ய முடியாது.
No comments:
Post a Comment