Friday 12 January 2018

பஞ்ச-பாண்டவர்கள்ஐந்து தேவர்களுக்கும் - குந்திக்கும் பிறந்தவர்களா  ?




முதலில் சனாதன தர்மத்தில் இதை தெரிஞ்சுக்குங்க...


எல்லா பௌதீக உலகங்களும் இறைவன பகவான் நாராயணரின் கட்டளைபடி பல தேவர்களால் பராமறிக்கபடுகிறது். அதாவது சூரியனை பராமரிக்க சூரியதேவன், மழைக்கு வருணன்,.....இபபடி எல்லாவற்றிக்கும் உள்ளன.

இந்த 5 தேவர்களான (யமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி-குமாரர்கள்) ஆகியோரின் வரத்தினால், இவர்கள் தங்களது ஆன்ம வடிவில் இணைந்து, அவளை தொடாமலேயே தேவர்களின் சக்தியினால் தனது அம்சமான தர்மர்,பீமன்,அர்ஜுனன்,நகுலன் & சகாதேவன் ஆகியோர்களை உடனடியாக ஒரு குழந்தையாக கொடுத்தார்.


எனவே, இந்த பஞ்ச பாண்டவர்கள் பற்பல தேவர்களின் முலமே பிறக்கிறார்கள். இது சாதாரண மக்களாகிய நமக்கு பொருந்தாது. அப்படி இந்த காலத்திலேயும் பற்பல தேவர்கள் முலம் பிறக்க சாத்தியமில்லை. மேலும், குந்திக்கு இப்படி பிறக்கும் குழந்தையினால், அவளது கற்புக்கு எந்த வித களங்கங்களும் ஏற்படாது. அதாவது இது தேவர்களின் செயல்

குந்திபோஜனின் இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்திக்கு மந்திரத்தை வரமளித்தார். பின் குந்திதுர்வாசரின்  மந்திரத்தைச் சோதித்து பார்க்க இந்த குழந்தைகளை பெறுகிறாள்.

மஹாபாரதத்தில், குந்தி பஞ்ச-பாண்டவர்களை எப்படி பெறுகிறாள் என இங்கே பார்க்கலாம்....



முதலில், தருமரை குந்தி பெறுகிறாள்.

மஹாபாரதம்,. ஆதிபர்வம் பகுதி 123

வைசம்பாயனர் சொன்னார், " ஜனமேஜயா! காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2)

தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, " குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்?" என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, "நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்" என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)
அறம்சார்ந்த மகனை {யுதிஷ்டிரனை} அடைந்த பாண்டு, மறுபடியும் தனது மனைவியிடம்,(9,10)


அடுத்து , வாயு தேவனின் அருளால்,  குந்தி பீமனை பெறுகிறாள்.:

"க்ஷத்திரியர்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையெனின் அவன் க்ஷத்திரியன் இல்லை என்பது ஞானமுள்ளோர் தீர்மானம். எனவே, ஒரு பெரும் பலம் நிறைந்த குழந்தையைக் கேட்பாயாக" என்றான். இப்படித் தனது தலைவனால் {பாண்டுவால்} பணிக்கப்பட்ட குந்தி வாயு தேவனை அழைத்தாள்.(11) இப்படி அழைக்கப்பட்ட அந்தப் பெரும் வலிமை கொண்ட காற்றுத் தேவன் {வாயு}, மானை வாகனமாகக் கொண்டு அவளிடம் வந்து,

" குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்? உனது இதயத்தில் இருப்பதை என்னிடம் சொல்வாயாக" என்று கேட்டான்.(12) அவள் அடக்கத்துடன் புன்னகைத்து, " தேவர்களில் சிறந்தவரே, எனக்குப் பெரிய உடலுறுப்புகளும் பெரும் பலமும் கொண்டு, அனைவரின் செருக்கையும் சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு பிள்ளை வேண்டும்" என்று கேட்டாள்.(13)

அந்த வாயு தேவன், பிற்காலத்தில் பீமன்[3] என்று அழைக்கப்பட்டவனும், வலிமையான கரங்களும், முரட்டுத்தனமான ஆற்றலை கொண்டவனுமாக ஒரு குழந்தையை அவளிடம் பெற்றான். பாரதா! அந்தக் குழந்தை பிறந்ததும், முன்பைப் போலவே ஓர் அசரீரி,(14)

அடுத்து , பின் பல தவங்களுக்கு செய்து, இந்திரனின் அருளால்குந்தி அருஜுனனை பெறுகிறாள்:

அதன்பின்பு, குருக்களின் மன்னனான பாண்டு, பெரும் முனிவர்களுடன் ஆலோசனை செய்து, குந்தியை ஒரு முழு வருடத்திற்கு நோன்பிருக்கக் கட்டளையிட்டான்.(25) பாரதா, அதே நேரத்தில் அவனும் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவமும், நோன்பும் செய்யத் தொடங்கினான்.(26) காலையிலிருந்து மாலை வரை மனத்தை ஒருமுகப்படுத்தித் தேவர்களின் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக கடும் தவத்தைச் செய்தான். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திரன் பாண்டுவை அணுகி,(27) அவனிடம்,

" மன்னா! மூவுலகத்தாலும் கொண்டாடப்படும் மகனை நான் உனக்குத் தருவேன். அவன் பிராமணர்கள், பசுக்கள் மற்றும் நேர்மையான மனிதர்களின் நலனைக் காப்பான்.(28) நான் உனக்குக் கொடுக்கும் மகன், தீயவர்களை அழித்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பான். அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனாக இருந்து, எந்த எதிரிகளாலும் வென்றிட இயலாதவனாக இருப்பான்" என்றான்.(29)

வாசவனால் (தேவர்கள் மன்னனால் {இந்திரனால்}) இவ்வாறு சொல்லப்பட்ட குரு பரம்பரையின் அறம்சார்ந்த மன்னன் {பாண்டு}, அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, குந்தியிடம்,(30) " நற்பேறு பெற்றவளே, உனது நோன்பு வென்றது. தேவர்களின் தலைவன் மனநிறைவை அடைந்து, உனது விருப்பத்தைப்போலவே, தெய்வீக சாதனைகளையும் பெரும் புகழையும் அடையப் போகும் மகனை உனக்குக் கொடுக்க விரும்புகிறான்.(31)

அந்த மகன் அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவனாகவும், பெரும் ஞானமுள்ளவனாகவும் இருப்பான். பெரும் ஆன்மாவைக் கொண்டவனாகும், கதிரவனுக்கு நிகரான பிரகாசத்துடன் கூடியவனாகவும், போர்க்களத்தில் நிகரற்றவனாகவும், பெரும் சாதனைகளைச் செய்பவனாகவும் அவன் இருப்பான். அவன் பேரழகனாகவும் இருப்பான். அழகிய இடையும் இனிய புன்னகையும் கொண்டவளே, தேவர்களின் தலைவன் உன்னிடம் கருணை கொண்டிருக்கிறான். அவனை அழைத்து, க்ஷத்திரிய அறங்களுக்கு இருப்பிடமான மகனைப் பெறுவாயாக" என்றான்.(32,33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்தக் கொண்டாடப்படும் குந்தி, தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், சக்ரனை (தேவர்களின் மன்னன்) அழைத்தாள். அப்படி அழைத்ததால், அவன் அவளிடம் வந்து, அர்ஜுனன் என்று பின்பு அழைக்கப்பட்டவனை அவளிடம் பெற்றான்[5].(34)



கடைசியாக  , அஸ்வினி தேவர்களின் அருளால்குந்தி நகுலன் & சகாதேவனை பெறுகிறாள்’  - ஆதிபர்வம் பகுதி 124

தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட குந்தி, அதற்குச் சம்மதித்து மாத்ரியிடம், "நேரத்தையிழக்காமல், தேவர்களில் எவரையாவது நினைப்பாயாக. அவர் மூலமாக, அவரையே போன்ற பிள்ளையை நீ நிச்சயம் பெறுவாய்" என்றாள்.(15)

மாத்ரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அசுவினி இரட்டையர்களை நினைத்தாள். அந்த அசுவினிகள் வேகமாக அவளிடம் வந்து, பூலோகத்தின் ஒப்பற்ற அழகர்களான நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களைப் பெற்றனர். அவர்கள் பிறந்த போது ஓர் அசரீரி,(16,17)

"சக்தியிலும், அழகிலும் இந்த இரட்டையர்கள், அசுவினி இரட்டையர்களைக் காட்டிலும் மேலானவர்களாக இருப்பார்கள்." என்றது. அக்குழந்தைகள் பெரும் சக்தியும், அழகும் கொண்டு, அந்த மொத்தப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்தனர்.(18)

மன்னா! அந்தப் பிள்ளைகள் பிறந்த பிறகு, அந்த நூறு சிகரம் கொண்ட மலையில் வசித்த முனிவர்கள் அவர்களை வாழ்த்தி, அவர்களது பிறப்பிற்கான முதல் சடங்கைச் செய்து, அவர்களுக்கான பெயர்களைச் சூட்டினர்.(19)

குந்தியின் மக்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் என்றும், இரண்டாமவன் பீமசேனன் என்றும், மூன்றாமவன் அர்ஜுனன் என்றும்,(20) மாத்ரியின் மக்களில் முதலில் பிறந்தவன் நகுலன் என்றும் அடுத்தவன் சகாதேவன் என்றும் அழைக்கப்பட்டனர்[1]. {அந்தப் பிராமணர்கள் இவ்வாறே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்.(21)


இவர்கள் தங்களது ஆன்ம வடிவில் இணைந்து, உடனடியாக குழந்தையை கொடுத்தார்கள். இது தேவர்களால் மட்டுமே தான் முடியும். ஒரு சாதாரண மனிதர்களால் இப்படி செய்ய முடியாது.


எனவே, இதன் மூலம் நாம் அறிவது புராண காலத்து மக்களை, தற்கால சாதாரண மக்களுடன் ஒப்பிடுவதே தவறானது. ஏனெனில், சாதாரண மனிதர்களால் இப்படிப்பட்ட செயல்களை செய்ய முடியாது.


No comments:

Post a Comment