தமிழ் 60 வருடங்களாக -
பிரபவ - விபவ... என்பது என்ன ?
இந்துமதத்தில் உள்ள 60வருட தமிழ் மாதங்கள்
என்பதை பற்றி நாத்திகவாதிகள் கூறும் பொய் கதைகளும், அதன் உண்மைகளையும் நாம் இங்கே பார்க்கலாம்
அதாவது நமது 60 வருட தமிழ் மாதங்களான பிரபவ
- விபவ என ஆரம்பித்து 60 வருடங்கள் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்த மாதங்கள் எல்லாமே
புராணங்களில் கூறிய கதைகளை வைத்தே வருகிறதாக கூறுகிறார்கள். அதாவது, கிருஷ்ணரும் -நாரதர்
பெண்ணாக உருமாறி இணைத்து, இவர்களது குழந்தைகளே இந்த 60 வருட தமிழ் மாதங்கள் என ஒரு
கதையை சமணமதத்தின் ஒரு நூலான 'அபிதான சிந்தாமணி' என்பதிலிருந்து கூறுகிறார்கள். இதன்
உண்மைகள் இங்கே பார்க்கலாம்...
ஆனால்,
இந்தக் கதையின் மூலம்,இந்துமத நூலான பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது.
அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை
என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான்
விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி
எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன்,
அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை
மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன.
அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து
விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி
தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன்,
பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.
இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம்
என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன.
இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை
என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம்.
இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்.
அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள்
என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக்
குழந்தைகளும் இறந்து விடுகின்றன
இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து
உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும்.
இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம்
என்பது தெரியாமல் இருக்கிறோம்.
அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத்
தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.
நாத்திகவாதிகள்
கூறும் கதை எதிலிருந்து ?
நாத்திகவாதிகள்
கூறும் கதை எந்த புராணத்திலும், மகாபாரதத்திலும் எங்கேயும் இல்லை. ஆனால், இந்த வகை
கதை ஒரு சமண சமயத்தை சார்ந்த ஒருவர் பல காலங்களுக்கு முன்பு கூறிய ஒரு உவமை 'நிகண்டு'
வகையை சார்த்த கதை. இதற்க்கு எந்த ஆதாரபூர்வமாக விளக்கமும் வேத சாஸ்திரத்தில் இல்லை
என்பதே உண்மை.
இதை
'அபிதானசிந்தாமணி' என்னும் நூலில், ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம்
நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.
இது
ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும்
அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல.
ஒரு
அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால்,
அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள்,
தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள்
பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர்.
மேற்சொன்ன
விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது. மேற்கூறிய விளக்கத்தை,
நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம்
புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு
இந்துமதத்தில் இல்லாத ஒருவரது நூலை வைத்து இந்த நாத்திகவாதிகள் நாரதர்-விஷ்ணு கதையையும்,
அதனால் வந்த 60 தமிழ் வருடங்கள் கதையும் பொய் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete