Friday, 12 January 2018

இராவணனைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!!





1. இராவணன் உத்தரப் பிரதேசத்தில் பிஷ்ரக் எனும் ஊரில் பிறந்தவன்.

2. விஸ்ரவஸ் என்பவனுக்கு மகனாக பிறந்தவன்.

3. இராவணனை வலித்த அரக்கன், இராக்கதன் என்று தமிழ்ச் சங்க இலக்கியமாகிய புறநானூறு(378) கூறுகிறது.[ஆரியர்களோ பார்ப்பனர்களோ அல்ல.]

4. இலங்கைக்கு சென்ற இராவணன் குபேரனிடமிருந்து அதை பறித்துக் கொண்டு ஆட்சி செய்தான். இலங்கை இராவணனின் சொந்த ஊரல்ல.

5. தமிழ்ச் சங்கக் கடவுளாகிய திருமால் இராமனாக அவதரித்து இராவணனைக் கொன்றதாக
தமிழ் நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறியுள்ளார்

 6. ராமாயணத்தைப் பற்றி தமிழ்ச் சங்க அகநானூறு (70), புறநானூறு பாடியுள்ளது.

ராமாயணத்தை கட்டுக்கதை என்போர் தமிழ்ச் சங்க நூல்களையும் கட்டுக்கதை என்று சொல்ல வேண்டும்.

7. தமிழ் முனிவர் அகத்தியரிடம் சமஸ்கிருத வேத பண்டிதனாகிய இராவணன் போட்டியிட்டுத் தோற்றுள்ளான்.

8. இராவணனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவன் குடும்பப் பெயர்களான விபீஷண, கும்ப கர்ண, இந்த்ரஜித், மேகநாத, மண்டோதரி, பூதனை எனும் எந்தப் பெயரும் தமிழ் கிடையாது.

9. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை தமிழ்க் கடவுளான திருமாலின் அவதாரம் இராமனின் புகழைக் கேளாத காதுகளை ஏசுகிறது.

10. இராமனுக்கும், இராவணனுக்கும் சம காலத்தில் வாழ்ந்த வால்மீகி பதிவு செய்த இராமாயணம் மட்டுமே அதிகாரபூர்வமானது.
மற்ற பிற இராமாயணங்கள் எல்லாம் பிற்காலத்தில் வேறு பலரின் கற்பனைகள் புகுத்தப்பட்டுள்ளது.
அவை நிஜமல்ல.

11. இராவணன் பல பெண்களை கற்பழித்ததால் பிரம்மன் அவனுக்கு இனி எந்தப் பெண்ணையும் விருப்பமின்றி தொட்டால் தலை வெடித்து சாவாய் என சாபமிட்டிருந்தார்.

அதன் பொருட்டே அவன் பின்னாளில் சீதையை தொட அஞ்சினான். உடன் வர கொலை மிரட்டலும் செய்தான்.

12. இராவணனை கொல்லும் முன்னர் இராமன் தமிழ் முனிவர் அகத்தியரிடம் ஆசி பெற்றதாக தமிழ்சேர மன்னர் குல சேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் உரைத்துள்ளார்.

13. பிறன் மனைவியை நோக்காமையே பெரும் ஆண்மை என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி இராவணன் ஆண்மையற்றவன்.

இராவணனை புகழ்பவர்கள் திருவள்ளுவர்க்கு எதிரானவர்கள் என்பதை அறிய வேண்டும்.

14. இராவணன் தமிழ் பேசியதாக வால்மீகி இராமாயணத்திலோ தமிழ்க் கம்பராமாயணத்திலோ எங்குமே குறிப்பிடவில்லை.

15. சூர்ப்பநகை சீதையைகக் கொல்ல முயன்றதால் மட்டுமே இலக்க்ஷ்மணன் அவளது மூக்கைத் துண்டித்தான்

16. தமிழ்க் கம்பராமாயணத்தில் இராவணன் ஆய கலைகள் 64ம் அறிந்தவனாயினும் சிறந்த சிவபக்தனாயினும்,

இராவணன் ஈவு இரக்கமற்ற அரக்கன் என்றே கம்பர் கூறுகிறார்

17. வாலி சுக்ரீவனின் மனைவியை அபகரித்தான். தன் எதிரில் வருபவனின் பலம் எல்லாம் இல்லாமல் போக வேண்டும் என்ற வரம் பெற்றவன். அதனால் தான் இராமன் மறைந்திருந்து தண்டித்துக் கொன்றார்.

இதை வாலியே ஒத்துக் கொண்டு செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டான்.

சீதையை இராவணன் கண்ணியமாக நடத்தினான்  ஆனால் ராமன் அவ்வாறா
எனப்பலர் கொக்கரிக்கின்றனர்

👑 பெண்களின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்வதில் இராவணனுக்கு இணை எவருமே இல்லை

👑 ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்தாலும் தனது தாயின் சகோதரியான மாயாவிலிருந்து

👑 மருமகளுக்கு இணையான ரம்பை வரை எவரையும் இராவணன் விட்டுவைக்கவில்லை

👑 (இராவணனின் சகோதரனான குபேரனின் மகனான நளகூவரனின் மனைவியே ரம்பை ஆவாள்)

👑 இவ்வாறு பெண்பித்தால் இராவணன் பெற்ற சாபங்களில் நாம் காணவிருப்பது பிரம்மதேவரின் சாபம்

👑 அனுமந்தனின் தாயான அஞ்சனை முற்பிறப்பில் புஞ்சஹஸ்தலை என்ற பெயருடைய அப்சரஸாக இருந்தார்

👑 அவர் பிரம்மதேவரை தரிசிக்க வான்வழியாய் செல்வதை கண்ட இராவணன் அவரை பலவந்தமாக பிடித்து அவரின் ஆடைகளை பலவந்தமாக உருவுகிறான் இதனால் அப்பெண் பிரம்மதேவரை சரணடைய அவர் நடந்ததை அறிந்து இராவணன் இவ்வாறு விருப்பமில்லாத பெண்களை தொட்டால் அவனின் தலை சுக்குநூறாக உடையும் என சபிக்கிறார்

(இதை இராவணனே யுத்தகாண்டத்தில் அமைச்சனான மஹாபார்ஸ்வன் இடத்தில் உரைக்கிறான்)


ராவணன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன் ?



பிரம்மாவின் புத்திரர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது, அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், “இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாகக் கடவர்!”என்று சபித்தார். இதை அறிந்த பெண் கள், அந்த பகுதிக்கு வருவதையே தவிர்த்தனர்.

இந்த நிலையில், திரணபிந்து என்ற ராஜரிஷி யின் மகள் ஆவிற்பூ, முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரைப் பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர், ‘தன் மகளை ஏற்க வேண்டும்!’ என்று திரணபிந்து வேண்டிக் கொள்ள, அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர்.

மனைவியின் நல்ல குணங்களால் மனம் மகிழ்ந்த புலஸ்தியர் “நம் மகன், என்னைப் போலவே மகா தபஸ்வியாக இருப்பான்!”என்று ஆசிர்வதித்தார். அதன்படி பிறந்த விஸ்ரவஸ், மகரிஷியாக விளங்கினார்.

இவருக்குத் தன் மகள் இளிபிளையை மணம் செய்து வைத்தார் பரத்வாஜ மகரிஷி. இவர்களுக்குப் பிறந்தவனே குபேரன்.

இதனிடையே, மகாவிஷ்ணுவால் இலங்கையில் இருந்து பாதாளத்துக்கு விரட்டப்பட்டனர் அசுரர்கள். இதனால் கலக்கமுற்ற அசுரர்களின் தலைவன் சுமாலி, ‘இனி, நம் குலம் சிறப்பது எவ்விதம்?’ என்று சிந்தித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, தன் மகள் கைகசியை அழைத்தான். அவளிடம், “விஸ்ரவஸ் என்பவர் மகா தபஸ்வி. பரத்வாஜ முனிவரின் மகளை மணந்து, செல்வத்துக்கு அதிபதியான குபேரனை மகனாகப் பெற்றவர். அவரிடம் சென்று, உன்னை மணந்து கொள்ளும்படி வேண்டிக் கொள். அவர் உன்னை மணந்தால், உனக்கும் குபேரன் போல், சிறப்புள்ள மகன் பிறப்பான்என்ற சுமாலி இன்னொன்றையும் சொன்னான்:

நானே போய் ‘என் மகளைத் திருமணம் செய்து கொள் என்று கேட்டால், ‘அசுரனின் மகளை நான் திருமணம் செய்வதா? முடியாது!’ என்று மறுத்து விடுவார். எனவே, நீ மட்டும் செல். தானே விருப்பத்துடன் வரும் கன்னிப் பெண்ணை மணம் புரிய மறுப்பது அதர்மம் என்ற தர்மசாஸ்திரத்தை அறிந்தவர் அவர். உன்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்; நம் குலம் மீண்டும் தழைக்கும்!”என்றான் சுமாலி ஒரே மூச்சில்.

அதன்படி கைகசி, விஸ்ரவஸிடம் சென்று தனது விருப்பத்தைச் சொல்லி, “தங்கள் மூலம் எனக்குக் குழந்தை வேண்டும். எனவே, என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ளுங்கள்என்றாள். அதற்கு விஸ்ரவஸ், “இது நல்ல நேரம் அல்ல. நாம் இப்போது சேர்ந்தால் அசுரனே பிறப்பான்என்றார். கைகசியோ, “இப்போதே மணம் புரியுங்கள்என்று வற்புறுத்தினாள்.


அதற்கு அவர், “நமக்கு நான்கு குழந்தைகள் பிறப்பர். மூவர் அசுர குணங்களைக் கொண்டிருப் பர். இதில் ஒரு பெண்ணும் உண்டு. நான்காவது பிள்ளை தர்மாத்மாவாக இருப்பான்!”என்று ஆசிர்வதித்தார். அதன்படி விஸ்ரவஸ§க்கும் கைகசிக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்ப கர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன். இதில் கடைசி மகனான விபீஷணன், தர்மாத்மாவாகவே வாழ்ந்தான் என்கிறது புராணம்.

வால்மீகி ராமாயணம், உத்திரகாண்டம், சர்க்கம்-9 "இராவணன் முதலியோர் பிறப்பு" ..

இந்த சர்க்கம் முழுவதுமே அசுரர்களின் பிறப்பை பற்றி தான் சொல்கிறது. இதில் கைகசி என்கிற அசுரர் குல பெண், முனிவர் புலஸ்தியரின் மகனான விச்வரஸ் எங்கிற முனிவரிடம் சென்று மனைவியாக ஏற்கவேண்டும் என கூறுகிறாள்.

இதை வசனம்-23 சொல்கிறார் ...
"அந்த கன்னிகை இவ்வாறு சொல்லியவுடன் உத்தம முனிவராகிய விச்வரஸ், கைகசியிடம் பின்வருமாறு கூறினார்'   என்கிறது..

பின் முனிவர் பல அறிவுரைகள் இவளுக்கு கூறுகிறார், ஆனாலும், இவளின் பிடிவாதத்தால் இவர் சம்மதிக்கிறார், பின் குழந்தையையும் பெறுகிறாள்.

இதை வசனம்-30 கூறுகிறது...

'பின்னர், நான்முகனுக்கு நிகரான தவவலிமை கொண்ட தந்தையான விச்வரஸ் முனிவர், அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார், 'இவன் பத்து தலைகளுடன் பிறந்திருப்பதால், பத்து தலையன்(தசக்ரீவன்-இராவணன்) என அழைக்கப்படுவான்' என்று முனிவர் கூறினார்.


இப்படி ஒரு ப்ராமண முனிவரின் மகனாக தான் இராவணன் பிறந்தான். பின் அவரது தந்தையை போலவே பல வருடங்கள் தவம் செய்து யாராலும் கொல்லப்படாமல் இருக்க (மனிதர்களை தவிர,ஏனெனில் மனிதர்களை அவன் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பதால்) பிரம்மாவிடம் வரம் வாங்கிக்கொண்டான்.

பின் அவனது கேட்ட சகவாசத்தால், அறிவை இழந்தான்.


ஐயப்பனின் உண்மை கதை !



நிறைய மக்கள் (ஹிந்து மற்றும் பலரும்) சொல்வது, ஐயப்பன் என்பவர் பகவான் விஷ்ணு, மோகினி ரூபம் எடுத்து வந்த போது சிவன் அவர் மேல் காமம் வந்து அதனால் உண்டானவர் தான் - ஐயப்பன் என்கிறார்கள்.

ஆனால், இது உண்மை இல்லை. இது ஒரு கீழ் நிலை தமோகுண வழிபாடாகும்.

 சனாதன தர்ம சாஸ்திரமாகிய வேதம், புராணங்கள் மற்றும் வேறு எதிலுமே ஐயப்பன், சுடலைமாடன், கருப்பசாமி..., etc  இப்படி உள்ள சிறு தேவர்கள் பத்திய குறிப்பு அல்லது அவர்களை பத்திய வரலாறு, இப்படி எதுவும் சாஸ்திரங்களில் இல்லை என்பதே உண்மை.

உண்மையிலேயே, ஐயப்பன் என்பவர் ஒரு சாதாரண மனிதராக, ஒரு அரசனாக இருந்திருக்கலாம், ஆனால் மக்கள் பின்னர் அவரை வழிபட்டு, பின் சில கதைகளை அவர்களே சேர்த்திருக்க வேண்டும்.

பொதுவாக, ஐயப்பன் கதை உள்ளதாக சொல்லப்படும், பிரம்மாண்ட புராணம், ஸ்ரீமத் பாகவத புராணம்   எட்டாம் காண்டம், 12 வது அத்தியாயத்தில் சொல்லப்படும் உணமையான கதை பின்வருமாறு:

 விஷ்ணு ஒரு தடவை மோகினி ரூபம் எடுத்து வந்தார், ஆனால் அந்த மோகினி ரூபத்தை பார்க்க சிவன் ஆசை பட்டார், அபோது விஷ்ணு, சிவனை கூடிக்கொண்டு ஒரு வனத்தில் வருகிறார், பின் சிவனை நோக்கி, கொஞ்சம் நேரம் இருங்கள் என்று கூறிவிட்டு அவர் போகிறார். அதன் பின்பு அந்த வனத்தில் ஒரு கொலுசு சதம் கேட்க, ஒரு அழகான பெண் அங்கு செல்கிறாள், அதை பார்த்து சிவன் அந்த பெண்ணை பின் தொடர்கிறார். அதன் பின்தான் தான் எதற்கு வந்தேன் என்பதை அறிந்து. பின் அந்த பெண் விஷ்ணு தான் என்பதை அறிந்து, பகவானிடம் மன்னிப்பு கேட்டு, அதன் பின் சிவன்  பகவானை புகழ்த்து சில பாடல்களை படுகிறார்

பின் சிவனும், விஷ்ணுயும் போய் விடுகிறார்கள். இவ்வளவு தான் நடந்தது. அதுவும் சிவன் அந்த பெண் விஷ்ணு தான் என்று தெரியாமல் பின்தொடர்ந்தார். அதாவது பகவானது எல்லா அம்சங்களுமே ஒருவனை மயக்கக்கூடியது, அப்படியிருக்க மிக உயர்ந்த நிலையிலுள்ள சிவபெருமான் இதுவே முதல் தடவையாக,கடைசியுமாக பகவானின் மோகி ரூபத்தில் மட்டுமே சிறிது மயங்கினார். அவ்வளவு சக்திவாய்ந்தது பகவானின்  மாயை எனும் சக்தி.


எனவே, ஐயப்பன் கதை ஒரு முன்னோர் வழிபாடு ஆகும். இதை எந்த ஒரு உண்மையான அன்மீகவாதியும், சாஸ்திரங்களை ஒழுங்காக அறிந்தவனும் அறிவான்.