Thursday, 28 September 2017




அவதாரம் என்பதும் 'நபி' என்பது ஒண்றா ?

ஜடவுலகில் தோன்றுவதற்காக, முழுமுதற் கடவுள் தனது திருநாட்டிலிருந்து கீழிறங்கி வருகிறார். அவ்வாறு அவர் தோன்றும்போது, 'அவதாரம் ' என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீக உலகில் நிரந்தரமாக உள்ள இந்த ரூபங்கள், பௌதிக்க படைப்பிற்குள் தோன்றும் போது 'அவதாரம் ' என்ற பெயரைப் பெறுகின்றனர்."

அவதாரம் என்பது இறைவன் அவரது உலகிலிருந்து இறங்கி வருவதை தான் அவதாரம்(இறங்கி வருதல்) என்கிறது. ஆனால், நபி / இறைத்தூதர் என்பது இறைவனால் சக்தி அளிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனை தான் சொல்கிறது. அதாவது, அவதாரம் என்பது இறைவனே இறங்கி வருவது, நபி /தூதர் என்பது அந்த இறைவனின் சக்திஅளிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மா வருவதாகும்.

இரண்டிற்கும் நேர் எதிர் வித்தியாசங்களை உடையது, தூதர் ஒரு நாளும் அவதாரமாகவோ/இறைவனாகவோ முடியாது. இப்படி வேத இலக்கியங்களில் இறைவனின் அவதாரமாக சொல்வது கிருஷ்ணர், ராமர், நரசிம்மர்,வராஹர்,..... இப்படி பல உள்ளன. வேத இலக்கியங்களில் இவர்களை எங்கேயும் தூதராகவோ/பிரதிநிதியாகவோ சொல்லவில்லை. இவர்களை வேதங்களில் இறைவனாக தான் சொல்கிறது.

ஆனால், இறைத்தூதர்கள் / முனிவர்கள் ஆகியோர்கள் இந்தியாவில் ராமானுஜர்,மதவாச்சாரியார்,பிரபுபாதர்,... . இது போல் முகம்மது நபி, இயேசு கிறிஸ்து, குருநானக், .... இப்படி பலர் உள்ளார்கள்.

வேத விதிகளை ஒருவன் முறையாகச் செயலாற்ற மறுக்கும்போது அஃது அதர்மமாகி விடுகிறது.

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்” - பகவான் கிருஷ்ணர்பகவத் கீதா - 4.7

பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்” - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதா - 4.8

எனவே, பகவானின் ஒவ்வொரு குறிப்பிட்ட அவதாரத்திலும் குறிப்பிட்ட நோக்கம் உண்டு, இவையனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்களில் குறிப்பிடப்படாத எவரையும் அவதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு அவதாரத்திலும் அந்த குறிப்பிட்ட சந்தர்பத்திலுள்ள குறிப்பிட்ட மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு தர்மத்தைப் பற்றி அவர் உபதேசிக்கின்றார். ஆனால் நோக்கம் ஒன்றேதர்ம நியதிக்குக் கீழ்ப்படிந்து இறையுணர்வுடன் வாழ்வதற்கு மக்களை வழிநடத்துதல் என்பதே அது. சில சமயங்களில் அவர் தாமே வருகிறார் (அவதாரம்), சில சமயங்களில் அவரால் அங்கீகரிக்கபட்ட பிரதிநிதியை (இறைத்தூதர் / நபி  )  அனுப்புகிறார்.

அசுரர்களை அவர் வதம் செய்கிறார் என்ற போதிலும், அவர்களை அழிப்பதற்காகத் தோன்ற வேண்டிய அவசியம் முழுமுதற் கடவுளுக்கு இல்லை. அசுரர்களை அழிக்கும் திறன்வாய்ந்த பிரதிநிதிகள் பலர் அவரிடம் உள்ளனர். லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் முக்கிய நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றுகிறார். எனவே, கிருஷ்ண அவதாரத்தின் முக்கியக் காரணம், அவரது களங்கமற்ற பக்தர்களைத் திருப்தி செய்வதேயாகும்.


இவர்களை பற்றிய வித்தியாசங்களை உண்மையில் பிற மதங்களை விட ஒரு இந்து அதிகமாகவே அறிந்து உள்ளான். எனவே, பகவான் கிருஷ்ணா அவதாரத்துக்கு, இறை தூதருக்கும் உள்ள வித்தியாசங்களை ஒரு இந்து வேத இலக்கியங்கள் மூலமாக எளிதாக அறிந்து கொள்கிறான்.

No comments:

Post a Comment