பகவான் கிருஷ்ணரும், இறை தூதர்கள் வருகையும்
பகவான்
கிருஷ்ணரை பற்றி சொல்லும்போதெல்லாம் பிரபலமான
இந்த சுலோகம் எல்லோருக்கும் நினைவில்
வருகிறது. ஆனாலும், சிலர் இந்த சுலோகத்திற்கும்
தனது
சொந்த கற்பனை கருத்துக்களை எந்தவித
ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார்கள். இதை நாம் பார்க்கலாம்...
யதா
யதா ஹி தர்மஸ்ய க்லானிர்
பவதி பாரத
அப்யுத்தானம்
அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்
"எப்போதெல்லாம் எங்கெல்லாம்
தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ,
பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம்
நான் தோன்றுகின்றேன்" - பகவான் கிருஷ்ணர் - கீதா
4-7
பரித்ராணாய
ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே
"பக்தர்களைக் காத்து,
துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்"
- 4.8
இதில்
தர்மம் மறைந்து அதர்மம் தலைதூக்கும்
பொது பகவான் கிருஷ்ணர் தானே
நேரடியாக அவதாரம்(இறங்கி வருவது)
வருகிறதா சொல்கிறார். ஆனால், சிலர் இப்படிப்பட்ட
சில கேள்வியை நம்மிடம் கேட்பதுண்டு "கிருஷ்ணர் வந்து பல ஆயிரம்
ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டங்களில் தர்மம்
அழிந்து அதர்மம் மேலோங்கியிருந்த நாட்கள்
இருந்தன. எனினும், கிருஷ்ணர் வரவில்லை" என்று
கூறுகிறார்கள்.
எனவே,
அவள்கள் இதற்க்கு வேறு ஒரு கற்பனையான
தங்களது சொந்த கருத்தை சொல்வது
'தர்மம் மறைந்து தீய நடத்தைகள்
தலையெடுக்கும் போதெல்லாம் அவதார புருஷர்கள் (இதுவே
தவறானது) இறை தூதர்கள் - நபிமார்கள்
வருவார்கள்' என்று மேலே உள்ள
ச்லோகத்திற்க்கு அர்த்தம் கொள்ளவேண்டும் என கருத்துரைக்கிறார்கள்.இதற்க்கு இவர்கள்
சொல்வது (பகவத் கீதை-சுவாமி
சித்பவானந்தர் வியாக்கியானம் - பக்கம் 242) இப்படி கூறுவதாக சொல்கிறார்கள்.
இவைகள் முற்றிலும் தவறானவை. ஏனெனில் இப்படி சொல்பவர்கள்
மயவாதிகள் என்கிற கடவுளை ஏற்க
மறுக்கும் கொள்கைகளை உடையவர்கள் அவர்கள்.
ஆனால்,
இதற்க்கு எந்தவித அடிப்படை ஆதாரம்
கீதையிலோ அல்லது பிற வேத
இலக்கியங்களிலோ இல்லையே ! இது இவர்களது சொந்த
கருத்தாகத்தான் இருக்கமுடியும். ஆனால், பகவத் கீதையில்
கிருஷ்ணர் இப்படி எங்குமே சொல்லவில்லையே!
அவர் எல்லா இடங்களிலும் ஏக
இறைவனாக தானே சொல்கிறது ! ஆனால்,
பகவான் ஏன் வரவில்லை என்பதை
பற்றி நாம் உண்மையான காரணத்தை
இங்கே பார்க்கலாம்..
பொதுவாக,
இந்த கலியுகத்தில் மக்கள் பெரும்பாலும் பெரும்
பாவம் செய்பவர்களாகவே உள்ளார்கள். எனவே, பகவான் இந்த
கலியுகத்தில் வந்தால் கூட இங்கே
ஒருவரும் மிஞ்சமாட்டார்கள். ஏனெனில், இந்த கலியுகத்தில் பாவம்
செய்பவர்களே 99 % உள்ளார்கள்.
இந்த சமயத்தில் பகவான் வந்தால் எல்லோருமே
அழிக்கப்படுவார்கள். மேலும், அவர் முக்கியமாக
வருவது தூய பக்தர்களின் திருப்திக்காக
மட்டுமே வருவது தான் அவருடைய
முதல் காரணம், தீயவர்களை அழிப்பது
என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. அவரது
உலகிலிருந்தபடியே அவரால் இதை செய்யமுடியும்.
எனவே, அவர் வருவது தூய
பக்தர்குக்காகவே தான் வருகிறார். ஆனால்,
இந்த கலியுகத்தில் இப்படிப்பட்ட தூய பக்தர்கள் இருக்கிறார்களா
? என்பது சந்தேகமே !
இப்போது
பகவான் அவதாரம் பண்ணினானேயானால் அவனுக்கு
நிறைய ஹிரண்ய கசிபுகள் கிடைப்பார்கள்;
நிறைய ராவணர்கள் கிடைப்பார்கள்; நிறைய சிசுபாலர்கள் கிடைப்பார்கள்
.ஆனால் ஒரே ஒரு பிரஹலாதன்
கிடைப்பானா? பகவான் அந்த ஒரு
ப்ரஹலாதனுக்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறான்.
பிரஹலாதன்
போல ஒரு நிஜ பக்தனுக்குக்
கெடுதல் ஏற்பட்டால் இந்த க்ஷணமே பகவான்
அவதாரம் பண்ணி விட சித்தமாயிருக்கிறான்.
அப்படிப் பட்ட நிஜ பக்தி
உள்ளவன் ஒருத்தன் இருந்தால் கூட போறும்.
ஆனாலும்,
அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக
அவரே கூறியதால், இந்தமுறை மக்களை அழிப்பதற்கு பதிலாக,
மக்களுக்கு இறைவனின் நாமங்களை கொடுப்பதற்காக பகவான் இந்த கலியுகத்தில்
ஸ்ரீ சைதன்யர் என்கிற நாமத்தில், கல்கத்தாவிலுள்ள,
நவதீபம் என்கிற ஒரு ஊரில்
1486 ஆண்டு அவதரித்தார். இவரை
பற்றிய குறிப்புகள் வேத இலக்கியங்களில் பல
இடங்களில் காணப்படுகிறது.
மிகச்சிறந்த
யோகிகளின் கற்பனைக்குக்கூட எட்டாத அசாதாரணமான செயல்களாலும்
சாஸ்திர குறிப்புகளாலும் ஒரு உண்மையான அவதாரத்தினை
அறிந்துகொள்ளலாம்.
ஸ்ரீ
சைதன்யர் சாக்ஷாத் கிருஷ்ணரே, தன்னை எவ்வாறு வழிபடுவது
என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், தானே
தனது பக்தனின் வடிவில் வந்தார். தான்
ஏற்றுக் கொண்டிருந்த பக்தன் என்னும் மனோபாவத்திற்கு
பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அவர் தன்னை முழுமுதற்
கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், அவர் மறைக்கப்பட்ட
அவதாரம் என்று அறியப்படுகிறார். கலி
யுகத்தில் முழுமுதற் கடவுள் மறைக்கப்பட்ட உருவில்
தோன்றுகிறார் என்று வேத இலக்கியங்களில்
தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தில் (7.9.38) கூறுகிறது..
இத்தம் ந்ரு-திர்யக்-ருஷி-தேவ-ஜஷாவதாரைர் லோகான் விபாவயஸி ஹம்ஸி ஜகத் ப்ரதீபான்
தர்மம் மஹா-புருஷ பாஸி யுகானுவ்ருத்தம் சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுகோ ஸ த்வம்
“எம்பெருமானே,
மனிதன், மிருகம், சாது, தேவர், மீன்,
ஆமை என பல்வேறு ரூபங்களில்
அவதரித்து, அதன் மூலமாக முழு
படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக்
கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள்.
இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத்
திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள்
உங்களை பரம புருஷ பகவானாக
வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
எனவே, நீங்கள் த்ரி-யுக,
அல்லது மூன்று யுகங்களில் மட்டும்
தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.”
(ஸ்ரீமத் பாகவதம் 7.9.38)
ஸ்ரீமத்
பாகவதத்தில் (11.5.32) விவரிக்கப்பட்டுள்ளது:
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை:
ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:
“கலி
யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின் அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து
வழிபடுவர். அவரது மேனி கருமையாக
இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர்
தனது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும் இரகசிய துணைவர்களால்
சூழப்பட்டவர்.”
இங்கே
அவர் சன்ன: கலௌ என்று
அழைக்கப்படுகிறார். கலி யுகத்தில் அவர்
நரசிம்மதேவர், வாமனதேவர், இராமசந்திர பகவான் ஆகியோரைப் போன்று
தோன்றுவதில்லை. அவர் ஒரு பக்தராகத்
தோன்றுகிறார். ஏன்? இஃது அவருடைய
மிகமிகக் கருணை வாய்ந்த அவதாரமாகும்.
ஸ்ருதி
வேத வாங்கியங்களிலிருந்து :
அதர்வண
வேதம் - ஸ்ரீ சைதன்யா உபநிஷத்
...
ito 'ham krta-sannyaso
'vatarisyami sa-guno nirvedo
niskamo bhu-girbanas
tira-stho 'lakanandayah kalau
catuh-sahasrabdhopari
panca-sahasrabhyantare
gaura-varno dirghangah
sarva-laksana-yukta
isvara-prarthito nija-rasasvado
bhakta-rupo
misrakhyo vidita-yogah syam
கலியுகம்
நான்கு ஆயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
இடையில், இந்த கட்டத்தின் முடிவில்,
நான் கௌரங்கா , கங்கை 'கரையில் ஒரு
இடத்தில் ஒரு தங்க நிறத்தில்,
அந்தண குடும்பத்தில் பூமியில் இறங்கி வருவேன். பின்னர்
சன்னியாசம் எடுத்து, உச்ச துறவும், பொருள்
ஆசைகள் இருந்து முழுமையான பற்றின்மை
உட்பட அனைத்து என் ஆழ்நிலை
குணங்கள் வெளிப்படுத்துவேன். . இறைவன் கௌரங்கா, வடிவத்தில்,
நான் என் கைகள் என்
முழங்கால்கள் விரிவாக்கும் ஒரு பெரிய ஆளுமை
அனைத்து முப்பத்தி இரண்டு உடல் அறிகுறிகள்
காண்பிக்கும்.
நான்
என் சொந்த பக்தர்களையும், எனது
புனித பெயர்களையும் பக்தர்கள் ஜெபிப்பார்கள், அந்த
நேரத்தில் என் மிகவும் ரகசியமான
பக்தர்கள் மட்டுமே என்னை புரிந்து
கொள்ள முடியும்.
(அதர்வன
வேதத்தில், மூன்றாவது கண்ட பிரம்மா-விபாக)
sa eva bhagavan yuge turiye 'pi
brahma-kule
jayamanah sarva upanisadah
uddidirsuh
sarvani dharma-astrani
vistarayisnuh sarvan
api janan santarayisnuh sarvan
api vaisnavan
dharman vijrimbhayan sarvan api
pasandan nicakhana
கலியுகத்தில்,
உன்னத இறைவன் ஒரு அந்தணர்
குடும்பத்தில் தோன்றுவார். அவர் உபநிஷத் மற்றும்
தர்மம்-சாஸ்திர செய்தியை சொல்லிக்கொடுக்கவும்,
. அவர் நாத்திகர்கள் மற்றும் வேத துவேசம்
செய்பவர்களை தோற்கடிக்க
வேண்டியும், அவர்
வைஷ்ணவ தர்மத்தின் உண்மையை
நிறுவ வேண்டும் என்பதர்காகவும் வருகிறார்.
- கிருஷ்ண
உபநிஷத் 2.6, உறுதி
பதிப்புகள்: வைஷ்ணவ உபநிடதங்கள்
ஆங்கில மொழிபெயர்ப்பு (ராமநாதன்)
kaleh prathama-sandhyayam
gaurango 'ham mahi-tale
bhagirathi-tate bhumni bhavisyami
sanatanah
முதல்
சந்தியா வேளையில் கலியுகத்தில், நான் கங்கை கரையில்,
என்னுடைய தங்க நிற வடிவத்தில்
இந்த பூமியில் வருவேன் - பிரம்மா புராணம்
nama-siddhanta-sampati
prakasana-parayanah
kvacit sri-krsna-caitanya nama
loke bhavisyati
‘உன்னத
இறைவன் மீண்டும் இந்த பூமியில் வருவார்.
அவரது நாமம் 'ஸ்ரீ கிருஷ்ணா
சைதன்ய' ஆகும். இவர் பகவானின்
புனித நாமங்களை பிரச்சாரம் செய்வார்' - தேவி புராணம்
yad
gopi-kuca-kumbha-sambhrama-bhara-
rambhena samvardhitah yad va
gopa-kumara-
sara-kalaya range subhandi-krtam
yad
vrndavana-kanane pravilasac
chridama-
damadibhis tat prema-pradatam
cakara
bhagavan caitanya-rupah prabhuh
'உன்னத
பகவான், தன்னுடைய முந்தைய விருந்தவன லீலைகளை காண்பதற்க்காகவும், தூய
அன்பை வெளிப்படுத்தவும், மீண்டும்
இந்த உலகிற்கு வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய'
எனப்படும்' - கருட புராணம்
aham purno bhavisyami
yuga-sandhau visesatah
mayapure navadvipe bhavisyami
saci- sutah
‘என்னுடைய
முழுமையான ஆன்மிக வடிவத்தில், நான்
நவதீப, மாயாப்பூர் எனும் இடத்தில, சசி
தேவிக்கு மகனாக கலியுகத்தில் நான்
(சைதன்யர்) அவதரிப்பேன். - கருட
புராணம்
danda-mandita-bhutah
sannyasa-vesah sva-
yam nihsandedham upagatah
ksiti-tale
caitanya-rupah prabhuh
பகவான்
இந்த பூமியில் ஒரு சந்நியாசியாக வருகிறார்.
அவரது நாமம் 'சைதன்ய பிரபு
' - கருட
புராணம்
இப்படி
அவரது அவதாரம் பற்றிய வேத
ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே, இந்த கலியுக
அவதாரமாக பகவான் சைதன்யர் எல்லா
வேத இலக்கியங்களிலும் தெளிவாக அறிந்து
கொள்ளலாம்.
No comments:
Post a Comment