Thursday, 28 September 2017


கிருஷ்ணர் என்பவர் இறைவனா அல்லது ஒரு சாதாரண மனிதரா ?

பல முஸ்லீம் அறிஞர்கள் கிருஷ்ணர் இருந்ததை ஒப்பு கொள்கிறார்கள், ஆனால் அவரை ஒரு சாதாரண மனிதராக பார்க்கிறார்கள்.

கிருஷ்ணர்  தான் தனது சுய உடலிலேயே தோன்றுவதாக கீதையில்  கூறுகிறார். சாதாரண ஜீவாத்மா உடல்களை மாற்றுவதைப் போல், பகவான் தமது உடலை மாற்றுவதில்லை. கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றும் போது தனது சுயமான நித்திய உருவில், இரு கைகளுடன் புல்லாங்குழலை ஏந்தியவாறு தோன்றுகிறார்.

தனது திவ்யமான உருவில் தோன்றினாலும் அகிலத்தின் நாயகனாக இருந்தாலும், சாதாரண ஒரு ஜீவாத்மா பிறப்பதைப் போலவே அவரும் பிறப்பதாகத் தோன்றுகின்றது. பகவான் கிருஷ்ணரின் உடல் பௌதிக உடலைப் போன்று அழிவுறுவது இல்லை என்றபோதிலும், அவர் குழந்தைப் பருவத்திலிருந்து பால்ய பருவத்திற்கும், பால்ய பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும் வளர்ந்ததைப் போலத் தோன்றுகிறது.

"நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்" - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதை - 4-6

 குருசேஷத்திரப் போரின்போது,உலகக் கணக்குப்படி அவர் மிக முதியவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இருபது, இருபத்தைந்து வயது இளைஞனாகவே அவர் அப்போதும் தோன்றினார்.

எனவே, பகவான் கிருஷ்ணர் என்பவர் நம்மை போலுள்ள ஒரு சாதாரண ஜூவாத்ம அல்ல. அதாவது, அவர் சாதாரண மனிதர் அல்ல. அவரே எல்லோரின் இறைவன் (அல்லாஹ்).

'மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள்.”  - பகவான் கிருஷ்ணர் , பகவத் கீதா- 9.11,

'சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை" - பகவான் கிருஷ்ணர்பகவத் கீதா - 7.25,


எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும்.

No comments:

Post a Comment