Thursday, 28 September 2017

கீதையில் ஓர் இறை கொள்கை சொல்கிறதா ?



சிலர் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஓர் இறை கொள்கையை தான் சொல்வதாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் வசனங்கள் வைத்து இதை பார்க்கலாம் ...

"நானே இலக்கு, காப்பவன், தலைவன், சாட்சி, வசிப்பிடம், அடைக்கலம், மற்றும் மிக நெருங்கிய நண்பன். நானே படைப்பு, அழிவு, எல்லாவற்றின் ஆதாரம், தங்குமிடம், மற்றும் நித்தியமான விதையும் ஆவேன்." - கீதா 9-18

இதில் பகவான் கிருஷ்ணர் நானே எல்லாம் என்று தான் கூறுகிறார்.

இதையே தான் குரானில் இறைவன் கூறுவதாக சொல்கிறார் ..
'இறைவனே முழு  உலகையும்  படைத்தது...." - 53:43
'வனங்கள்,பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரித்தாகும், இறைவன் (அல்லாஹ்) எல்லாவற்றிற்கும் சாட்சியாவான்" 85:10
'இறைவன் (அல்லாஹ்) நம்பிக்கையாளர்களின் நண்பனாவான்" 2:268

இப்படி பல குரான் வசனங்களில் சொல்கிறது. ஆனால், இதையே பகவான் கிருஷ்ணர் கீதையில் நானே இதை செய்தேன் என்கிறார்.

உலகில் வந்த பற்பல இறைத்தூதர்கள் ஓரிறை கொள்கையையே வலியுறுத்தினார்கள். ஒரே இறைவனை வணங்க விடும் என்றும், இணை வைக்க கூடாது எனவும் அவர்களின் போதனைகளாக இருந்தது

கிருஷ்ணர் கீதையில் ஓர் இறை கொள்கை கூறுவதாக சொல்லும் வசனம்- 13-29 ..
"எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனை காண்பேன், தன்னை தானே அழித்து கொல்கிறானில்லை, அதனால் அவன் பரகத்தியடைகிறான்"

என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த வசனம் மொழிபெயர்ப்பே தவறு.இதன் உண்மை மொழிபெயர்ப்பு இதோ...

'பரமாத்மா, எல்லா இடங்களிலும், எல்லா உயிர்வாழியிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. இவ்வாறு அவன் தெய்வீக இலக்கை அணுகுகின்றான்"

இதில் பகவான் எல்லோருடைய இதயத்திலும் உள்ள அந்த பரமாத்மாவை காண்பவன் உயர்வடைவான் என்கிறார்.

இதை போல் குரானிலும் சொல்கிறது, இறைவன் (பரமாத்மா) எல்லா உயிர்களின் இதயத்திலும் இருப்பதாக சொல்கிறது. இதோ ..

"மேலும், நிச்சயமாக நாம் மனிதனை படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நான் அறிவேன். மேலும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர் ) நரம்பைவிட நான் அவனுக்கு மிக சமீபமாக இருக்கிறேன்" என்று கூறுகிறார்” குரான்   50-16  
இப்படி இறைவன் (பரமாத்மா) ரூபத்தில் எல்லா உயிர்வளிகளோடே இருப்பதாக குரானில் பல இடங்களில் சொல்கிறது .. குரான் 34.50, குரான் - 57.4, குரான் - 56.85, குரான் - 57.6

மேலும், இறைவன் (அல்லாஹ் - பரமாத்மா ) எல்லா உயிர்களின் இதயத்துகருகில் இருப்பதாக குரான் வசனம் - 8-24 இல் கூறுகிறார்.

அடுத்த வசனம்... கீதா 13-33 சொல்கிறார்கள் ...
'ஒரு சூரியன் எப்படி உலகனைத்தையும் ஒளியுற செய்கிறதோ, அப்படி அர்ஜுனன் ! ப்ரபஞ்சமனைத்தையும் பரமாத்மா பிரஹாஸிகிறான்" என்று கோருகிறார்கள்.

இந்த வசனமும் தவறான மொழிபெயர்ப்பே. இதில் பரமாத்மா என்கிற வார்த்தை வரவில்லை. ஆத்மாவை தான் சொல்கிறது. இதன் உண்மை மொழிபெயர்ப்பு இதோ..

யதா ஸர்வ-கதம் ஸெளக்ஷ்ம்யாத் ஆகாஷம் நோபலிப்யதே
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே

வார்த்தை அர்த்தம்:
யதாபோல; ஸர்வ-கதம்எங்கும் பரவியிருப்பதை; ஸெளக்ஷ்ம்யாத்நுண்ணியமானதால்; ஆகாஷம்ஆகாயம்; என்றுமில்லை; உபலிப்யதேகலப்பது; ஸர்வத்ரஎங்கும்; அவஸ்தித: — நிலைபெற்று; தேஹேஉடலில்; ததாஅதுபோல; ஆத்மாஆத்மா; என்றும்; உபலிப்யதேகலப்பது.

மொழிபெயர்ப்பு:
"எங்கும் நிறைந்திருந்தாலும் தனது நுண்ணிய இயற்கையினால், ஆகாயம் எதனுடனும் கலக்காமல் இருக்கின்றது. அதுபோல, பிரம்மனின் பார்வையில் நிலைபெற்றுள்ள ஆத்மா, உடலில் அமைந்திருந்தாலும் உடலுடன் கலப்பதில்லை"

இதில் ஆத்மா (உயிர்நமது உடலில் இருந்தாலும் அது நமது உடலுடன் கலந்து விடுவதில்லை, அதற்க்கு ஆகாயத்தை உதாரணமாக சொல்கிறார். எனவே, இந்த வசனமும் பரமாத்மாவை சொல்லவில்லை, ஆத்மாவாகிய (நம்மை தான்) சொல்கிறது.

அடுத்த வசனம்... கீதா 18-46 சொல்கிறார்கள் ...

"யாரிடத்திலிருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகமெல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளதோ அந்த ஈஸ்வரனை சுயகர்மத்தால் வணங்கி மனிதன் மேன்மை எய்துகிறான்

இந்த வசனமும் தவறான மொழிபெயர்ப்பே. இதன் உண்மை மொழிபெயர்ப்பு இதோ..

யத: ப்ரவ்ருத்திர் பூதானாம் யேன ஸர்வம் இதம் ததம்
ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:

"யாரிடமிருந்து எல்லா உயிர்வாழிகளும் தோன்றினரோ, யார் எல்லா இடங்களிலும் பரவியுள்ளாரோ, அந்த இறைவனை தனது சொந்த கடமையைச் செய்வதால் வழிபட்டு மனிதன் பக்குவத்தை அடைய முடியும்"

ஒரு குறிப்பிட்ட தொழிலில் தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன் என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். மேலும், அவன் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலின் பலனைக் கொண்டு முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும். பூரணமான கிருஷ்ண உணர்வில் இவ்வாறு ஒருவன் எப்போதும் எண்ணினால், பகவானின் கருணையால் அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான். இதுவே வாழ்வின் பக்கும். தேஷாம் அஹம் ஸமுத்ததர்தா என்ற பகவத் கீதையில் (12.7) பகவான் கூறுகின்றார். அத்தகு பக்தனை விடுவிப்பதற்கான பொறுப்பினை பரம புருஷர் தாமே ஏற்றுக் கொள்கிறார். இதுவே வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவமாகும். ஒருவன் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அவன் பரம புருஷருக்குத் தொண்டு செய்தால் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைவான். இதுவே இதன் உண்மையான அர்த்தம்.

அடுத்த வசனம்... கீதா 18-62 சொல்கிறார்கள் ...

"அர்ஜுனா, எல்லா பாங்கிலும் அவனையே தஞ்சமடை, அவனருளால் மேலான சாந்தியும் நிலைத்துள்ள வீடுபேறும் பெறுவாய்"

இந்த வசனத்தின் உண்மை அர்த்தம் இதோ...

தம் ஏவ ஷரணம் கச்ச ஸர்வ-பா வேன பா ரத
தத் ப்ரஸாதாத் பராம் ஷாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்

வார்த்தை அர்த்தம் :
தம்அவரிடம்; ஏவநிச்சயமாக; ஷரணம் கச்சசரணடைவாய்; ஸர்வ-பாவேனஎல்லாவிதத்திலும்; பாரதபரதனின் மகனே; தத்-ப்ரஸாதாத்அவரது கருணையால்; பராம்தெய்வீகமான; ஷாந்திம்அமைதி; ஸ்தானம்இருப்பிடம்; ப்ராப்ஸ்யஸிநீ அடைவாய்; ஷாஷ்வதம்நித்தியமான.

மொழிபெயர்ப்பு :
"பரத வழித் தோன்றலே, அவரிடம் முழுமையாக சரணடைவாயாக. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும், உன்னதமான நித்திய இடத்தையும் நீ அடைவாய்"

இதில் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கும் இறைவனான  பரமாத்மாவிடம்  உயிர்வாழி சரணடைய வேண்டும், அஃது அவனை இந்த ஜட வாழ்வின் எல்லாவித துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும்.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்ட: —பகவான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளார் என்பது பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, உள்ளிருக்கும் பரமாத்மாவிடம் சரணடைய வேண்டும் என்று இங்கு பரிந்துரைக்கப்படுவதன் பொருள், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்பதே.

மேலும், இறைவன் (அல்லாஹ் - பரமாத்மா ) எல்லா உயிர்களின் இதயத்துகருகில் இருப்பதாக குரான் வசனம் - 8-24 இல் கூறுகிறார்.

அர்ஜுனன் ஏற்கனவே கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுவிட்டான். பத்தாம் அத்தியாத்தில், அர்ஜுனன் அவரை பரபிரம்மனாக (புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக), பரந்தாமராக (எல்லா உயிர்வாழிகளின் பரம இருப்பிடமாக) ஏற்றுக் கொண்டான். இதனை அவன் தனது தனிப்பட்ட அனுபவத்தினால் மட்டுமின்றி, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சாதுக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்றுக் கொண்டான்.

இப்படிப்பட்ட வசனங்களை சிலர் தவறாக அர்த்தங்களை படித்துவிட்டு இறைவனுக்கு உருவமில்லை என வாதிடுவது அறியாமையை காட்டுகிறது. மேலும், பகவத் கீதையில் கிருஷ்ணர் நேரடியாகவே பல இடங்களில் நானே எல்லாவற்றின் மூலம்,எல்லாம் எண்ணையே சார்ந்துள்ளது, நானே எல்லோரின் இறைவன் என் பற்பல இடங்களில் சொல்கிறார்.

"ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." - பகவான் கிருஷ்ணர் - கீதா 10-8

"அர்ஜுனன் கூறினான்: நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம், நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.." - பகவான் கிருஷ்ணர் - கீதா 10-12

"எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.." - பகவான் கிருஷ்ணர் - கீதா 10-3

"உத்தம புருஷரே, அனைத்திற்கும் மூலமே, அனைவருக்கும் இறைவனே, தேவர்களின் தேவரே, அகிலத்தின் இறைவனே, உண்மையில், உமது சுய அந்தரங்க சக்தியின் மூலம் நீரே உம்மை அறிவீர்." -  கீதா 10-10

இப்படி பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என பகவத் கீதை பல்வேறு இடங்களில் நிறைய வசனங்களில் பகவத் கீதை முழுவதுமே சொல்கிறது. அப்படி இருக்க கீதை ஓர் இறை கொள்கையை தான் சொல்கிறது என்பது முட்டாள் தனமானது.

ஆனாலும்,, இந்த ஓர் இறை கொள்கையான பகவானின் ஆன்மிக ஜோதியை வணங்குபவர்களை பற்றிய குறிப்பும் கீதையில் 12 அத்தியாயத்தில் அர்ஜுனன் இதை பகவானிடம் கேட்கிறார். இப்படி உங்களது அருவ தன்மையை வழிபடுபவர்கள் எங்கே செல்வார்கள் என்கிற கேள்விக்கு பகவான் இப்படி கூறுகிறார்..

"ஆனால், தோற்றமளிக்காததும், புலனுணர்விற்கு அப்பாற்பட்டு இருப்பதும், எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாற்றமில்லாததும், நிலையானதும், அசைவற்றதுமான பூரண உண்மையின் அருவத் தன்மையை முழுமையாக வழிபடுபவர்கள், பல்வேறு புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் பழகி, அனைவருக்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபட்டு, இறுதியில் என்னை அடைகின்றனர்" - பகவான் கிருஷ்ணர் - கீதா 12-4

எனவே, இப்படி பகவான் கிருஷ்ணரை அருவ தன்மையுடன் வழிபடுபவர்களுக்கு, இறுதியில் அவரையே அடைவதாகவும், ஆனால் இந்த பாதை மிகவும் கடினமானது என்பதை அடுத்த வசனத்தில் சொல்கிறார்..

"எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்" - பகவான் கிருஷ்ணர் - கீதா 12-5

"மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே" - பகவான் கிருஷ்ணர் - கீதா 14-27 

இதில் பகவான் கிருஷ்ணர் தன்னிடமிருந்தே அருவ பிரம்மன் (ஜோதி-உருவமில்லா தன்மை) வருவதாக சொல்கிறார். இதே தான் குரானிலும் (24:35) இறைவன் தன்னிடமிருந்த ஒளி வருவதாக சொல்கிறது.

ஆனால், பகவான் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளான உருவ வழிபாட்டை செய்யும் பக்தர்களை தானே அவர்களை காப்பாற்றுவதாக சொல்கிறார்..

"ஆனால், தங்களது எல்லா செயல்களையும் எனக்காக துறந்து பிறழாமல் என் மீது பக்தி செலுத்தி, எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்போதும் என்மீது தியானம் செய்து, தங்களது மனங்களை என்னில் நிறுத்தி, எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்." - கீதா 12-6,7

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும். அத்தகையோர் வேத இலக்கியங்களின் மூலமாக பரமனின் தோன்றாத தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும், வேத மொழியினைக் கற்று எல்லையற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்மேலும், இவையனைத்தையும் உணரவும் வேண்டும். இது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல.

மாறாக, கிருஷ்ண உணர்வில் இருப்பவன், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், விக்ரஹத்தினை நெறிப்படி வழிபடுதல், இறைவனது பெருமைகளைக் கேட்டல், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பிரசாதமாக உண்ணுதல் போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானை மிகவும் சுலபமாக உணர்ந்து கொள்கிறான்.


அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்


No comments:

Post a Comment