Friday, 12 January 2018

தமிழ் 60  வருடங்களாக -  பிரபவ - விபவ... என்பது என்ன ?




இந்துமதத்தில் உள்ள 60வருட தமிழ் மாதங்கள் என்பதை பற்றி நாத்திகவாதிகள் கூறும் பொய் கதைகளும், அதன் உண்மைகளையும் நாம் இங்கே பார்க்கலாம்

அதாவது நமது 60 வருட தமிழ் மாதங்களான பிரபவ - விபவ என ஆரம்பித்து 60 வருடங்கள் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்த மாதங்கள் எல்லாமே புராணங்களில் கூறிய கதைகளை வைத்தே வருகிறதாக கூறுகிறார்கள். அதாவது, கிருஷ்ணரும் -நாரதர் பெண்ணாக உருமாறி இணைத்து, இவர்களது குழந்தைகளே இந்த 60 வருட தமிழ் மாதங்கள் என ஒரு கதையை சமணமதத்தின் ஒரு நூலான 'அபிதான சிந்தாமணி' என்பதிலிருந்து கூறுகிறார்கள். இதன் உண்மைகள் இங்கே பார்க்கலாம்...

ஆனால்,  இந்தக் கதையின் மூலம்,இந்துமத நூலான பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது.


அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.


இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்.

அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது  – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன


இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம்.

அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.





நாத்திகவாதிகள் கூறும் கதை எதிலிருந்து ?

நாத்திகவாதிகள் கூறும் கதை எந்த புராணத்திலும், மகாபாரதத்திலும் எங்கேயும் இல்லை. ஆனால், இந்த வகை கதை ஒரு சமண சமயத்தை சார்ந்த ஒருவர் பல காலங்களுக்கு முன்பு கூறிய ஒரு உவமை 'நிகண்டு' வகையை சார்த்த கதை. இதற்க்கு எந்த ஆதாரபூர்வமாக விளக்கமும் வேத சாஸ்திரத்தில் இல்லை என்பதே உண்மை.

இதை 'அபிதானசிந்தாமணி' என்னும் நூலில், ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.

இது ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல.

ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர்.

மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது. மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர்.


இவ்வாறு இந்துமதத்தில் இல்லாத ஒருவரது நூலை வைத்து இந்த நாத்திகவாதிகள் நாரதர்-விஷ்ணு கதையையும், அதனால் வந்த 60 தமிழ் வருடங்கள் கதையும் பொய் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
நரகாசுரன் தமிழனா?




பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்ற நன்னாளை நாம் அனைவரும் தீபாவளியாகக் கொண்டாடுகிறாம். நரகாசுரன் நாட்டின் எந்தப் பகுதியைச் சார்ந்தவன்? அவன் ஒரு தமிழனா?

வருணனின் குடையையும் அதிதியின் குண்டலங்களையும் திருடிய நரகாசுரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான். மேலும், பல்வேறு நாடுகளைச் சார்ந்த 16,100 இளவரசிகளைக் கடத்தி வைத்து துன்புறுத்தினான். எனவே, கிருஷ்ணர் ஸத்யபாமாவுடன் சென்று போர் புரிந்து, இறுதியில் தமது சுதர்ஸன சக்கரத்தின் மூலமாக அவனைக் கொன்றார்.

நரகாசுரனின் தலைநகரம் பிராக்ஜோதிஸபுரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன (ஸ்ரீமத் பாகவதம் 10.59.2, 12.12.39). இவ்விடம் இன்றைய அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஒரு பகுதியாகும்.

நரகாசுரனின் வரலாறு அஸ்ஸாம் மாநிலத்தில், குறிப்பாக பிரபலமான காமாக்யா கோயிலை உள்ளடக்கிய காமரூபம் என்ற பகுதியில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காமாக்யா தேவியை திருமணம் செய்துகொள்ள விரும்பி நரகாசுரன் செய்த விசித்திர செயல்கள் யாவும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய வரலாற்றில் நன்கு அறியப்படும் கதைகளாகும். கௌஹாத்திக்குத் தெற்கிலுள்ள ஒரு மலை நரகாசுரனின் பெயரில் அங்கே அமைந்துள்ளது.

நரகாசுரனின் மகனான பகதத்தனை பிராக் ஜோதிஸ புரத்தின் மன்னனாக மஹாபாரதத்தில் பல இடங்களில் காண்கிறோம். பிற்காலத்தில் கௌரவர்களின் சார்பாக அவன் குருக்ஷேத்திர யுத்தத்தில் கலந்து கொண்டான் என்பதையும் போரின் பன்னிரண்டாவது நாளில் அர்ஜுனனால் கொல்லப் பட்டான் என்பதையும் மஹாபாரதம் அறிந்தவர்கள் அறிவர். பிற்காலத்தில் அஸ்ஸாம் பகுதியை ஆட்சி செய்த மூன்று வம்ச மன்னர்களும் நரகாசுரனின் வழிவந்தவர்களாக அறியப்படுகின்றனர்.


உண்மை இவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டில் ஸநாதன தர்மத்தின் கொள்கைகளை மறுத்துப் பேச வேண்டும் என்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, கொஞ்சம்கூட அறிவின்றி செயல்படும் சில முட்டாள்கள், நரகாசுரன் தமிழ்நாட்டைச் சார்ந்தவன் என்றும், தீபாவளிப் பண்டிகை தமிழர்களின் (அல்லது திராவிடர்களின்) மீதான ஆரியரின் படையெடுப்பு என்றும் பிதற்றுகின்றனர்.

உண்மையை அறியாத சில மக்களும் நரகாசுரனை நல்லவன் என்றும், தமிழன் என்றும் நம்புகின்றனர். என்னே விந்தை!

பல முறை ஒரு பொய்யைத் திருப்பிச் சொல்லி அதனை மக்கள் மனதில் பதித்து விடுகின்றனர்.

நரகாசுரன் தமிழன் என்றால், அவன் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?
சாஸ்திரங்கள் அவனது இடம் பிராக்ஜோதிஸ புரம் என்று கூறுகின்றன. அஸ்ஸாம் பகுதியில் அந்த இடம் தொன்றுதொட்டு நரகாசுரனின் இடமாக அறியப்பட்டு வருகிறது. அதுபோன்ற இடம் தமிழகத்தில் உண்டா என்றால், நிச்சயம் இல்லை. சாஸ்திர ஆதாரமும் கிடையாது, வரலாற்று ஆதாரமும் கிடையாது.

ஆனால் ஒன்றுமறியா அப்பாவி மக்களை ஏமாற்ற வாய்க்கு வந்ததை உளறுகின்றனர். இதில் பெரிய வேடிக்கை என்னவெனில், நரகாசுரனைத் தமிழனாகக் கூறும் கேடு கெட்ட முட்டாள்கள் கிருஷ்ணர் என்று ஒருவர் வாழ்ந்ததையே ஏற்க மறுப்பவர்களாக (அதாவது, நாஸ்திகர்களாக) இருக்கின்றனர். கிருஷ்ணர் என்று ஒருவர் வாழவே இல்லை; ஆனால் அவர் நரகாசுரனைக் கொன்றார்.” இந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது.

இஃது ஒருபுறம் இருந்தாலும், கன்னிப் பெண்களைக் கடத்திச் சென்று அடைத்து வைத்து துன்புறுத்துபவன் யாராக இருந்தாலும், அவனை யாம் எதிர்க்க வேண்டியது அவசியம். அவன் தமிழன் என்பதால், அவனை எதிர்ப்பதைக் கைவிட்டு ஆதரிக்கத் தொடங்கினால், அஃது எந்த விதத்தில் நியாயம்?

நரகாசுரனை ஆதரிப்பவர்கள் தங்களது மகள் அல்லது தங்கைமார்களை யாரேனும் ஒரு தமிழன் (வாதத்திற்காக வைத்துக்கொள்வோம்) கடத்திச் சென்று துன்புறுத்தினால், அவ்வாறு துன்புறுத்தியவனை நல்லவனாக நினைத்துக் கொண்டாடுவார்களா? சிந்திப்பீர்!

யார் எதைக் கூறினாலும் அதை நம்புவதற்கு ஓர் அப்பாவிக் கூட்டம் உள்ளது.
16,100 பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த நரகாசுரனைக் கொன்று மக்களுக்கு மகிழ்ச்சியூட்டிய கிருஷ்ணரை எண்ணி தீபாவளியைக் கொண்டாடுவோமாக.


பஞ்ச-பாண்டவர்கள்ஐந்து தேவர்களுக்கும் - குந்திக்கும் பிறந்தவர்களா  ?




முதலில் சனாதன தர்மத்தில் இதை தெரிஞ்சுக்குங்க...


எல்லா பௌதீக உலகங்களும் இறைவன பகவான் நாராயணரின் கட்டளைபடி பல தேவர்களால் பராமறிக்கபடுகிறது். அதாவது சூரியனை பராமரிக்க சூரியதேவன், மழைக்கு வருணன்,.....இபபடி எல்லாவற்றிக்கும் உள்ளன.

இந்த 5 தேவர்களான (யமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி-குமாரர்கள்) ஆகியோரின் வரத்தினால், இவர்கள் தங்களது ஆன்ம வடிவில் இணைந்து, அவளை தொடாமலேயே தேவர்களின் சக்தியினால் தனது அம்சமான தர்மர்,பீமன்,அர்ஜுனன்,நகுலன் & சகாதேவன் ஆகியோர்களை உடனடியாக ஒரு குழந்தையாக கொடுத்தார்.


எனவே, இந்த பஞ்ச பாண்டவர்கள் பற்பல தேவர்களின் முலமே பிறக்கிறார்கள். இது சாதாரண மக்களாகிய நமக்கு பொருந்தாது. அப்படி இந்த காலத்திலேயும் பற்பல தேவர்கள் முலம் பிறக்க சாத்தியமில்லை. மேலும், குந்திக்கு இப்படி பிறக்கும் குழந்தையினால், அவளது கற்புக்கு எந்த வித களங்கங்களும் ஏற்படாது. அதாவது இது தேவர்களின் செயல்

குந்திபோஜனின் இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்திக்கு மந்திரத்தை வரமளித்தார். பின் குந்திதுர்வாசரின்  மந்திரத்தைச் சோதித்து பார்க்க இந்த குழந்தைகளை பெறுகிறாள்.

மஹாபாரதத்தில், குந்தி பஞ்ச-பாண்டவர்களை எப்படி பெறுகிறாள் என இங்கே பார்க்கலாம்....



முதலில், தருமரை குந்தி பெறுகிறாள்.

மஹாபாரதம்,. ஆதிபர்வம் பகுதி 123

வைசம்பாயனர் சொன்னார், " ஜனமேஜயா! காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2)

தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, " குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்?" என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, "நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்" என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)
அறம்சார்ந்த மகனை {யுதிஷ்டிரனை} அடைந்த பாண்டு, மறுபடியும் தனது மனைவியிடம்,(9,10)


அடுத்து , வாயு தேவனின் அருளால்,  குந்தி பீமனை பெறுகிறாள்.:

"க்ஷத்திரியர்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையெனின் அவன் க்ஷத்திரியன் இல்லை என்பது ஞானமுள்ளோர் தீர்மானம். எனவே, ஒரு பெரும் பலம் நிறைந்த குழந்தையைக் கேட்பாயாக" என்றான். இப்படித் தனது தலைவனால் {பாண்டுவால்} பணிக்கப்பட்ட குந்தி வாயு தேவனை அழைத்தாள்.(11) இப்படி அழைக்கப்பட்ட அந்தப் பெரும் வலிமை கொண்ட காற்றுத் தேவன் {வாயு}, மானை வாகனமாகக் கொண்டு அவளிடம் வந்து,

" குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்? உனது இதயத்தில் இருப்பதை என்னிடம் சொல்வாயாக" என்று கேட்டான்.(12) அவள் அடக்கத்துடன் புன்னகைத்து, " தேவர்களில் சிறந்தவரே, எனக்குப் பெரிய உடலுறுப்புகளும் பெரும் பலமும் கொண்டு, அனைவரின் செருக்கையும் சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு பிள்ளை வேண்டும்" என்று கேட்டாள்.(13)

அந்த வாயு தேவன், பிற்காலத்தில் பீமன்[3] என்று அழைக்கப்பட்டவனும், வலிமையான கரங்களும், முரட்டுத்தனமான ஆற்றலை கொண்டவனுமாக ஒரு குழந்தையை அவளிடம் பெற்றான். பாரதா! அந்தக் குழந்தை பிறந்ததும், முன்பைப் போலவே ஓர் அசரீரி,(14)

அடுத்து , பின் பல தவங்களுக்கு செய்து, இந்திரனின் அருளால்குந்தி அருஜுனனை பெறுகிறாள்:

அதன்பின்பு, குருக்களின் மன்னனான பாண்டு, பெரும் முனிவர்களுடன் ஆலோசனை செய்து, குந்தியை ஒரு முழு வருடத்திற்கு நோன்பிருக்கக் கட்டளையிட்டான்.(25) பாரதா, அதே நேரத்தில் அவனும் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவமும், நோன்பும் செய்யத் தொடங்கினான்.(26) காலையிலிருந்து மாலை வரை மனத்தை ஒருமுகப்படுத்தித் தேவர்களின் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக கடும் தவத்தைச் செய்தான். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திரன் பாண்டுவை அணுகி,(27) அவனிடம்,

" மன்னா! மூவுலகத்தாலும் கொண்டாடப்படும் மகனை நான் உனக்குத் தருவேன். அவன் பிராமணர்கள், பசுக்கள் மற்றும் நேர்மையான மனிதர்களின் நலனைக் காப்பான்.(28) நான் உனக்குக் கொடுக்கும் மகன், தீயவர்களை அழித்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பான். அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனாக இருந்து, எந்த எதிரிகளாலும் வென்றிட இயலாதவனாக இருப்பான்" என்றான்.(29)

வாசவனால் (தேவர்கள் மன்னனால் {இந்திரனால்}) இவ்வாறு சொல்லப்பட்ட குரு பரம்பரையின் அறம்சார்ந்த மன்னன் {பாண்டு}, அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, குந்தியிடம்,(30) " நற்பேறு பெற்றவளே, உனது நோன்பு வென்றது. தேவர்களின் தலைவன் மனநிறைவை அடைந்து, உனது விருப்பத்தைப்போலவே, தெய்வீக சாதனைகளையும் பெரும் புகழையும் அடையப் போகும் மகனை உனக்குக் கொடுக்க விரும்புகிறான்.(31)

அந்த மகன் அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவனாகவும், பெரும் ஞானமுள்ளவனாகவும் இருப்பான். பெரும் ஆன்மாவைக் கொண்டவனாகும், கதிரவனுக்கு நிகரான பிரகாசத்துடன் கூடியவனாகவும், போர்க்களத்தில் நிகரற்றவனாகவும், பெரும் சாதனைகளைச் செய்பவனாகவும் அவன் இருப்பான். அவன் பேரழகனாகவும் இருப்பான். அழகிய இடையும் இனிய புன்னகையும் கொண்டவளே, தேவர்களின் தலைவன் உன்னிடம் கருணை கொண்டிருக்கிறான். அவனை அழைத்து, க்ஷத்திரிய அறங்களுக்கு இருப்பிடமான மகனைப் பெறுவாயாக" என்றான்.(32,33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்தக் கொண்டாடப்படும் குந்தி, தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், சக்ரனை (தேவர்களின் மன்னன்) அழைத்தாள். அப்படி அழைத்ததால், அவன் அவளிடம் வந்து, அர்ஜுனன் என்று பின்பு அழைக்கப்பட்டவனை அவளிடம் பெற்றான்[5].(34)



கடைசியாக  , அஸ்வினி தேவர்களின் அருளால்குந்தி நகுலன் & சகாதேவனை பெறுகிறாள்’  - ஆதிபர்வம் பகுதி 124

தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட குந்தி, அதற்குச் சம்மதித்து மாத்ரியிடம், "நேரத்தையிழக்காமல், தேவர்களில் எவரையாவது நினைப்பாயாக. அவர் மூலமாக, அவரையே போன்ற பிள்ளையை நீ நிச்சயம் பெறுவாய்" என்றாள்.(15)

மாத்ரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அசுவினி இரட்டையர்களை நினைத்தாள். அந்த அசுவினிகள் வேகமாக அவளிடம் வந்து, பூலோகத்தின் ஒப்பற்ற அழகர்களான நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களைப் பெற்றனர். அவர்கள் பிறந்த போது ஓர் அசரீரி,(16,17)

"சக்தியிலும், அழகிலும் இந்த இரட்டையர்கள், அசுவினி இரட்டையர்களைக் காட்டிலும் மேலானவர்களாக இருப்பார்கள்." என்றது. அக்குழந்தைகள் பெரும் சக்தியும், அழகும் கொண்டு, அந்த மொத்தப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்தனர்.(18)

மன்னா! அந்தப் பிள்ளைகள் பிறந்த பிறகு, அந்த நூறு சிகரம் கொண்ட மலையில் வசித்த முனிவர்கள் அவர்களை வாழ்த்தி, அவர்களது பிறப்பிற்கான முதல் சடங்கைச் செய்து, அவர்களுக்கான பெயர்களைச் சூட்டினர்.(19)

குந்தியின் மக்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் என்றும், இரண்டாமவன் பீமசேனன் என்றும், மூன்றாமவன் அர்ஜுனன் என்றும்,(20) மாத்ரியின் மக்களில் முதலில் பிறந்தவன் நகுலன் என்றும் அடுத்தவன் சகாதேவன் என்றும் அழைக்கப்பட்டனர்[1]. {அந்தப் பிராமணர்கள் இவ்வாறே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்.(21)


இவர்கள் தங்களது ஆன்ம வடிவில் இணைந்து, உடனடியாக குழந்தையை கொடுத்தார்கள். இது தேவர்களால் மட்டுமே தான் முடியும். ஒரு சாதாரண மனிதர்களால் இப்படி செய்ய முடியாது.


எனவே, இதன் மூலம் நாம் அறிவது புராண காலத்து மக்களை, தற்கால சாதாரண மக்களுடன் ஒப்பிடுவதே தவறானது. ஏனெனில், சாதாரண மனிதர்களால் இப்படிப்பட்ட செயல்களை செய்ய முடியாது.