இந்து
மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை. ?
பெண்கள் என்று வரும் போது, இந்து மதத்தில் பல விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சில விதிமுறைகள் பெண்களுக்கு பயன் அளிப்பதாகவும், சரியானதாக பட்டாலும் கூட, மேலும் முக்கியமான சடங்குகளில் இருந்து பெண்களை ஒதுக்கப்படும் விதமாகவும் அமைகிறது.
அப்படிப்பட்ட சடங்குளில் ஒன்று தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்கள். பெற்றோர்களின் கடைசி காரியங்களை மகனே செய்ய வேண்டுமே என இந்து மதத்தின் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. இந்த கடைசி காரியங்களை பெண்கள் செய்ய அனுமதிப்பதில்லை.
பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள தம்பதிகள் இருக்கும் உதாரணங்களை பற்றி பார்க்கலாமா? அப்படிப்பட்டவர்களின் கடைசி காரியத்தை அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண் உறவினரே செய்ய வேண்டும். அதனால் பெற்றோர்களின் மீதான பெண்களின் உரிமையை இந்த விதிமுறை பறிக்கும் விதமாக அமைகிறது. அதே போல் பெற்றோர்களின் சொத்துகளின் மீதும் அவர்களின் உரிமையை இந்த விதி பறிக்கிறது. ஆனால் இந்த கடைசி காரியங்களை ஏன் பெண்கள் செய்ய அனுமதிப்பதில்லை என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா?
பெண்கள் என்பவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள் என்றும் உணர்வுபூர்வமானவர்கள் என்றும் இந்து சமய நூல்கள் கூறுகிறது. இறந்தவர்களின் மீது அவர்கள் அதிகளவில் பாசம் கொண்டிருப்பார்கள். அதனால் அந்த இறப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் கடைசி காரியங்களில் ஈடுபடும் போது, மிகுந்த துயரத்திற்கு ஆளாவார்கள். இதனால் சடங்குகளை முழுமையாக செய்ய முடியாமல் போகும்.
பெண்மை எனும் காரணங்கள் மற்றும் கர்ப்பம், மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் கடைசி காரியங்களை செய்வதற்கு இடையூறாக இருக்கும். இந்த காரணிகளை மனதில் கொண்டு தான் கடைசி காரியங்களில் பெண்களை ஈடுபடுத்த அனுமதிப்பதில்லை.
No comments:
Post a Comment