Thursday, 17 August 2017





உண்மையில் புராணங்களில் யாரை இறைவனாக சொல்கிறது ?  எப்படி ?



பொதுவாக, புராணங்கள் பல கடவுள்களை புகழ்ந்து. சில புராணங்கள்  பகவான் விஷ்ணுவையும், சில புராணங்கள் சிவனையும், சில புராணங்கள் பற்பல தேவர்களையும் புகழ்ந்து, அவர்களே இறைவனாக சொல்கிறது  இப்படி பல குறிப்புக்கள் உள்ளன  இப்படி உள்ள புராண கருத்துக்களை நாம் எப்படி அணுக வேண்டும் என்று பார்க்கலாம்.

புராணங்களில் குணங்களை வைத்து மூணு வகையாக பிரிக்கப்படுகிறது.

பாரம்பரியமாக 18 மஹா-புராணங்கள் உள்ளனஇந்த பதினெட்டு மகா புராணங்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்படுகின்றன மற்றும் ஒவ்வொரு குழு ஆறு புராண  நூல்கள் உள்ளன. மஹாபுராணகளில் உள்ள இறைவன்கள்  விஷ்ணு, பிரம்மா, சிவன்.

இந்த மஹாபுராணங்கள், மூன்று கடவுள்களின் குணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இதில் பகவான் விஷ்ணு புகழை கூறும் புராணங்கள் சாத்வீக புராணங்கள் எனவும்பிரம்மாவை குறித்து சொல்லும் புராணங்கள் ரஜோ புராணங்கள் எனவும், சிவனை குறித்து சொல்லும் புராணங்கள் தமோ புராணங்கள் என்கிறது.

பதினெட்டு புராணங்கள் மூணு பிரிவுகளை  பத்ம புராணம் (உத்தர காண்ட  236.18-21) இல் ,  சிவபெருமான்உமா தேவிக்கு சொல்கிறார் ...

" அழகான பெண் (உமா தேவி):-  விஷ்ணு, நாரத, பாகவத, கருடன், பத்ம மற்றும் வராக புராணங்கள் நற்குணத்தின் (சத்வ குண) புராணங்கள் என்பதை அறிய வேண்டும். ப்ரஹ்மாண்ட, பிரம்மா வைவர்த்த, மார்க்கண்டேயர், பவிஷ்ய, வாமன மற்றும் பிரம்மா ஆகியவை தீவிர (ரஜோ குண) புராணங்களாக உள்ளன. மத்ஸ்ய, கூர்ம, லிங்க, சிவ, ஸ்கந்த அக்னி ஆகியவை அறியாமை (தமோ குண) புராணங்களாக உள்ளன. "

மேலும்மத்ஸ்ய புராணம் , 290 வது அத்தியாயத்தில் கூறுவது
மத்ஸ்ய புராணம் (53.65, 68-69)
" ஸாத்விக  புராணங்கள் பகவான் ஹரியின்  புகழையும். ரஜோ குண புராணங்கள் பிரம்மா புகழையும், தாமச குண  புராணங்கள் சிவன் மற்றும் அக்னி ஆகியோர்களின் புகழை சொல்கிறது “

இந்த புராணங்கள் :
சாத்வீக புராணங்கள் (உண்மை; தூய்மை): - 
விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம், பத்ம புராணம், வராக புராணம் ஆகியவைகள்.

ரஜஸ் புராணங்கள்  (தீவிர உணர்வு) -:
பிரம்மானந்த புராணம், பிரம்ம வைவர்த, மார்க்கண்டேயர் புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம் ஆகியவைகள்.

தமஸ் புராணங்கள் (இருள்; அறியாமை):- 
மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், லிங்கம் புராணம், சிவ புராணம், ஸ்கந்த புராணம், அக்னி புராணம் ஆகியவைகள்.

பொதுவாக, புராணங்களுக்கு மத்தியில் ஏதேனும் அபிப்பிராய பேதங்கள் இருப்பின், ஸாத்வீக புராணங்களின் கருத்தினை ஏற்க வேண்டும் என்று மத்ஸ்ய புராணம், பத்ம புராணம், மனு சாஸ்திரத்தின் முலம் அறியலாம். அதன்படி, எல்லா புராணங்களிலும் விஷ்ணுவின் உயர்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ள சமயத்தில், சில புராணங்களில் சிவன், அக்கினி, தேவி ஆகியோர்களின் உயர் தன்மைகளை நாம் காண்கிறோம். விஷ்ணுவே பரம்பொருள் என்னும் வேத ஞானத்தின் இறுதி முடிவிற்கும் ஸாத்வீக புராணங்களின் அதே முடிவிற்கும் இப்படிப்பட்ட முரண்பட்டதாக இருப்பதால், இந்த புராண கருத்துக்களை மட்டும் நாம்  நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

இதனை ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானே முருகனிடம் கூறுகிறார்.

ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத்
பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம் மோக்ஷ -ஸ்தானம்
ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி
ஸ்கந்த புராணத்தில் சிவபெருமான், கார்திகேயனிடம் கூறுகிறார் ..

'சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி. அதுவே  எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது' என்கிறார்.

அறியாமையினால் கவரப்பட்டு கிருஷ்ணரின் உயர்தன்மையை அறிய இயலாமல் இருக்கும் சிவபெருமானது பக்தர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பதற்கானதாகும்.

 ஏதேனும் ஒரு தேவரின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அவர்களை படிப்படியாக உயர்த்தும் என்பதால், அந்த நம்பிக்கையை கிருஷ்ணரே பலப்படுத்துகிறார் என்பதை நாம் கீதையில் (7.21) காண்கிறோம்.

‘எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.’

Bg 7.22 — இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும்.

Bg 7.23 — தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள், தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர், ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்.

விஷ்ணு ஒருவனுக்கே சத்வகுணம் எப்போதும். பிரமன் ரஜோகுணத்தன் ருத்ரனாம் சிவன் தமோகுணமேயுடையான் என்று வேத, உபநிஷத், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள், ஸாத்விக புராணங்கள்(ஆதிசங்கரர் முதலியோரும் எடுத்துக்காட்டிது)

வேதத்தில்,"தமஸஸ்து  பாரே"(தமஸ்ஸுக்கு அக்கரையில்) என்று,
புருஷஸூக்தத்திலும்,
"ரஜஸ:பராகே"(ரஜஸ்ஸுக்கு அக்கரையில்) என்று விஷ்ணு ஸூக்தத்திலும் ஸ்ரீநாராயணன் குறிப்பிடப்படுகிறார்.

சைவர்களால் கற்பிக்கப்பட்ட யோக சூடாமண்யுபநிஷத்தில் (46 ஆவது)
"ராஜஸோ  ப்ரஹ்மா  ஸாத்வககோ  விஷ்ணு: தாமஸோ  ருத்ர:

"பிரம்மா ரஜோ குணம்,விஷ்ணு சாத்வீக குணம், ருத்ரர் தாமச குணம்' என்கிறது.

லிங்கபுராணம் பதினாலாவது அத்தியாயத்தில் கூறுகிறது ...

 " ஹிரண்யகர்ப்போ  ரஜஸா  தமஸா  ஸங்கர: ஸ்வயம்
    ஸத்வேந  ஸர்வகோ  விஷ்ணு: ஸர்வாத்மா ஸதஹந்மய:

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன்  தமோகுணத்தோடும், ஸர்வாத்மாவும் சிதசித்  ஸ்வரூபியும் ஆன  விஷ்ணு  ஸத்வத்தோடும் கூடியவர்.

"த்வத்கோபஸம்பவோ  ருத்ரஸ்  தமஸா   ஸமாவ்ருத:
த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா  ரஜஸா பிதாமஹ:
த்வத்ஸ்வரூபாத்  ஸ்வயம் விஷ்ணு: ஸத்வேந புருஷோத்தம:

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன்கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு
ஸத்வ குணமுடையவன் என்று கூறுகிறது.

எனவே, பகவான் கிருஷ்ணர் / விஷ்ணு /நாராயணர் - முழுமுதற் கடவுள் என்று எல்லா ஸாத்வீக சாஸ்திரங்களும் கூறுவதால் நாமும் புராணங்களில் உள்ள உண்மையை புரிந்து கொள்ளலாம்.



2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. in ur vishnu. IN MY VIEW

    ReplyDelete