Wednesday, 26 December 2018


இந்துமதம் கூறும் இறைவன் பகவான் நாராயணர் / விஷ்ணு / கிருஷ்ணரே ...



சனாதன தர்ம வேதங்கள், புராண-இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள இறைவன் யார் என்பதை நாம் பார்க்கலாம்.

1. வேதங்கள் கூறும் இறைவன் யார்  ?

பகவான் நாராயணரிடமிருந்தே ருத்திரர் ( சிவன்), பிரம்மா, விஷ்ணு வருவதாக வேதங்கள் கூறுகிறது. இதில் நாராயணர் தானே விரிவாங்கமாக விஷ்ணுவாக வருகிறார்.  எனவே, விஷ்ணு நாராயணரின் அங்கம். ஆனால் ப்ரம்மா,ருத்திரர் (சிவன்) ஆகியவர்கள் நாராயணரால் படைக்கப்பட்டவர்கள்.

ரிக் வேதத்தில் …..

அஸ்ய தேவஸ்ய மீள்ஹுஷோ வயா விஷ்ணோரேஷஸ்ய ப்ரப்ருʼதே² ஹவிர்பி:
விதே³ ஹி ருத்³ரோ ருத்³ரியம் மஹித்வம் யாஸிஷ்டம் வர்திரஶ்விநாவிராவத் 7.040.05

“பகவான் விஷ்ணுவிடமிருந்தே, ருத்திரர் (சிவன்) தனது சக்தியை பெறுகிறார்” - ரிக் வேதம் 7.40.5

''அஸ்ய தேவஸ்ய மீடுஷோ வயா விஷ்ணோரேஷஸ்ய ப்ரப்ருதே ஹவிர்பி: |
விதே ஹி ருத்ரோ ருத்ரியம் மஹத்வம் யாஸிஷ்டம் வர்த்திர் அஶ்விநாவிராவத் ||


"விருப்பத்தினை பொழிபவனும், வேண்டத்தக்கவனும், இயற்கையான தேவனுமாகிய விஷ்ணுவுக்கு கிளை போன்றவனான பரமஶிவன் ஸர்வமேதம் என்னும் பெரிய யாகத்தில் தன்னை உள்ளிட்ட அனைத்து ஹவிஸ்ஸுக்களையும் கொடுத்து ருத்ரபதவியைச் சேர்ந்ததான பெருமையை அடைந்தான். அஶ்விநீ தேவதைகளே ! செல்வம் நிரம்பிய ஸ்தானத்தினை நீங்களும் விஷ்ணுவின் அருளினால் தான் அடைந்தீர்கள்." - ரிக்வேதம்- மண்டலம் -7 ஸூக்தம்-41-5

ஓம் தத் விஷ்ணு பரமம் பதம் சதா பஸ்யந்தி சுராய

"எல்லா வேதங்களும் (அதாவது தேவர்களும்) எப்போதும் விஷ்ணுவின் பாதத்தையே நோக்கிக்கொண்டு இருகிறார்கள் " - ரிக் வேத 1.22.20

பரோ மாத்ரயா தந்வா வ்ருʼதாந தே மஹித்வமந்வஶ்நுவந்தி
உபே தே வித்³ ரஜஸீ ப்ருʼதி²வ்யா விஷ்ணோ தே³ த்வம் பரமஸ்ய வித்ஸே 7.099.01

'விஷ்ணு கூறுகிறார் 'சூரியன் மற்றும் அக்கினி ஆகியவைகளை உருவாக்கினார் ' - ரிக் வேதம் 7.99.1

சந்த்³ரமா மநஸோ ஜாதஶ்சக்ஷோ: ஸூர்யோ அஜாயத
முகா²தி³ந்த்³ரஶ்சாக்³நிஶ்ச ப்ராணாத்³வாயுரஜாயத 10.090.13

"பிரம்மன் (பரம புருஷர் நாராயணர்) சூரியன், அக்னி, இந்திர, வாயு மற்றும் சந்திரனை உருவாக்கினார்" - ரிக் வேதம் 10.90.13

விஷ்ணோர்நு கம் வீர்யாணி ப்ர வோசம் : பார்தி²வாநி விமமே ரஜாம்ஸி
யோ அஸ்கபாயது³த்தரம் ஸதஸ்த²ம் விசக்ரமாணஸ்த்ரேதோருகா³: 1.154.01

“நான் விஷ்ணுவின் வீரச் செயல்களை கூறுவேன். அவனே மூவுலகங்களை (வாமன ரூபம் எடுதது தன் காலால்) அளந்தான். அந்த விஷ்ணு முனிவர்களால் போற்றப்படுபவன்.” - ரிக் வேதம்   1.154.1

ப்ர தத்³விஷ்ணு: ஸ்தவதே வீர்யேண ம்ருகோ³ பீம: குசரோ கி³ரிஷ்டா
யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷ்வதிக்ஷியந்தி புவநாநி விஶ்வா 1.154.02

 'அந்த விஷ்ணுவின் மூன்று பரந்த கம்பீர அடியினாலும், நடைகளினாலேயே எல்லா உலகங்களும் நிலைக்கின்றன.'  ரிக் வேதம் 1.154.2

தத³ஸ்ய ப்ரியமபி பாதோ² அஶ்யாம் நரோ யத்ர தே³வயவோ மத³ந்தி
உருக்ரமஸ்ய ஹி ³ந்துரித்தா² விஷ்ணோ: பதே³ பரமே மத்வ உத்ஸ: 1.154.05

'அந்த விஷ்ணுவின் பரம பதத்திலே அமிருத ரஸச் சுனையிருக்கிறது'.  ரிக் வேதம் 1.154.5

தத்ததி³³ஸ்ய பௌம்ஸ்யம் க்³ருணீமஸீநஸ்ய த்ராதுரவ்ருʼகஸ்ய மீள்ஹுஷ:
: பார்தி²வாநி த்ரிபிரித்³விகா³மபிருரு க்ரமிஷ்டோருகா³யாய ஜீவஸே 1.155.04

'ஆதலால் நாங்கள் எல்லோரின் தலைவனும், பாலகனும், பகையற்றவனும்,பவிஷ்டனுமான அந்த விஷ்ணுவின் ஆற்றலை போற்றுகிறோம். அவன் பலர் புகழத்தக்க உலகத்தை அருள் பாலிக்க தன் மூன்று அடிகளால் மூவுலகையும் கடந்தான்.   ரிக் வேதம் 1.155.4

சதுர்பி: ஸாகம் நவதிம் நாமபிஶ்சக்ரம் வ்ருʼத்தம் வ்யதீ ரவீவிபத்
ப்³ருʼஹச்ச²ரீரோ விமிமாந ருʼக்வபிர்யுவாகுமார: ப்ரத்யேத்யாஹவம் 1.155.06

'விஷ்ணு தன் தனிச் சக்தியினால் பலவித இயல்புள்ள எல்லா கோணத்திலும் தன்னுடைய சக்கரங்கள் போல் சுழன்று பற்பல அவதாரங்களை நிகழ்த்துகிறான். அவன் பக்தியால் மட்டுமே அறியப்படுகிறான். அவன் தருணன், சிறுவனல்ல (குள்ள வடிவில் வந்த வாமன தேவர்). நாம் பக்தியோடு அழைக்கும் போது வருகிறான்'.   ரிக் வேதம்   1.155.6

 பவா மித்ரோ ஶேவ்யோ க்ருʼதாஸுதிர்விபூதத்³யும்ந ஏவயா ஸப்ரதா
அதா தே விஷ்ணோ விது³ஷா சித³ர்த்ய: ஸ்தோமோ யஜ்ஞஶ்ச ராத்யோ ஹவிஷ்மதா 1.156.01

'விஷ்ணுவே நமக்கு இன்பத்தை அளிப்பவன், எல்லா யாகங்களின் பொருள்களை ஏற்ப்பவன்' - ரிக் வேதம்  1.156.1

: பூர்வ்யாய வேதஸே நவீயஸே ஸுமஜ்ஜாநயே விஷ்ணவே ³தா³ஶதி
யோ ஜாதமஸ்ய மஹதோ மஹி ப்³ரவத்ஸேது³ ஶ்ரவோபிர்யுஜ்யம் சித ப்யஸத் 1.156.02

'அவன் மிகப் பழையவனும், எல்லாவற்றையும் படைப்பவனும், புதியவனும், தனக்கு மூலம் இல்லாமல் தானே பிறந்தவனுமாகிய விஷ்ணுவே'. - ரிக் வேதம்   1.156.2

தமு ஸ்தோதார: பூர்வ்யம் யதா² வித³ ருʼதஸ்ய ³ர்பம் ஜநுஷா பிபர்தந
ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்³விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமஹே 1.156.03

"வழிபடுபவர்களே! ஆதியான விஷ்ணுவை ருதத்தின் கருவாக நீங்கள் அறிவது போல் நீங்கள் போற்றுங்கள்அவனுடைய நாமத்தை அறியும் நீங்கள் அவனை புகழ்ந்து பாடுங்கள். விஷ்ணுவே! நாங்கள் மாகானான உன்னுடைய ஸுமதியை போற்றுவோமாக" - ரிக் வேதம்   1.156.3

ஆத்மதா³ ³லதா³ யஸ்ய விஶ்வ உபாஸதே ப்ரஶிஷம் யஸ்ய தே³வா:
யஸ்ய சா²யாம்ருʼதம் யஸ்ய ம்ருʼத்யு: கஸ்மை தே³வாய ஹவிஷா விதே 10.121.02


“அவர் (ஹிரண்யாகர்பா என அழைக்கப்படுகிறார்) இவர், "மூச்சு, சக்தி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் கொடுப்பவர், அவர் கட்டளைகளோ எல்லா கடவுளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்" - ரிக் வேதா 10.121.2


'பலவிதமான தேவர்கள் விஷ்ணுவின் உடலின் பல்வேறு அங்கங்களை போன்று, விஷ்ணுவின் துணைகளாக இருக்கிறார்கள்' - ப்ரஷ்ன உபநிஷத் - 2.1-4:

aniravamo  devatanamishnuh paramah
பகவான் விஷ்ணுவே எல்லா தேவர்களின் தலைமையானவர்' - தைத்திரீய சம்ஹிதா -5.5.1

"அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம: தடந்தர ஸர்வ தேவதா:"


தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்” – ஐதரேய ப்ராஹ்மண 1.1.1

நாராயண சூக்தம் சொல்கிறது..

நாராயணம்  மகாகிரியேயம்   விஷ்வத்மநாம்  பாராயணம் |
நாராயண  பரோ  ஜோதிர்-ஆத்ம  நாராயணத்  பரா  || 4 ||

இறைவன் நாராயணன் மிகப்பெரிய அறிவு (மஹாஜினீய), உலகின் ஆத்மா (விஸ்வத்மா) மற்றும் சிறந்த அடைக்கலம் (பாராயண). நாராயணர் மிகவும் சுறுசுறுப்பானவர் (பராஜோதி), நாராயணர் சூப்பர் ஆன்மா (பரமாத்மா).

நாராயணம் பரம் பிரம்மா தத்வம் நாராயண பரா |
நாராயண பரோ தியத த்யனம் நாராயண பரா || 5 ||

நாராயணர் மிகப்பெரிய சத்தியம் (பரப்பிரம்மா), நாராயண உச்ச தத்துவம் (பரதத்வா). நாராயணன் தியானிப்பவர்களுள் சிறந்தவர் (பரத்யதா) மற்றும் சிறந்த தியானம் (பரத்யான). "

ரிக் வேத..நாராயண ஸீக்தம்..வசனம்  12 ல்

பகவான்.நாராயணர் கூறுகிறார்

'நானே பரமாத்மா, நானே பிரம்மா, நானே சிவன், நானே விஷ்ணு.......'

இதில் நானே சிவம், பிரம்மா,விஷ்ணு எனகிறார்


புருஷ ஸீக்தம்..நியாஸ பகுதியில்….

நாராயணர் கூறுகிறார்..

'ஒம் மஹா விஷ்ணு புருஷாயா..........
'ஒம் ஜன ருத்ர புருஷாய.....'

இதில் நானே ருத்ரம்் எனகிறார்.


புருஷ சூக்தத்தில்..

நாராயணரே பரம புருஷர் எனவும்.

'இவர் ஸ்ரீதேவிக்கும், லஷ்மி தேவியினுடைய கணவர்’ என்றும் வசனம்  2.6 கூறுகிறது.


மேலும், இந்த புருஷ சூக்தம் எல்லா வேதங்களிலும் படிக்கபடுவதால் எல்லா ஸ்ருதிகளின் சாரம் என்று வியாசர் மகாபாரதத்தில் மோஷ தர்மத்தில் கூறுகிறார்.
  
யஜீர் வேதம்

ஷவோ தேவே எக நாராயணா துவித்யச கர்ஷித்

பகவான் ஸ்ரீநாராயணரே ஒருவரே முழுமுதற் கடவுள். அவரைத்தவிர இரண்டாவதாக வேறு எவறும் இல்லை.
  
ஏகோ வை நாராயண ஆஸீன் நப் ரஹ்மா ஈஷானோ நாபோ நாக்னி-ஸமௌ நேமே த் யாவ்-ஆப்ருதிவீ நக்ஷத்ராணி ஸூர்ய:

"படைப்பின் ஆரம்பத்தில் பரம புருஷரான நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மாவோ, சிவனோ, நீரோ, அக்கினியோ, ஆகாயத்தில் சந்திரனோ, நட்சத்திரங்களோ, சூரியனோ இருக்கவில்லை" - மஹா உபநிஷதம்: I-1-4)

அதபுருஷோ வை நாராயணோ () காமயத பிரஜா: ஸ்ருஜேயேதி

"பின்னர், பரம புருஷ பகவானான நாராயணர் உயிரினங்களை படைக்க விரும்பினார்"- நாராயண உபநிஷத்
  
 நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நாராயணாத் ப்ரஜாபதி: ப்ரஜாயதே, நாராயணாத் இந்த்ரோ ஜாயதே, நாராயணாத் அஷ்டௌ வஸவோ ஜாயந்தே, நாராயணாத் ஏகாதஷ ருத்ரா ஜாயந்தே, நாராயணாத் த்வாத ஷாதித்யா:

"நாராயணரிடமிருந்தே பிரம்மா பிறந்தார். நாராயணரிடமிருந்தே பிரஜாபதிகள் பிறந்தனர். நாராயணரிடமிருந்தே எட்டு வசுக்கள் பிறந்தனர் நாராயணரிடமிருந்தே பதினொரு ருத்ரர்கள் பிறந்தனர், நாராயணரிடமிருந்தே பன்னிரண்டு ஆதித்யர்கள் பிறந்தனர்" - நாராயண உபநிஷத்

ப்ரஹமண்யோ தேவகீ-புத்ர:

தேவகியின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்" - நாராயண உபநிஷத்

  ஸீபால உபநிஷத்

'யஸ்ய ம்ருத்யு: சரீரம் ஏஷ ஸர்வபூதாந்தராத்மா நாராயண:'

பரமாத்மாவான நாராயணர் தாமே வடிவெடு்க்க, அதாவது லீலை புரிய நினைத்தார் (  படைத்து, காத்து, அழித்து). அதாவது நாராயணரே பரம புருஷ பகவான்.

'யஸ்யப்ருத்வீ சரீரம் .......ஏஷ ஸர்வ
பூதாந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண'

பஞ்ச பூதங்கள், புலன்கள் என்று எல்லாப் பொருள்களையும் கூறி அவை ஒவ்வொன்றிலும் உள்ளேயும், வெளியேயும் பரமாத்மாவான நாராயணரே பரவியிருக்கிறார்.

கடோபனிஷத்தில்:

ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்

எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்

யஜுஸ் ஸம்ஹிதா 5.5
அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:

தேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .

 ஸாம  வேதம்
  
ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :

அத புநரேவ நாராயணஸ்ஸோ()ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ ()ஜாயத்

மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.”

 அதர்வண  வேதம்

krishnam tam vipra bahuda yajanti
govindam santam bahudharadhyanti gopijanavallabho bhuvanani dadhre svahashrito jagad ejayat suretah

'பல பிராமணர்களால் வழிபடப்படுபவர் பகவான் கிருஷ்ணர். மேலும் பலரும் நித்தியமான கோவிந்தனை வழிபடுகின்றனர். பகவான்  கோபிஜனவல்லபாரால் உலகங்கள் பராமரிக்கப்படுகிறது. அவரது சக்தியால் பிரபஞ்சம் நகருகிறது' - கோபால்தபானி உபநிஷதம் 1.15

etasyaiva yajanena candra-dhvajo gata-mohatmanam vedayitva omkarantaralikam manum avarttayan sanga-rahito'bhyapa tat

“அவரை (கிருஷ்ணரை) வணகுவதாலே ருத்திரன் மாயையிலிருந்து விடுபடுகிறார் மற்றும் அமைதியான இடத்தில அவரது நாமங்களை ஜபம் செய்து இறைவனை அடைத்தார்' - கோபால்தபானி உபநிஷதம் 1.31

"அனைத்து வேதங்களும் பகவானது (கிருஷ்ணரது) புகழையே பாடுகிறது"-  கோபால-தபானி உபநிஷதம்

tasmat krishna eva paro devas tam dhyayet tam raset tam bhajet tam yajed ity om tat sad iti

“எனவே, கிருஷ்ணா மிக உயர்ந்த இறைவனாவார். அவர்  மீது தியானித்து, அவரை மகிமைப்படுத்துங்கள், அவரை சேவித்து அவரை வணங்க வேண்டும். ஓம் தத் சத் “ -  கோபால்தபானி உபநிஷதம் 1.54

வேத உபநிஷத்துக்கள்…


"அனைத்து வேதங்களும் பகவான் (கிருஷ்ணர்) தாமரை பாதங்களில் வணங்குகிறது, அவருடைய புகழை பாடுகின்றன" -கதா உபநிடதத்தில் 1.2.15

ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்:

ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் யமம் வருணமேவ நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே

பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்


முக்தலோபனிஷத்தில்:

புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்

புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.


சாந்தோக்யத்தில் :

விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய
முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு”’

சாஸ்வதம் சிவம் அச்யுதம் உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.

ஆத்மோபநிஷத்தில் :

சிவ ஏவ ஸ்வயம் ஸாக்ஷாத் அயம் ப்ரஹ்மவிதுத்தம்
பிரம்மாகிய நாராயணனை அறிந்தவரில் சிவன் சிறந்தவரே.

தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.

ஏகோஹவை நாராயண ஆஸீத் ப்ரஹ்மா நேஸந:

நாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.

ப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்

பிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்

நிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ()ஸ்தி கஸ்சித்

ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.
  
தைத்திரீய நாராயணவல்லியில் :

நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: தத்ஸர்வம் நாராயண: ஸ்தித:

பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.”’

  
வேத, புராணத்தில்…
  
மஹாபாரதத்தின் மோஷ தர்ம பகுதியில் கிருஷ்ணரே கூறுகிறார்:

ப்ரஜாபதிம் ருத்ரம் சாப் யஹம்-ஏவ ஸ்ருஜாமி வை
தௌ ஹி மாம் விஜானிதோ மம மாயா விமோஹிதௌ

"பிரஜாபதிகள், சிவன் உட்பட அனைவரும் என்னால் படைக்கப்பட்டவர்களே, எனது மாயசக்தியினால் கவரப்பட்டிருப்பதினால், அவர்களைப் படைத்தவன் நானே என்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்."
  
வராஹ புராணம்

நாராயண: பரோ தேவஸ் தஸ்மாஜ் ஜாதஷ் சதுர்முக:
தஸ்மாத் ருத்ரோ ()பவத் தேவ:  ஸசஸர்வ-க்ஞதாம் கத:

"நாராயணரே முழுமுதற்கடவுள்: அவரிடமிருந்தே பிரம்மா பிறந்தார். பிரம்மாவிடமிருந்தே சிவன் பிறந்தார்."
  
கருடபுராணத்தில் :

வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ப்ரஹ்மா சங்கர

வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.

ஹஸ்தே()க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி

கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’

ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.
  
விஷ்ணுபுராணம்:

பகவான் என்பவர்க்கு அளபரிய சக்தி, செல்வம், அழகு, புகழ், அறிவ, துறவு இவை முழுமையாக இருக்க வேண்டும். இவை பகவான் கிருஷ்ணரிடம் மட்டுமே உள்ளது. பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் முனிவர்கள் மற்றும் பிறருக்கு பகவான் புருஷன் என்று சொல்லப்படுவது ஒப்புக்காக மட்டுமே ஆகும். ஜனார்தனான பகவான் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். பகவானே உன் முன்னால் யார் யார் முன் வந்து நிற்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர்களே, நீரே அனைவருக்கும் ஆதி மூலம்.

 பாகவதம் :

பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில் ஆகாயத்தை அளந்தபோது, விஷ்ணுவின் பாதங்களை பிரம்மா கழுவினார், அந்த நீரே கங்கை ஆகும். அதை சிவன் தன் தலையில் தாங்கியதாலே மங்களமானார்( சிவன் ஆனார்).

பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.
  
வாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம்,

வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.

பத்மபுராணத்தில் :

 பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு: வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான்

மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய சிவனுக்கு ஆத்மா விஷ்ணு யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.


விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்

சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார்.

பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார்.

வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ;மியின் பக்தன் சிவன் எனவே வில்வஇலையை தன் தலையில் தங்குகிறார்.
  
கருடபுராணத்தில் :

பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை . அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.

வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ப்ரஹ்மா சங்கர
வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.

ஹஸ்தே()க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி

”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’

ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.


லிங்கபுராணம்:

லிங்கபுராணம் பூர்வகண்டத்தில் இரண்டாம் அத்யாயம்

'ஸர்வா அவஸ்தாஸு வை விஷ்ணோர் ஜநநம்       ஸ்வேச்சயைவ து |
லீலயா சைவ க்ருஷ்ணேந ஸ்வகுலஸ்ய ச ஸம்ஹ்ருதி ||-2-40

ஜராகாஸ்த்ரச் சலேநைவ கமநம் ஸ்வ இச்சைவ து |
த்விஜா ஶாபச் சலேநைவம் அவதீர்ண அபி லீலயா ||-2-48

“எல்லா யோனிகளிலும் ஶ்ரீவிஷ்ணு பகவான் பிறப்பது தன் சொந்த விருப்பத்தினால் தான். கண்ணன் எம்பெருமான் தன் குலத்தினை அழித்ததும் லீலையே. வேடனின் அம்பு தைத்த வ்யாஜத்தாலே வைகுண்டம் சென்றதும் தன் விருப்பத்தாலே. ப்ருகு முனிவரின் ஶாபம் என்னும் நிமித்தமாக அவதரிப்பதும் லீலையே ஆகும்.”

ஸ்காந்தபுராணம்:

பரமசிவனார் ஶ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் செய்தது ஸ்காந்தபுராணம் 130 ஆம் அத்யாயத்தில் பின்வருமாறு..

அத ருத்ரோபி தம் தேவம் ஸம்ஹாராதி க்ருத: புரா |
புமாம்ஸம் ப்ரார்தயாமாஸ ஸவசாமர்த்யவிவ்ருத்தயே || -130-38

பகவானால் உலகை அழித்தல் தொழிலில் நியமிக்கப்பட்ட பரமஶிவனாரும், தனது அழித்தல் தொழிலில் தன் திறமை மேலும் பெருக வேண்டி வாஸுதேவனை வேண்டினார்.”

ருத்ர உவாச
நித்யே நைமித்திகே சைவ ஸம்ஹாரே ப்ராக்ருதே ததா |
ஶக்தயோ மம வித்யந்தே தேவதேவ மம ப்ரபோ ||-130-39
ஆஅத்யந்திகே து ஸம்ஹாரே மம ஶக்திர் ந வித்யதே |
மஹத் துகம் மமைதத் து தேந த்வாம் ஶக்திர் ந வித்யதே ||- 130-40

“  மஹாதேவர் கூறுகிறார்: தேவாதிதேவனே ! என் இறைவனே !! நித்யம் (தூக்கம்), நைமித்திகம் (ப்ரம்மாவின் இரவு), ப்ராக்ருதம் (ப்ரம்மாவின் இறப்பு) என்ற மூன்று வித ப்ரலயங்களிலும் அனைத்தையும் அழிக்கும் சக்திகள் என் பக்கம் உள்ளன. ஆனால் இந்த ப்ரலயங்களையும் கடந்து முடிவில் நேரும் ஆத்யந்திக ப்ரலய (மோக்ஷம்) காலத்தில் அனைத்தையும் அழிக்கும் திறன் என்னிடம், உற்றிலுமாக இல்லையே ? இதுவே என் பெரிய துக்கம். இக்குறை நீங்க தாங்கள் அருள்புரிய வேண்டும்.”

ஶ்ரீப்ருஹஸ்பதிருவாச
ஶ்ரீமத் பாகவதம் தஸ்மா அபி நாராயணோ ததௌ |
ச து ஸம்சேவநாதஸ்ய ஜிக்யே சாபி தமோகுணம் ||-130-41

ப்ருஹஸ்பதி உத்தவரிடம் சொன்னது. மஹாதேவரது வேண்டுகோளை ஏற்ற பகவான் ஶ்ரீமந்நாராயணர் அவருக்கும் ஶ்ரீமத் பாகவதத்தையே உபதேசித்தார். அவரும் அதைப் பாராயணம் செய்து தமோகுணத்தை வென்றார்.”

கதா பாகவதீ தேந ஸேவிதா வர்ஷமாத்ரத: |
லயே த்வாத்யந்திகே தேநாவாப ஶக்திம் ஸதாஶிவ: || -130-42

சதாஶிவர், ஶ்ரீமத் பாகவத கதையமுதை ஒரு வருட காலம் வரை இடைவிடாது பாராயணம் செய்யவே, ஆத்யந்திக லயத்தினை (மோக்ஷம்) பெறும் ஶக்தியும் பெற்றார்”

விஷ்ணுபுராணத்தில் :

பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.

தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்
  
வேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் நாராயணர்  மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் நாராயணர் / விஷ்ணு / கிருஷ்ணரை  மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது .

மேலும் சிவ புராணம், கந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பவிஷ்ய புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம், பகாவத புராணம், ......ஆகிய எல்லா புராணாங்களிலும் பகவான் நாராயணர், விஷ்ணு, கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வேதசாஸ்திரமான  புருஷ ஸீக்தம், நாராயண ஸீக்தம், ஸ்ரீ ஸீக்தம் ஆகியவற்றிலும் பகவான் நாராயணரே முழுமுதற் கடவுள என்று ம்கூறுகின்றன.