ராமர்- சீதையை சிறு வயதிலேயே
திருமணம் செய்தாரா ?
ராமர் கல்யாணத்தின் போது வயது 23, சீதைக்கு வயது 16 என தான் சொல்கிறது !
இராமாயணத்தில் ராமர்-சீதை கல்யாணம் பற்றி கூறும்போதெல்லாம், சிலர் கூறும் வார்த்தைகள், சிறுவயதிலேயே ராமர், சீதையை திருமணம் செய்தார் என கூறுவார்கள். ஆனால் இது தவறாது என்பதே ! இதைப்பற்றிய உண்மைகளை இங்கே கொடுத்துளேன்...
ராமர் காட்டிற்கு போகும் போது அவரது வயது 25 எனில், அவர் கல்யாணத்தின் பின் சீதையுடன் வாழ்ந்தது 2 வருடங்கள் என சொல்கிறார். அதன்படி பார்த்தால் ராமர் கலயாணத்தின்போது வயது 25-2=23 வயதே !
அதுபோல் சீதையின் வயது ராமர்
வயலிருந்து 7 வருடங்கள் சீதைக்கு வித்யாசம் உள்ளது. அதன்படி மேலே கல்யாணத்தின்போது ராமர் வயது 23 எனில், சீதை வயது 23-7=16 வயது ஆகிறது !
இதோ இதன் ஆதாரங்கள் :
1) இதில் ராமர் காட்டிற்கு வரும்போது உள்ள வயதை சீதை, ராவணனுக்கு சொல்கிறாள் ..
“மிகவும் தைரியமாக இருந்த எனது கணவர் இருபத்தைந்து வயதில் இருந்தார்,என் பிறந்த நாளிலிருந்து எனக்கு பதினெட்டு ஆண்டுகள் முடித்துவிட்டேன்- 3.47.10
இதன்படி ஸ்ரீ ராமரின் வயது மற்றும் சீதாவின் வயது வயது 25 - 18 = 6 முதல் 7 ஆண்டுகள் வரை வித்தியாசம் உள்ளது !
2) அயோத்தியில் திருமணத்திற்குப் பிறகு அவர் செலவழித்த நேரத்தை பற்றி ராவணனிடம் சொல்கிறாள்...
“அவருடன் இரண்டு ஆண்டுகளாக தசரத மன்னனின் இஷ்வாகு வம்சத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தோம்” - 3.47.4
“அதன் பிறகு, மூன்றாம் வருடத்தில், ராஜா தசரதரும் ராமனுக்கு மன்னனாக பட்டாபிஷேகம் செய்ய மற்ற அமைச்சர்களும் ஆலோசனை செய்தனர்" – 3.47.5
குறிப்பு: இங்கே दश என்பது பத்து (தஸ்) என்பதல்ல, இது தசரத என்பதை கூறுகிறது, ஆனால் சில மொழிபெயர்ப்பாளர்கள் இதை பத்து எனவும் இரண்டு ஆண்டுகளை சேர்த்து 12 என தவறாக மொழிபெயர்த்து உள்ளார்கள். இது தவறு.
மேலே, ராமர் காட்டிற்கு வரும்போது வயது 25 என பார்த்தோம். இங்கே கல்யாணத்திற்கு பின் 2 வருடங்கள் தான் அயோத்தியாவில் வாழ்ந்ததாக
சொல்கிறார். எனவே, கல்யாணத்தின்போது வயது 25-2=23 என் அறியலாம்.
எனவே, கல்யாணத்தின்போது சீதாவின் வயது = சீதாவின் வயது - சீதாவின் திருமணத்திற்கு பின் வாழ்ந்த வருடங்கள் . எனவே, 18-2 = 16 ஆண்டுகள் ஆகிறது சீதாவின் கல்யாணத்தின்போது !
ஆனால், சிலர் சீதையின் வயது 6 என கூறுகிறார்கள். அதை பற்றி பார்க்கலாம் ..
1.66.15 முதல் 1.66.24 & 1.71.16 முதல் 1.71.19 வரை உள்ள வசனங்களின் கருத்துக்கள் படி பார்த்தால் சீதாவின் வயது 6 வயது
இருக்க முடியாது. ஏனெனில், இந்த வசனங்களில் பல்வேறு அரசர்கள் சீதையை மணம் முடிக்க தேடி வந்ததாகவும், சிவா தனுஷை (வில்லை) ஒடிக்க முடியாமல் போனதாகவும் சொல்கிறது !
சீதாவின் 6 வயது இருந்திருந்தால், அந்த இளவரசர்களும், அரசர்களும் மணமகளை தேடினார்களா அல்லது குழந்தையை தேடிக்கொண்டிருந்தார்களா?
அதுபோல், சீதையின் வயது 6 ஆக இருந்திருந்தால், சீதையின் மூன்று இளைய தங்கைகளின் வயதுகள் என்னவாக
இருக்கும் ? 5, 4, 3 வயதாக இருக்குமோ ?
இந்த நான்கு பேரும் ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என தான் சொல்கிறது ? இது எப்படி சாத்தியம் ?
அப்படியெனில் இந்த 4, 3 வயது குழந்தையை தான் லக்ஷ்மன், சத்துருக்கனுக்கு மணமுடித்து வைததக சொல்கிறதா
? மேலும் இவர்கள் திருமணம் முடித்து 2 இரண்டு வருடங்கள் தங்களது மாமனார் வீட்டில் இருந்ததக சொல்கிறதே ! இது எப்படி நடந்திருக்கமுடியும் ?
இவைகளை வைத்து பார்க்கும் போது சீதையும், அவளது சகோதரிகளும் சிறுவர்கள் அல்ல என எளிதாக அறிந்துகொள்ளலாம். எனவே,திருமணத்தின் போது சீதையின் வயது 16 தான். ராமரின் வயது 23 இருந்துள்ளது !
பிறகு, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் காலம் ,பின் ராவணனை அழித்து 40 வயதில் அயோத்தியில் அரசராக முடிசூட்டப்பட்டார்.
No comments:
Post a Comment