ஏகாதசி
விரதம் - உடலுக்கு ஆரோக்கியமே விஞ்ஞான உண்மை ?
பழங்கால மரபுகளுக்கு பின்னால் உள்ள அற்புதமான விஞ்ஞான காரணங்கள் பற்றி பலருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து
கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும்.
இந்து மத இலக்கியங்களில் பற்பல விரதங்களை பற்றி சொல்கிறது. இந்த விரதங்கள் இருப்பதினால்
நமது உடலுக்கு நன்மை வருகிறதா ? அல்லது இதனால் உடல் நலம் தான் பாதிக்கப்படுகிறதா என்பதை
அறிவியல் கூறும் உண்மைகளை பார்க்கலாம்...
ஏகாதசி தினத்தன்று இரவு கண்விழித்து முழித்திருப்பதற்கு மெய்ஞ்ஞான ரீதியில் மட்டுமல்ல
விஞ்ஞான ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. அன்று முழுவதும் உண்ணாமல் உபவாசமிருந்தால் இயற்கையாகவே
தேக உஷ்ணம் அதிகரிக்கும். மேலும் இரவு கண்விழிப்பதாலும் உடல் உஷ்ணம் அதிக அளவில் அதிகரிக்கும்.
இவ்விதம் உருவாகும் இந்த வெப்பத்தால், நாம் ஏற்கெனவே உட்கொண்ட உணவுகள், நீர், காற்று
இவைகளின்
வாயிலாக நம் உடலில் சேர்ந்த நுண்ணிய நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு நம் உடல்
பரிசுத்தமாகிறது. இதை ஏன் மற்ற நாள்களில் மேற்கொள்ளக்கூடாது?
ஏகாதசி அன்று மட்டும் ஏன் செய்யச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் கூறியுள்ளனர்
நம் முன்னோர்கள். ஏகாதசி அன்று சந்திரனின் கதிர்கள் நம் உடலில் பாய்ந்து அதிக அளவு
பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக அன்றைய தினத்தில் நமது ஜீரண உறுப்புகள் சந்திரனின்
கதிர்வீச்சால் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலேயே அன்றைய தினம் உபவாசம் மேற்கொள்ளச் சொல்கிறார்கள்.
துவாதசி அன்று அகத்திக்கீரையை முக்கியமாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வதற்குக்
காரணம் என்ன?
இதுவும் முன்னோர்களின் ஏற்பாடுதான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று அகத்திக்கீரை,
நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சாத்திரம் வலியுறுத்துகிறது.
அகத்திக்கீரையை துவாதசியன்று உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வதற்கு முக்கியக்
காரணம் ஒன்று உண்டு. ஏகாதசி அன்று மேற்கொண்ட உபவாசத்தால் உடலில் உஷ்ணம் எழுந்து பின்னர்
தணிந்து மறுநாள் சமநிலைக்கு வரும். அச்சமயத்தில் அகத்திலும் எழும் தீயை அணைக்கவே இந்த
அகத்திக்கீரை பயன்படுத்தப்படுகிறது. அகம்+தீ+கீரை = அகத்திக்கீரை. பெயர்ப் பொருத்தமுள்ள
கீரை என்பது இதிலிருந்தே உங்களுக்குப்
புரிந்திருக்கும்.
Peptic Ulcer எனப்படும் குடற்புண்களுக்கு இக்கீரை சிறந்த வரப்பிரசாதி. நரம்புத்தளர்ச்சியை
நீக்கும் இக்கீரையில் வைட்டமின் 'ஏ' சத்தும், இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும்
மற்றும் தாதுப்பொருள்களும் அதிகளவில் உள்ளன. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும்
மிகச் சிறந்த ஒளஷதம். இவ்வளவு சிறப்புகளா என எண்ணி இந்தக் கீரையை அடிக்கடி உபயோகிக்க
ஆரம்பித்தால் வாயுக்கோளாறுகள் வரும். எனவே மருந்தாக மட்டுமே கருதி இக்கீரையை பதினைந்து
நாள்களுக்கு ஒருமுறை அதாவது துவாதசியில் உணவில் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும். அடுத்து
நெல்லிக்காயை ஏன் சேர்க்கிறோம் என ஆராய்ந்தால் அதுவும் உடல் வெப்பத்தை குறிப்பாக கண்களின்
வெப்பத்தைத் தணிக்கிறது என்கிறார்கள். நெல்லிக்காயை தினமும் பயன்படுத்தி வரலாம். இதனால்
நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும். எனவேதான் நெல்லிக்காய்.
பின் சுண்டைக்காய் எதற்கு? குடலில் அவ்வப்போது உண்டாகும் கிருமிகளை அழிக்கவும்
மீண்டும் தோன்றாமல் தடுக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது. மேலும் குடலை எப்போதும் சுத்தமாக
வைத்துக்கொள்ளவும் சுண்டைக்காயைப் பயன்படுத்தலாம். துவாதசி அன்று அகத்திக்கீரையுடன்
சுண்டைக்காயும் சேர்ப்பதால் குடல் பரிபூரண சுத்தம் பெறுகிறது. மொத்தத்தில் நம் உடலில்
சேரும் கிருமிகளை அழிக்க ஏகாதசி விரதம் மேற்கொண்டு, துவாதசியன்று மேற்சொன்ன இம்மூன்றினாலும்
கிருமிகளின் மீது மும்முனைத் தாக்குதல் நடத்தினால் கிருமிகள் மீண்டும் நம்மை அண்டவே
நடுங்கும் என்பதால் இப்படியொரு ஏற்பாடு
விரதம்
இருப்பதினால் வரும் நன்மைகள். இதை பற்றிய ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்று கொண்டது
....
2016
Nobel Prize In Medicine Awarded to Yoshinori Ohsumi Professor Ohsumi has been
recognized for his role in the discovery of autophagy, a cellular self-renewal
process. Read more from Asian Scientist Magazine at:
AsianScientist
(Oct. 4, 2016) - Professor Yoshinori Ohsumi of the Tokyo Institute of
Technology has been awarded the 2016 Nobel Prize in Medicine for his research
on autophagy, the process used by cells to break down damaged organelles and
recycle unused proteins. Read more from Asian Scientist Magazine at:
https://www.asianscientist.com/2016/10/topnews/2016-nobel-prize-medicine-awarded-yoshinori-ohsumi/
No comments:
Post a Comment