Wednesday, 25 July 2018


ஓம் என்பது என்ன ?



ஓம் (பொதுவான வரிவடிவம்:; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ) என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.

இந்துமத வேதங்களின்படி, ஓம் என்பது இறைவனின் அருவ பிரம்மனை குறிப்பிடும் ஒலி ஆகும்.

பிரஷ்ணா உபநிடதம் Prasna Upanishad 5:2 சொல்கிறது ..

"
ஓம் (AUM) என்பது மிக உயர்ந்த பிரம்மன் குறிகிறது"

மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.

"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"

” —(மய விஞ்ஞானம்)

ஓம் என்ற சொல்லில் , , என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இதில் , என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து. மேலும்என்பது இறைவனையும், ‘என்பது உலக உயிர்களையும், ‘ம்என்பது பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும்.

ஓம் எனும் பிரணவத்தில்என்பது முதலில் தோன்றுவதால்காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், ‘என்பது வளர்வதற்குத் துணை செய்வதால்காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், ‘ம்என்பது முடித்து வைப்பதால்காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.

எனவேஓம்என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

அதாவது உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருகிறது. இதனால்தான் ஓம் மந்திரத்துக்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் உண்டானது. பிரணவம் என்றால் சுவாசம் என்று பொருள். மனிதன் உயிர் வாழ சுவாசம் அவசியம். இந்த பிரபஞ்சம் உயிர் வாழ ஓம் எனும் மந்திரம் அவசியம். அதனால்தான் ஓம் எனும் பிரணவ மந்திரம் என்கிறோம்.


பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் ..
 "ஓம் எனும் புனித பிரணவத்தை உச்சரித்து, பரம புருஷ பகவானை எண்ணிக் கொண்டு உடலை விடுபவன், நிச்சயமாக ஆன்மீக கிரகங்களை அடைவான்.."  - பகவத் கீதா 8-13 சொல்கிறது.

அதர்வம் 14-3-6: ”ஓங்காரம் இசைக்கவும், உபாசிக்கவும், பற்றக்கூடியதும்,இலயிக்கக் கூடியதும் என கூறுகிறது.” பக்தி செய்ய எல்லாவற்றையும் விட அழகிய சாதனம் ஓங்காரமாகும்.

கோபத பிராஹ்மணத்தில் கூறப்படுகிறது – “ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:” அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும் என்று. மேலும்அம்ருதம் வை ப்ரணவ:” என்கிறது கோபதம்அதாவது ஓம் அது அம்ருதம்அமுதமாகும் என்று.

சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்:- ஓங்கா£ரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது என்று புகழ்கிறார்.

யோக தர்சனத்தில்தஸ்ய வாசக ப்ரணவ:” என்று கூறப்பட்டுள்ளதுஅதாவது அவனுடைய நாமம் பிரணவம் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

முண்டகோபனிஷத் கூறுகிறது:- ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தாலேயே நடக்கிறது என்று.

கடோபனிஷத்:- எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ,பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ,அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.

தைத்திரிய உபநிஷத்:-“ஓம் இதி ப்ரஹ்ம, “ஓம் இதி இதம் ஸர்வம் அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்றஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம் என்று சிறப்பிக்கிறது.


அக்னி புராணம்:- ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி,அவனே துக்கத்தை வென்றவன் என்கிறது.


வரலாற்று ஆய்வில் ...ஓம் :

சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சூரியனில் இருந்து ஓம் எனும் ஓசை வெளிவந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த உண்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே ஆலயங்களுக்கு செல்லும்போது மறக்காமல் மூல மந்திரமான ஓம் சொல்லுங்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே மனித உடல் அமைப்பில் இசை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்ந்தார். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் மனித உடல் மீது மந்திர ஒலிகளின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்பட ஆரம்பித்தது. 1993 ல் டெல்லஸ் (Telles.S) என்ற ஆராய்ச்சியாளர் 25 முதல் 45 வயது உள்ள ஓம் மந்திர தியானத்தில் பயிற்சி உள்ள ஒன்பது ஆண்களையும், அதே வயதுப் பிரிவில் ஓம் மந்திரப் பயிற்சி இல்லாத வேறு ஒன்பது ஆண்களையும் தேர்ந்தெடுத்து இரு குழுவிற்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வு 1996 வரை நடந்தது. இந்த ஆய்வின் முடிவில் ஓம் மந்திரம் ஜெபித்து தியானம் செய்பவர்களுடைய சுவாசம் சீராகவும், இதயத்துடிப்பும் குறைவாகவும் ஆகி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதைக் கண்டறிந்தார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் (Ajay Anil Gurjar) அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் (Siddharth A Ladhake) இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். இக்காலத்தில் வியாபாரம் செய்வோர், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாட்டைக் களைய நம் முன்னோர் சொன்ன ஓம் மந்திர உச்சரிப்பும் தியானமும் எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பதை அறிய அவர்கள் ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.

25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை அவர்கள் நடத்தினர். அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து அதன் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்தனர். 20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன! இந்த ஆய்வின் முடிவில்

1) ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது;
2) எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3) ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வுகள் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்கள்.

மேலும் உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மாமருந்து ஓம் மந்திர உச்சரிப்பு தான் என்று அவர்கள் சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர். ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் (wavelet transforms) மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

இந்த குர்ஜர்-லடாகே ஆராய்ச்சி முடிவுகள் “Time-Frequency Analysis of Chanting Sanskrit Divine Sound “OM” Mantra” என்ற தலைப்பில் சர்வதேச அரங்கில் (International Journal of Computer Science and Network Security) 2008 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஓம் மந்திரம் அறிவியல் ரீதியாகவும் ஆராயப்பட்டுள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment