Saturday 17 November 2018


தசரதர் பல பெண்களை கலயாணம் செய்தாரா ? ஏன் ?


தசரதன்  350 பெண்களை திருமணம் செய்ததற்கான உண்மை காரணம் தெரியுமா?

நம் இதிகாச புராண மரபுகள் ஏதோ வரலாற்றை நமக்கு மட்டும் எடுத்துக் கூறுகின்றன என்றும் அது மற்றவர்களுடைய கதைகள் தானே என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய முன்னோர்கள் இதுபோன்ற கதைகளை ஏதோ காரணம் இல்லாமல் எல்லாம் இந்த கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புராணக் கதைகள் புராணக் கதைகள் எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காக நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு அனுபவங்களின் போது நம்மை நாமே பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான பல்வேறு கதைகள் அதற்குள் இருக்கும்.

ராமரின் தந்தையின் தசரதருக்கு உண்மையில்  மூன்று   மனைவிகள், கௌசல்யா, கைகேய் மற்றும் சுமித்ரா ஆகியோர்  ஆவார்கள். மேலும், இவருக்கு 350 மனைவிகள் இருந்ததாக  வால்மீகி  ராமாயண  சொல்கிறது. (கம்பராமாயணத்தில் 60 ஆயிரம் மனைவிகள் என சொல்கிறது). ஏனெனினும், மூல ராமாயணமான வால்மீகி கூறியதையே பார்க்கமுடியும். இதோ வால்மீகி என்ன கூறுகிறது என பார்க்கலாம்..

"சுமத்திரா ! என்னுடைய மனைவிமார்களின் யார் யார் இங்கே இருக்கிறார்களோ ! அவர்களையெல்லாம் அழைத்து வாருங்கள். (என்னுடைய ) எல்லா மனைவியர்களாலும் சூழப்பட்டவனாக அறத்தின் திருவுருவான ராகவனை காண விரும்புகிறேன்" 

- அயோத்யா காண்டம்,சர்க்கம்-34,வசனம்-10

'கௌசல்யாவை முற்றுகையிட முந்நூற்று ஐம்பது பெண்கள், தங்கள் பொருத்தத்தில் உறுதியுடன் தங்கள் கணவனுக்கு உறுதுணையாய் இருந்தனர்

- அயோத்தி  காண்டம்  சர்க்கம் -34, வசனம்- 13

" இவ்வாறு, தன்னை பெற்ற தாயிடம் உறுதியான தன கருத்தை கூறிவிட்டு, உடனிருந்த பிற முன்னூற்றி ஐம்பது தாய்மார்களை பார்த்து அவர் மனம் கலங்கினார்" - அயோத்யா காண்டம், சர்க்கம்-39, வசனம்-36

இப்படி வால்மீகி இராமாயணத்தில் தசரதர் 350 பெண்களை திருமணம் செய்துகொண்டதாக அறிய முடிகிறது. இது ஒரு பெயரளவுக்கான திருமணமே ! ஏன்னெனில், பரசுராமரின் தந்தையின் மரணத்திற்கு பழிவாகுவதற்க்காக, அவர் சத்திரியர்களைக் கொல்வதாக சத்தியம் செய்துகொண்டார். தசரதன், பரசுரமாவின் கோபத்திலிருந்து தப்பிக்க  ஒவ்வொரு வருடமும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இப்படி அவர் 350 பெண்களை பரசுராமரிடம் தப்பிப்பதற்காக திருமணம் செய்துகொண்டார் . இதை விரிவாக பார்க்கலாம்...

வேத காலத்தில் ஜமதக்கனி என்னும் முனிவர் காட்டில் ஒரு ஆசிரமம் கட்டி, அங்கு தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவருடைய அதீத தவ ஆற்றலின் வலிமையால் சொர்க்க லோகத்துப் பசுவான காமதேனுவை தன்னுடைய ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார். அதைப் பார்த்த அந்த நாட்டு மன்னனான கார்த்தயார்ஜீனன் அந்த பசுவை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதோடு அதற்கு இணையான செல்வத்தைத் தருவதாகவும் ஜமதக்கினி முனிவரிடம் கூறினார். இதற்கு ஜமதக்கனி முனிவரோ எதிர்ப்பு தெரிவித்தார். கோபமுற்ற மன்னன் இந்த பசுவை முனிவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு சென்று விடுவார்.

மன்னனின் இந்த செயலால் கோபமுற்ற ஜமதக்கனியின் மகனான பரசுராமர் மன்னனைக் கொன்று அந்த பசுவையும் மீட்டு, மீண்டும் தந்தையிடம் கொடுத்து விடுவார். இதனால் பெரும் கோபம் கொண்ட, கார்த்தவீர்யாஜுனனின் மூன்று புதல்வர்களும் தன் தந்தையின்மரணத்துக்குக் காரணமான பரசுராமரின் தந்தையான ஜமதக்கனி முனிவரை கொல்லத் திட்டமிட்டு, அவரை 21 முறை வாளால் வெட்டிக் கொன்றனர்.

 இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்ட பரசுராமர் அந்த மூன்று மகன்களையும் அவனுடைய படைகளையும் அழிக்க நினைத்தார். அப்போதுதான் சிவபெருமான் தனக்கு பரிசாகக் கொடுத்த கோடரியைப் பயன்படுத்தி வெட்டி வீழ்த்தினார். சத்ரிய குல சாபம் ஜமதக்கனி முனிவரை கொடூரமாகக் கொன்று குவித்ததை விடவும், சத்ரியர்களான அரசர்கள் பரம்பரையையே 21 தலைமுறைகளுக்கு பழி வாங்க வேண்டும் என்றும் கொன்று குவிக்க வேண்டும் என்றும் சபதம் மேற்கொள்வார்.

அதேபோல தொடர்ந்து சத்ரிய குலத்தை ஒவ்வொரு சந்ததியினராக பழி வாங்கிக் கொண்டே வந்தார். அப்படிப்பட்ட சத்ரிய குலத்தில் பிறந்த பேரரசர்களுள் ஒருவர் தான் தசரதர். போர்த்திறன் பல போர்களில் எதிரிகளை வெற்றி கொண்ட பெரு வீரராக இருந்தாலும் கூட, சிவ பெருமானிடம் இருந்து பெற்ற கோடரி பரசுராமரிடம் இருக்கும் வரையில், எந்த போர்த்திறன் மற்றும் தவ சக்தியாலும் தன்னால் பரசுராமரை வீழ்த்த முடியாது என்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

அதேசமயம் புதிதாகத் திருமணம் புரிந்தவர்களாக இருந்தால் எந்த அரசனையும் போரில் கொல்லாமல் அவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பும் குணம் பரசுராமருக்கு இருந்தது என்றும் தசரதர் தெரிந்து வைத்திருந்தார். பரசுராமரின் பலவீனம் பரசுராமரின் பலவீனத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த தசரதன் அதை வைத்தே, அவரிடம் கொலையுண்டு வீழாமல் தப்பித்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். அதன் பின்பும் தான் அவர் ஒரு திட்டம் தீட்ட ஆரம்பித்தார்.

ஒவ்வொரு முறையும் பரசுராமர் தன்னைப் போருக்கு அழைக்க நேரில் வருகின்ற பொழுதும் புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார் தசரத மன்னன். அப்போது தன்னுடைய குணத்தினால், பரசுராமர் அவரைப் போருக்கு அழைக்காமல் அவரையும், அவருடைய புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பரசுராமர் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டுஅவர் முன் தோன்றினார்

நாட்டுக்காக தான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தசரதன் 350 பெண்களை மணக்கவில்லை. யாராக இருந்தாலும் பரசுராமர் கொன்று விடுவார். தன்னுடைய நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நன்மை செய்ய அரசன் தேவை என்ற நல்ல எண்ணத்திற்காக தான் தசரதன் அவ்வாறு செய்தாராம்.

உண்மையில் அவருக்கு 3 பட்டது மனைவிகள் (கௌசல்யா, கைகேய் மற்றும் சுமித்ரா ஆகியோர்) மட்டுமே ! மீதமுள்ள 350 பேர்களும் ஒரு பெயரளவுக்கான திருமணமே !


No comments:

Post a Comment