Sunday, 19 January 2020


‘சூத்திர’ என்பதன் அர்த்தம் என்ன ?




 பொதுவாக திராவிடவாதிகளும், நாத்திகவாதிகளும், இந்து எதிர்ப்பாளர்களும் கூறும் வார்த்தைகள் 'சூத்திரன்' என்கிற நான்காம் வர்ணத்தை பற்றிய கருத்துக்களை தான் தவறாக சித்தரித்து, அந்த வார்த்தைக்கு தவறான விளக்கங்களை கொடுத்து தங்களது பிழைப்பை நடத்துகிறார்கள்.

ஆகவே, உண்மையில் இந்துமத வேத,புராணங்களில் சூத்திரர் என்பதை பற்றி என்ன கூறுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்...


வேத இலக்கியங்களில் ...

"ஸோசதி இதி ஸுத்ர:"  "வருந்துகிறவன் சூத்திர" என்கிறது.

 "ஸுத்ரஸப் தவ்யுத் பத்தி"

"மேய்வருந்த உழைப்பதன்மூலம் பிற அனைவருக்கும் தொண்டுபுரிபவன் சூத்திர" என்கிறது.

 இது ப்ரஹ்ம சூத்திரத்தில், அபஸூத்ராதிகரணத்திலும், அதன் விஷயவாக்கியமாக எடுக்கப்பட்டுள்ள உபநிஷத்து வாக்கியத்திலும் 'வருந்துகிறவன்' என்கிற பொருளையே சொல்கிறது. 

 "ஸுசம் த்ராவயதீதி ஸுத்ர:"  

“(தன உடலுழைப்பால்) அனைவருக்கும் வருத்தத்தை போக்குபவன் சூத்திர” என்கிறது.

 ஆனால், பல திராவிடவாதிகளும், நாத்திகவாதிகளும், இந்து எதிர்ப்பாளர்களும் சூத்திர என்பதற்கு விபச்சாரியின் மகன், ... ஆகிய பல்வேறு தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். வேசிமகன், விபச்சாரி மகன் என்பதற்கான ஆதாரமும் இல்லை: பொதுவாக இதை மனுஸ்மிருதியில் உள்ளது என்று சொல்லி, பொய்யைத்தான் பரப்பி வருகிறார்கள்.

இதோ அந்த சுலோகம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415
         
த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய:

ஏழு வகையான சேவை செய்பவர்கள் உள்ளனர்

(1)  ஒரு பதாகையின் கீழ் கைப்பற்றப்பட்டது, /
       ஒரு தரத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டவர்
(2)  தனது அன்றாட உணவுக்காக சேவை செய்பவர்
(3) வீட்டில் பிறந்தவர்,
(4) வாங்கப்பட்டது,
(5) வழங்கப்பட்டது,
(6) பரம்பரை, மூதாதையரிடமிருந்து பெறப்பட்டவர், மற்றும்
(7) தண்டனையால் அடிமை. /
           தண்டனையின் மூலம் அடிமைப்படுத்தப்பட்டவன்.

ஆனால், மேற்கூறிய தகவல்களை நாத்திகவாதிகளும், இந்து எதிர்ப்பாளர்களும்  கீழ்கண்டபடி மொழிபெயர்த்துள்ளார்கள் !

சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும்.

1. போரில் புறங்காட்டி ஓடியவன்,
2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்,
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன்,
4. விபச்சாரி மகன்,
5. விலைக்கு வாங்கப்பட்டவன்,
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன்.

மேலே, கொடுத்த வசனங்களில், சூத்திரன் என்ற வார்த்தை இல்லை. மேலும், விபச்சாரி என்று அர்த்தம் கூறுகிற எந்த வார்த்தையும் இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  
திராவிடவாதிகளும், நாத்திகவாதிகளும், இந்துவிரோத சிந்தனையாளர்கள் இவ்வார்த்தையை “சூத்திரன்” என்பதற்கு இழிந்தவன், இழிபிறப்பாளன், வேசி மகன், ….என பல தவறான விளக்கம் கொடுத்துள்ளார்கள். இவர்கள் வேத இலக்கியங்களையோ, மனு ஸ்ம்ருதியையோ சரியாக படிக்கவில்லை என அறியமுடிகிறது.

சூத்ர [शूद्र] வார்த்தை தான் உண்மையில் சமஸ்கிருததில் உள்ளது.  இந்த சூத்ர [शूद्र] என்பது தமிழில், சூத்ரா என்று குறிப்பிட்டு, பிறகு அது சூத்திரர் ஆகியது. இது தவறானது ஆகும். தமிழில் “த” மற்றும் “ச” எழுத்திற்கு, பிற மொழிகளைப் போன்று நான்கு வர்க்கங்கள் இல்லை. அதனால், , , ,   என்றவற்றை “த” என்றே குறிப்பிடப் படுகிறது.

   பிறகு ரிக்வேதத்தில் [10:90] வருகின்ற புருஷஸுக்தம் [पुरुषसूक्तम्] என்ற சுலோகத்தில் வரும் கீழ் கண்ட வரியை வைத்துக் கொண்டு, வார்த்தைகளை தவறான அர்த்தங்களை கொடுக்க தொடங்கினார்கள். இது சுக்ல யஜுர்வேத சம்ஹிதை 30.1-16 & அதர்வ வேத சம்ஹித 19.6 முதலியவற்றிலும் காணலாம்.
  
ப்ராம்மணோஸ்ய முக மாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரூ த தஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாகும் ஶூத்ரோ அஜாயத

"ப்ராம்மணோஸ்ய முக மாஸீது" - அதாவது ஒரு சமூகத்தில் கற்றுணர்ந்தவன் பரம்மத்தை உணர்ந்தவன்(ப்ராமணன்) முகம் போன்றவன் அதாவது கற்றவன் சமூகத்திற்கு முகம் போன்றவன்.

"பாஹூ ராஜன்ய:க்ருத:" - தோளில் வழு கொண்டவன் புஜ பலம் கொண்ட க்ஷத்ரியன்( பலம் கொண்டவன்) சமூகத்தின் தோள் போன்றவன்

"ஊரூ த தஸ்ய யத்வைஸ்ய" - வைஸ்யன் (வியாபாரம் வணிகம் செய்பவன்) சமூகத்தின் இடுப்பு போன்றவன் ஏனெனில் பொருள் ஈட்டுவது முக்கியம்

"பத்ப்யாகும் ஶூத்ரோ அஜாயத" - மற்றைய சமூக தொழில் புரிபவர் சமூகத்தின் பாதம் போன்றவர் இவர்கள் அன்றி இந்த ஒட்டுமொத்த உடலும் நகறாது

இப்படி தான் சொல்கிறது இந்த வாக்யத்தில் உயர்வு தாழ்வு எங்கே இருக்கிறது. மேற்கண்ட வசனம் 13 வது வரி, இப்படி இருக்கிறது, ஆனால், இதன் 15 வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்கிறது.

அதாவது, மேலே முதலில் பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்…“என்கிறது. பின் பாதத்திலிருந்து பூமி தோன்றின என்கிறது. அப்போ, சூத்திரனுக்கு, பூமியும் ஒன்றா?

ஆகவே, மேற்க்கூறியவைகள் எல்லாமே ஒரு உவமைக்காக பயன்படுத்திய வார்த்தைகள் என அறிய முடிகிறது. தனால், உண்மையிலேயே, அவ்வாறுதான் நிகழ்ந்தன என்பதாகாது. இங்கு நான்கு பிரிவினர் உருவானது, அவற்றின் பெயர், குறிப்பாக “சூத்ர” என்பது தான் முக்கியம். இங்கே உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்கிற வார்த்தைகளையே குறிப்பிடவில்லை. சூத்திரன் என்பதற்கு தாழ்ந்தவன் என்கிற அர்த்தமும் இல்லை!
       
வர்ணம் என்பது பிறப்பால் வருவதா ?
       
வர்ணம் என்பது ஒருவனது பிறப்பின் அடிப்படையில் வரவில்லை என்கிறது வேத இலக்கியம். உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

            சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருʼஷ்டம் கு³ணகர்மவிபா³:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்யகர்தாரமவ்யயம் 4-13

'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து நான்கு வகையான சமுதாய நிலைகள் (வர்ணம்), என்னால் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' - பகவத் கீதையில் (4.13)

அதாவது, உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை (குணம்,செயலை) அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல.

இதற்க்கு வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

5. ஜபல உபநிஷத்தில் (4:4 to 9), ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று வேதம் சொல்லிகொடுகிறார்.

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார்:
 "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?
  
யுதிஷ்டிரர் பதிலளித்தார்:

"யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரன். புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."
  
அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

 ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)
  
மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

 "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ

“அதாவது  சூத்திரன்  பிராமணனாகி  விடலாம்;  பிராமணனும்  சூத்திரனாகலாம்;  அதே  போல்,  க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களின்  மகன்களும்,  மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்’.    அவர்கள்  வேதம்  ஓதும்  பிராமணர்கள் கூட ஆகலாம்  என்று சொல்கிறது.”

இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள்  பிரிக்க பட்டது .

மேலும், பகவத்கீதை மூலம் நாம் அறிவது ...

'அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக,  பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் என அனைவரையும் சம நோக்கில் காண்கின்றனர்.- பகவத்கீதா - 5-18

இப்படி உண்மையான அறிஞர்கள் எல்லோரையும் சமமாக தான் பார்க்கிறார்கள் என அறியலாம்.


No comments:

Post a Comment