வேதங்களில், வைதீகர்கள் தங்கள் நெற்றியில்
எந்த சின்னத்தை (நாமம்/பட்டை) தரித்தால் முக்திக்கு வழி
என கூறுகிறது ?
-
வைதீகர்கள் அனைவரும் தங்கள் நெற்றி முதலான பாகங்களில் தரிக்கும்
சின்னமே புண்டரம் எனப்படும். இவை பலவகையாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக
இரண்டு வகை சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுருக்கிறது.. அவை
1.
ஊர்தவபுண்டரம் - வைணவ நாமம் -
இது மேலே நோக்கி நெற்றிக்கு நிலைகுத்தாக இடப்படும்.
2. திரியகபுண்டரம்
- சைவ பட்டை - இது கிடையாக
இடப்படும் விபூதி
மனிதன் பகுத்தறிவு உள்ளவன், உயர்கதிக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே
படைக்கப்பட்டவன். அதனாலேயே ஸர்வேஷ்வரன் அவனை உயர வளரும்படி படைத்துள்ளான். ஆனாலும்
அநாதிவாஸனையால் பல மனிதர்கள் உயர்கதிக்கு செல்ல வேண்டுமெனும் நினைவே இல்லாமிலிருக்கிறது.
இப்படிபட்டவர்களின் தரத்திற்கேற்ப இம்மை பலனைகொடுக்க பல தேவர்களை படைத்தார் பரந்தாமன்.
மனிதனாயிருந்தும் திரியக்குகளைப்போல் (ஜந்து) திர்யகதிகளிலேயே
உழலும் இவர்களுக்கு திரியகபுண்டரத்தை (நெற்றியில் விபூதி அணிவதற்கு) சாஸ்திரங்களில்
சொல்லிவைத்திருக்கிறான். ஆனால், உயர்கதிக்கு செல்லவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊர்த்தவபுண்டரத்தை
(வைணவ நாமம்) நெற்றியில் இடுவதற்கு விதித்திருக்கிறான்
வாஸுதேவன.
திரியகபுண்டரம் (சைவ விபூதி அணிந்தவர்கள்) தரித்தவர்களெல்லாம்
அதனாலேயே தாழ்ந்து போவார்கள் என்றோ, ஊர்த்தவ புண்டரம் (நாமம்) தரித்தவர்கள் உயந்தவர்கள்
என்றோ கூறவரவில்லை. திரியகபுண்டரத்தை தரித்தவர்களிலும் படிப்படியாக உயர்கதிக்கு செல்லவல்ல
உத்தமர்கள் சிலரிருப்பதையும், ஊர்த்தவபுண்டரம்
தரித்தவர்களிலும் கொடியநரகம் புகவேண்டிய பாவிகள் சிலரிருப்பதை யாம் மறுக்கவில்லை.
உயர்கதிக்கு செல்ல நினைப்பவர்கள் தரிக்கதக்கது ஊர்த்தவபுண்டரம்
(வைணவ நாமம்) என்றும், இந்த பௌதீக சம்சாரத்தில் இருக்க நினைப்பவர்கள் தரிக்கதக்கது திரியகபுண்டரம் என வேத
இலக்கியங்கள் சொல்கிறது. இக்கருத்துக்கு சாஸ்திரங்களில் பல்வேறு இடங்களில் கூறுகிறது.
எனவே,
ஒருவன் உண்மையிலியேயே முக்தியை விருப்புவானாகின் அவர்கள் முகுந்தனை
வழிபட்டு, அந்த பக்தர்கள் தங்களது நெற்றியில் தரிப்பது வைஷ்ணவ நாமமான ஊர்த்தவபுண்டரமேயாகும்.
இந்த
ஊர்த்தவபுண்டரம் உயர்கதியளிக்கும் உபாயவிதி என்பதை உபநிஷதுக்கள்/வேத,புராணங்களில் மூலம் காண்போம் . கடசாகையில் பின்வரும் வசனம் சொல்கிறது..
"த்தோர்த்வ_புண்டர_பரமேஸிதாரம்
நாராயணம்_ஸாங்கயோகாதிகமயம்
ஜ்ஞாதவா_விமுசயேத_நரஸஸம்ஸதை
ஸமஸாரபாஸைரிஹ_சைவம்_விஷ்ணும்"
“ஊர்த்தவ புண்டரத்தை
(நெற்றியில் நாமம்) தரித்த யோகி பரமேஸ்வரனும்
காமஜ்ஞான யோகங்களால் அடையத்தக்கவனும், ஸர்வவியாபியுமான நாராயணனை அறிந்து ஸம்ஹாரத்திலுள்ள
ஸகல பாபங்களிலிருந்து விடுபட்டு, இந்த ஜன்மமுடிவில் மோக்ஷத்தை அடைகின்றனர்”
"த்தோர்த்வ_புண்டர_கருதசக்ரதாரீ
விஷ்ணும்_பரமதயாயதி_யோ_மஹாத்மா
ஸவரேண_மந்தரேண_ஸதா_ஸதிதம
பராத_பரம_யநமஹதோ_மஹாத்தம"
“ஊர்த்தவ புண்டரத்தை (நெற்றியில் நாமம்) தரித்தவனாய் சக்கரத்தை அணிந்தவனாய் எந்தச்சேதனன், உயர்வர உயர்ந்தவனாய் ஒப்பாருமில்லாதவனாய் எப்போதும் ஹ்ருதயகமலத்தில் எழுந்தருளியிருப்பவனான மஹாவிஷ்ணுவை ஓங்காரமாகிற மந்திரத்தை இடைவிடாது சிந்திக்கிறானோ அவனே மஹாத்மா “
"ஹரே_பாதாகருதிம_ஆத்மநோ -ஹிதாயமதேயே_சிதரம்
ஊர்த்வபுண்டரம்_யோ_தாரயதி_ஸ_பரஸ்ய-பரியோ_பவதி
ஸ_புண்யவாந_பவதி_ஸ_முகதிபாகபவதி"
- அதர்வண வேதம்
“ஹரியினுடைய பாதங்களைப்போன்ற ரூபத்தை உடையதும்
நடுவில் இடை வெளியுடையதுமான
ஊர்த்வபுண்டரத்தை (நெற்றியில் நாமம் தரித்தவர்கள்
) எவனொருவன்
தன் நன்மையை கருதி
தரிக்கின்றானோ
அவன் பரமபுருஷனுடைய பரீதிக்குப் பாதாரபூதனாகிறான்,அவன் புண்யவானாகிறான்,
மோக்ஷத்தை
அடைகிறான்”
மேலும்,
பல பல சாகையிலும் கூறுவது...
"அர்ச்சநாதெள_யஜ்ஞமூர்ததே- ரூர்த்வபுண்டரம்
குலம்_தாரயதே_ஸபத_ஸ_கசசே-வைஷ்ணவம்பதம்"
“யக்ஞஸ்வரூபியான பகவானுடைய அர்ச்சனம் முதலியவைகளுள் ஊர்த்தவ புண்டரத்தை தரித்தானாகில் ஏழு
தலைமுறைகளும் தாண்டுவிக்கிறான். அவனும் விஷ்ணுபதத்தை அடைகிறான் "
"ஸதம_சைகா_ச_ஹ்ருதஸ்ய_நாடயஸ
தாஸாம_மூர்த்தாநமபிநிஸஸருதைகா
தயோர்த்வ_மாயந்நமருததவமேதி
விஷ்வங்ஙநயா_உத்கரமணே_பவநதி" - கடசாகையில்
(2-6-16)
"இருதயத்தின் நாடிகளுள் முக்கியமானவை நூறொன்றாகும். அவற்றுள் ஒரு
நாடி தலையைநோக்கி உயரச்செல்கிறது. அந்த நாடிகளால்
உயரச்செல்பவன் மோக்ஷமடைகிறான். மற்றைய பக்கங்களில் செல்லும்
திர்யக்க நாடிகள் திர்யக
ஸம்ஹாரகதிகளுக்கு செல்லும் வழிகளாகும்”
இதன்மூலம் ஊர்த்வ புண்டரம் (வைணவ நாமம்) என்பது உயரச்செல்லும்
மோக்ஷத்திற்கு உரியது என்றும், த்ரியக புண்டரம் (சைவ விபூதி) அணிவது என்பது ஸம்ஹாரகதிகளுக்கு உரியது என்பதும் இதன் மூலம் அறியலாம்.
எனவே, ஊர்த்தவபுண்டரமே முக்திக்குவழி என்பதால் எப்போதும் பகவானது
நாமத்தை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் !
எனவே மானிடபதர்கள்
யாவரும் ஸம்சாரபந்தத்தை விட்டு மோக்ஷத்தை
அடைய ஊர்த்தவபுண்டரத்தை உடலிலும் நாராயண
நாமத்தை நாவிலும் தரிப்பதே
கதியாம்.