பகவான் சைதன்யர்
பற்றி வேத இலக்கியங்களில்...
பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய
ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த
கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக
உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக
அவர் வருகிறார்.
கடவுளைப் பற்றிய குறுகிய கருத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான
ஆன்மீகவாதிகள்கூட, கடவுள் எவ்வாறு இவ்வுலகத்திற்கு தனிப்பட்ட முறையில் வர இயலும் என்று
சந்தேகம் கொள்கின்றனர். ஆனால் தான் விரும்பும் எதையும் முழுமுதற் கடவுளால் செய்ய இயலும்; தனது திவ்யமான லீலைகளை அரங்கேற்றுவதற்காகவும்
தனது பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகவும் பிரபஞ்சத்தை உய்விப்பதற்காகவும் இவ்வுலகில்
தோன்றுவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்று வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
இத்தம்
ந்ரு-திர்யக்-ருஷி-தேவ-ஜஷாவதாரைர்
லோகான்
விபாவயஸி ஹம்ஸி ஜகத் ப்ரதீபான்
தர்மம்
மஹா-புருஷ பாஸி யுகானுவ்ருத்தம்
சன்ன:
கலௌ யத் அபவஸ் த்ரி-யுகோ ஸ த்வம்
“எம்பெருமானே,
மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக
முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள்.
இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ
நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக,
அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.”
(ஸ்ரீமத்
பாகவதம் 7.9.38)
இங்கே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய விசேஷ தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் சன்ன: என அழைக்கப்படுகிறார். சன்ன: என்றால் மறைக்கப்பட்டவர், அல்லது நேரடியாகத்
தோன்றாதவர் என்று பொருள்; ஏனெனில், அவர் ஒரு பக்தராக தோன்றினார். ரூப கோஸ்வாமி அவரை
கிருஷ்ணரின் அவதாரமாக அடையாளம் கண்டார். சார்வபௌம பட்டாசாரியர், ரூப கோஸ்வாமி மற்றும்
இதர பக்தர்கள் உட்பட சாஸ்திரங்கள், உபநிஷத்துகள், மஹாபாரதம் என பல இடங்களில் அவர் அவதாரமாக
உறுதி செய்யப்பட்டுள்ளார். ஓர் அவதாரம் என்பவர், மாபெரும் பக்தர்கள் மற்றும் சாஸ்திரங்களின்
கூற்றுகளால் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
க்ருஷ்ண-வர்ணம்
த்விஷா க்ருஷ்ணம்
ஸங்கோ
பாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை:
ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி
ஹி ஸுமேதஸ:
கரபாஜன
முனிவரால் வெவ்வேறு யுகங்களுக்கான வெவ்வேறு அவதாரங்கள் குறித்து மன்னர் நிமியிடம் பேசப்பட்டபோது,
சைதன்ய மஹாபிரபு விருந்தாவன தாஸ தாகூரால், யுக தர்ம பாலோ என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.
இங்கே அவர் சன்ன: கலௌ என்று அழைக்கப்படுகிறார். கலி யுகத்தில் அவர் நரசிம்மதேவர், வாமனதேவர்,
இராமசந்திர பகவான் ஆகியோரைப் போன்று தோன்றுவதில்லை. அவர் ஒரு பக்தராகத் தோன்றுகிறார்.
ஏன்? இஃது அவருடைய மிகமிகக் கருணை வாய்ந்த அவதாரமாகும்.
மிகச்சிறந்த
யோகிகளின் கற்பனைக்குக்கூட எட்டாத அசாதாரணமான செயல்களாலும் சாஸ்திர குறிப்புகளாலும்
ஒரு உண்மையான அவதாரத்தினை அறிந்துகொள்ளலாம்.
தன்னை முழுமுதற் கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இதனால்,
அவர் மறைக்கப்பட்ட அவதாரம் என்று அறியப்படுகிறார். கலி யுகத்தில் முழுமுதற் கடவுள்
மறைக்கப்பட்ட உருவில் தோன்றுகிறார் என்று வேத இலக்கியங்களில் தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தில்
(7.9.38) கணிக்கப்பட்டுள்ளது:
சன்ன:
கலௌ யத் அபவஸ் த்ரி-யுக ஸ த்வம்
“கலி
யுகத்தில் நீங்கள் சில சமயங்களில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுவதால், த்ரி-யுக
(மூன்று யுகங்களில் அவதரிப்பவர்) என்று அறியப்படுகின்றீர்.” - ஸ்ரீமத் பாகவதத்தில்
(7.9.38)
பகவத்
கீதையிலுள்ள (4.8) ..
பரித்ராணாய
ஸாதூனாம்வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாயஸம்பவாமி
யுகே யுகே
“சாதுக்களைக்
காத்து, கொடியவர்களை அழித்து, தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, யுகந்தோறும்
நான் தோன்றுகிறேன்.”
ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுவதாக பகவான் உறுதிப்படுத்துவதை வைத்து,
அவர் கலி யுகத்திலும் தோன்றுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அவர் கலி யுகத்தில் எவ்வாறு
தோன்றுகிறார் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.32) விவரிக்கப்பட்டுள்ளது:
க்ருஷ்ண-வர்ணம்
த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை:
ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி
ஹி ஸு-மேதஸ:
“கலி
யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின்
அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து வழிபடுவர். அவரது மேனி கருமையாக
இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர் தனது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும்
இரகசிய துணைவர்களால் சூழப்பட்டவர்.”
தனது திருநாம ஸங்கீர்த்தனத்தில் தானும் ஈடுபட்டு மற்றவர்களுக்கும்
அதனைக் கற்றுக் கொடுப்பதற்காக, முழுமுதற் கடவுள் கலி யுகத்தில் தோன்றுகின்றார் என்பதையும்,
தன்னை முழுமுதற் கடவுள் என்று நேரிடையாக வெளிப்படுத்தாமல் உள்ளார் என்பதையும் இதிலிருந்து
நாம் புரிந்துகொள்ள முடியும். பகவான் சைதன்யரே இந்த யுகத்தின் அவதாரம் என்பதை இவ்விளக்கம்
தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றது.
பகவான்
ஒவ்வொரு யுகத்திலும் யுக தர்மத்தைப் பரப்புவதற்காக அவதரிக்கின்றார்.
சைதன்ய
மஹாபிரபு அவதரித்திருந்த காலக் கட்டத்தில், ஸார்வபௌம பட்டாசாரியர், பிரகாசானந்த சரஸ்வதி,
ஸநாதன கோஸ்வாமி, ரூப கோஸ்வாமி, இராமானந்த ராயர், மற்றும் பல்வேறு கற்றறிந்த பண்டிதர்கள்
அவரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் சாதாரண மனோபாவத்தினர் அல்லர், மாறாக
மிகுந்த ஞானத்துடன் வேத இலக்கியங்களை கடுமையாகப் பின்பற்றியவர்கள்; அந்த வேத இலக்கியங்களின்
அடிப்படையிலேயே அவர்கள் கௌராங்கரின் புனிதத்தன்மையை ஏற்றுக் கொண்டனர்.
பகவான்
சைதன்யர் - வேத சாஸ்திரம் ஆதாரம் ....
1.
ஸ்ருதி வேத வாங்கியங்களிலிருந்து :
அதர்வண
வேதம் - ஸ்ரீ சைதன்யா உபநிஷத் ...
ito
'ham krta-sannyaso 'vatarisyami sa-guno nirvedo
niskamo
bhu-girbanas
tira-stho
'lakanandayah kalau catuh-sahasrabdhopari
panca-sahasrabhyantare
gaura-varno dirghangah
sarva-laksana-yukta
isvara-prarthito
nija-rasasvado bhakta-rupo
misrakhyo
vidita-yogah syam
கலியுகம்
நான்கு ஆயிரம் - ஐயாயிரம் ஆண்டுகளுக்கு இடையில், இந்த கட்டத்தின் முடிவில், நான் கௌரங்கா
என்கிற நாமத்தில் , கங்கை 'கரையில் ஒரு இடத்தில் தங்க நிறத்தில், அந்தண குடும்பத்தில்
பூமியில் இறங்கி வருவேன். பின்னர் சன்னியாசம் எடுத்து, துறவறம் மேற்கொண்டு, பொருள் ஆசைகள் இருந்து முழுமையான பற்றின்மை
உட்பட அனைத்தையும் துறந்து என் ஆழ்நிலை குணங்கள் வெளிப்படுத்துவேன். . கௌரங்கா நாமத்தில், என் கைகள் என் முழங்கால்கள்
வரை இருக்கு, ஒரு பெரிய ஆளுமையுடன்
முப்பத்தி இரண்டு வயதில் உடல் அறிகுறிகள்
காண்பிக்கும்.
நான்
என் சொந்த பக்தர்களையும், எனது புனித பெயர்களையும் பக்தர்கள் ஜெபிப்பார்கள், அந்த நேரத்தில் மிகவும் ரகசியமான பக்தர்கள் மட்டுமே
என்னை புரிந்து கொள்ள முடியும்.
- (அதர்வன வேதத்தில்,
மூன்றாவது கண்ட பிரம்மா-விபாக)
atra
brahma-puram nama
pundarikam
yad ucyate
tad
evasta-dalam padma
sannibham
puram adbhutam
நான்
பிறந்த இடத்தில எட்டு தாமரை பூ போன்ற ஒரு அற்புதமான நகரம் இருக்கும்.
(சாமவேதத்தில் என்ற சாந்தோக்கிய உபநிஷத்
8.1.1 இல், பக்திவினோத தாகூரை வர்ணனை)
sa
eva bhagavan yuge turiye 'pi brahma-kule
jayamanah
sarva upanisadah uddidirsuh
sarvani
dharma-astrani vistarayisnuh sarvan
api
janan santarayisnuh sarvan api vaisnavan
dharman
vijrimbhayan sarvan api pasandan nicakhana
கலியுகத்தில்,
உன்னத இறைவன் ஒரு அந்தணர் குடும்பத்தில் தோன்றுவார். அவர் உபநிஷத் மற்றும் தர்மம்-சாஸ்திர
செய்தியை சொல்லிக்கொடுக்கவும், . அவர் நாத்திகர்கள் மற்றும் வேத துவேசம் செய்பவர்களை தோற்கடிக்க வேண்டியும், அவர் வைஷ்ணவ தர்மத்தின் உண்மையை நிறுவ வேண்டும் என்பதர்காகவும் வருகிறார்.
- கிருஷ்ண உபநிஷத் 2.6, உறுதி பதிப்புகள்: Vaisnava உபநிடதங்கள் ஆங்கிலம்
மொழிபெயர்ப்பு (ராமநாதன்)
mahan
prabhur vai purusah
sattvasyaisa
pravartakah
sunirmalam
imam praptim
isano
jyotir avyayah
உச்ச ஆளுமை இறைவன் பகவான் சைதன்ய
மஹாபிரபு அவர். இவர் ஆழ்நிலை ஞானம் பரப்புகின்றவர. அவரை அழிக்கமுடியாத ப்ரஹ்மஜ்யோதி இருக்கிறார், அவரை தொடர்படையுங்கள்'
- ஸ்வேதாஸ்வதர உபநிஷத்
3.12 யஜுர் வேதம்
II.
ஸ்ம்ருதி.(புராணங்கள், இதிகாசங்களில்) வேத வாங்கியங்களிலிருந்து:
asan
varnas trayo hy asya
grhnato
'nuyugam tanuh
suklo
raktas tatha pita
idanim
krsnatam gatah
இந்த
சிறுவன் (கிருஷ்ணர்) மூன்று நிறங்கள் உடையவர் - வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் என்பன. அவர் வெவ்வேறு வயதில் தோன்றுகிறார்.இப்போது
அவர் ஒரு கருப்பு நிறத்தில் தோன்றினார்.
(ஸ்ரீமதி-பாகவதம்
10.8.13, கர்கமுனி நந்தா மகாராஜாவுடன் பேசுகிறார்)
க்ருஷ்ண-வர்ணம்
த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை:
ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி
ஹி ஸு-மேதஸ:
“கலி
யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின்
அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து வழிபடுவர். அவரது மேனி கருமையாக
இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர் தனது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும்
இரகசிய துணைவர்களால் சூழப்பட்டவர்.” - ஸ்ரீமத்
பாகவதத்தில் (11.5.32)
மேலும்,
ஸ்ரீமத் பாகவதம் 11.5.33 & 11.5.34 ஆகியவற்றிலும் கூறுகிறது
.
prasantatma
lamba-kanthas
gaurangas
ca suravrtah
உன்னத
பகவான் தங்க நிறத்தில் வருவார், அவர் சமாதான
மற்றும் அழகான நீண்ட கழுத்து, பல துறவு பக்தர்கள் சூழப்பட்டு இருப்பர்' - அக்னி
புராணம்
anandasru-kala-roma
harsa-purnam
tapo-dhana
sarve
mam eva draksyanti
kalau
sannyasa-rupinam
'கலியுகத்தில்
பகவான் ஒரு சன்யாசி துறவியாக வருவார்' - பவிஷ்ய
புராணம்
kaleh
prathama-sandhyayam
gaurango
'ham mahi-tale
bhagirathi-tate
bhumni
bhavisyami
sanatanah
முதல்
சந்தியா வேளையில் கலியுகத்தில், நான் கங்கை கரையில், என்னுடைய தங்க நிற வடிவத்தில்
இந்த பூமியில் வருவேன் - பிரம்மா புராணம்
nama-siddhanta-sampati
prakasana-parayanah
kvacit
sri-krsna-caitanya
nama
loke bhavisyati
‘உன்னத
இறைவன் மீண்டும் இந்த பூமியில் வருவார். அவரது நாமம் 'ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய' ஆகும்.
இவர் பகவானின் புனித நாமங்களை பிரச்சாரம் செய்வார்' - தேவி
புராணம்
yad
gopi-kuca-kumbha-sambhrama-bhara-
rambhena
samvardhitah yad va gopa-kumara-
sara-kalaya
range subhandi-krtam yad
vrndavana-kanane
pravilasac chridama-
damadibhis
tat prema-pradatam cakara
bhagavan
caitanya-rupah prabhuh
'உன்னத
பகவான், தன்னுடைய முந்தைய விருந்தவன லீலைகளை
காண்பதற்க்காகவும், தூய அன்பை வெளிப்படுத்தவும்,
மீண்டும் இந்த உலகிற்கு வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய' எனப்படும்'
-
கருட புராணம்
aham
purno bhavisyami
yuga-sandhau
visesatah
mayapure
navadvipe
bhavisyami
saci- sutah
‘என்னுடைய
முழுமையான ஆன்மிக வடிவத்தில், நான் நவதீப, மாயாப்பூர் எனும் இடத்தில, சசி தேவிக்கு
மகனாக கலியுகத்தில் நான் (சைதன்யர்) அவதரிப்பேன். - கருட புராணம்
danda-mandita-bhutah
sannyasa-vesah sva-
yam
nihsandedham upagatah ksiti-tale
caitanya-rupah
prabhuh
பகவான்
இந்த பூமியில் ஒரு சந்நியாசியாக வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய பிரபு ' - கருட புராணம்
suvarna-varno
hemango
varangas
candanangadi
sannyasa-krc
chamah santo
nistha-santi-parayanah
அவரது
ஆரம்பகால காலகட்டங்களில் அவர் தங்க நிற தோற்றத்துடன்
குடுப்பஸ்தனாக தோன்றுகிறார்.அவரது கால்கள்
அழகாக இருக்கும், அவரது உடல் சந்தனத்தின் கொண்டு மூடப்பட்டிருக்கும், உருகிய தங்க போல்
இருக்கிறது. சந்நியாசமாக தனது அடுத்த பொழுதுபோக்கை ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் சமாதானமாகவும்
அமைதியாகவும் உள்ளவர்.அவர் அமைதியான மற்றும் ஆன்மீகத்தின் உயர்ந்தவர். அவர் மௌனமான
ஆளுமையானவர்.
(மகாபாரதம் 13.135.92 (வரி 1-2), 13.135.75 (வரி 3-4) - விஷ்ணு சஹஸ்ரா நமம்)
golokam
ca parityajya
lokanam
trana-karanat
kalau
gauranga-rupena
lila-lavanya-vigrahah
கலியுகத்தில்,
நான் கோலோகத்தை விட்டு, மக்களை காப்பதற்காக, ஒரு அழகான தங்க நிறமான 'கௌரங்க' எனப்படுவேன்' - மார்க்கண்டேய
புராணம்
mundo
gaurah su-dirghangas
tri-srotas-tira-sambhavah
dayaluh
kirtana-grahi
bhavisyami
kalau-yuge
‘கலியுகத்தில், நான் மூன்று நதிகள் சந்திக்கும் இடத்தில,
தலையில் முடி இல்லாமல், தங்க நிற வடிவில், எப்போதும் பகவான் கிருஷ்ணரின் நாமங்களை சொல்லிகொண்டிருப்பேன்' - மத்ஸ்ய புராணம்
bhakti-priyo
bhakti-data, damodara ibhas-patih
indra-darpa-haro
'nanto, nityananda-cid-atmakah
caitanya-rupas
caitanyas cetana guna-varjitah
advaitacara-nipuno
'dvaitah parama-nayakah
...saci-suto-jaya-pradah
பக்தர்களுக்கு
அருளப்பட்ட கடவுளின் உச்ச ஆளுமை (பக்தர்) யாரோ, யாருடைய பக்தி சேவை,யார் இடுப்பில்
கட்டப்பட்டாரோ (தமோதர), யார் பல யானைகளின் எஜமானாரோ , யார் இந்திரனின் பெருமைகளை எடுத்துக்
கொண்டவரே, யாருக்கு முடிவில்லையோ (ஆனந்தா),யார்
நித்யானந்தா (நித்யானந்தா), யார் ஆன்மீகமானவரோ (cid-atmaka), யார் ஸ்ரீ சையத்யா (சையத்யா-ரூபா)
வடிவம் ஏற்றுள்ளாரோ, யார் பௌதீக குணங்களை இல்லாதவரோ (குணா-வர்ஜிதா), யார் அத்வைத (அத்வைத),
யார் மிக உயர்ந்த தலைவரோ (பரமா-நாயகா), யார்
சசியின் மகனோ, அவரே வெற்றியை .அளிகிறார்"
நாரத
பஞ்சராத்ரா - பாலா கிருஷ்ணா சஹஸ்ர நாம ஸ்தோத்திரம் - 106-107, 145
divija
bhuvi jayadhvam
jayadhvam
bhakta-rupinah
kalau
sankirtanarambhe
bhavisyami
saci-sutah
ஓ
தேவர்களே! வாருங்கள், நான் கலியுகத்தில் மக்களை விடுவிக்க வருகிறேன், நான் சசி தேவியின்
மகனாக வந்து பகவான் கிருஷ்ணரின் நாமங்களை பிரச்சாரம் செய்கிறேன்' - நாரத புராணம்
satye
daitya-kuladhi-nasa-samaye simhor-
dhva-martyakrtis
trtayam dasa-kandharam
paribhavan
rameti namakrtih gopalan
paripalayan
vraja-pure bharam haran
dvapare
gaurangah priya-kirtanah kali-yuge
caitanya-nama
prabhuh
உன்னத
பகவான், சத்யா யுகத்தில் பாதி மனிதன்-பத்தி சிங்க ரூபமான நரசிம்மராக வந்தார், த்ரேதா யுகத்தில் ராமனாக வந்து
பத்து தலையுள்ள ராவணனை அழித்தார், துவாபர யுகத்தில் வந்து வ்ரஜ வாசிகளையும், கோபர்களையும்
இன்பம் அளித்தீர்கள், கலி யுகத்தில் சைதன்யர் என்கிற தங்க நிற வடிவம் கொண்டு பகவானின்
புனித நாமங்களை பிரச்சாரம் செய்வார்' - நரசிம்ம
புராணம்
gaurango
'ham mahi-tale
bhagirathi-tate
ramye
bhavisyami
saci-sutah
கலியுகத்தின்,
முதல் சந்தியா வேளையில், நான் இந்த பூமியில் அழகிய கங்கை நதிக்கரையில், சசி தேவிக்கு
மகனாக தங்க நிற வடிவம் கொண்டு அவதரித்தேன்' -
பத்ம புராணம்
antah-krsno
bahir-gaurah
sangopangastra-parsadah
sacigarbhe
samapnuyam
maya-manusa-karma-krt
‘உள்ளே
கருப்பும், வெளியே தங்க நிறத்திலும் அவரது சகாக்களோடும் மற்றும் ஆயுதங்கள் - நாமங்களாகவும்,
நான் சசி தேவியின் கருவில் அவதரிப்பேன், நான் மாய சக்தியால் மூடப்பட்டுள்ளதால் ஒரு
மனிதனை போல் இருப்பேன்' - ஸ்கந்த புராணம்
kali-ghora-tamascchannan
sarvan
acara-varjitan
saci
garbhe ca sambhuya
tarayisyami
narada
ஓ
நாரத, சசி தேவி (கிருஷ்ணரின் தயார் யசோதா) வயித்தில் நான் அவதரிப்பேன். நான் அறியாமையினால்
மூடப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்காக, நல்ல நடத்தை கொண்டுவருவதற்க்காகவும் வருகிறேன்' - வாமன
புராணம்
aham
eva dvija-srestho
lila-pracurya-vigrahah
bhagavad-bhakta-rupena
lokan
raksami sarvada
நான்
பிராமணர்களில் சிறந்தவராக, ஒரு பக்தர் வடிவில் உலக மக்களை விடுவிப்பதற்காக வருகிறேன்' - வராஹ
புராணம்
mundo
gaurah sudirghangas
trisrotastira-sambhavah
dayaluh
kirtanagrahi
bhavisyami
kalau yuge
kalau
sankirtanarambhe
bhavisyami
saci-sutah
கலி
யுகத்தில் நான் தலையில் முடியை வழித்து, உயரமான, தங்க நிற வடிவில் , கங்கை கரையில்
பகவானின் நாமங்களை பிரச்சாரம் செய்பவனாகவும். நான் சசி தேவியின் மகனாக வருவேன்'
- வாயு புராணம்
இப்படி
எல்லா புராணங்கள், வேதங்களிலும் சைதன்ய மகா பிரபு பற்றிய உள்ளன.
ஆனால்,
அவரது நோக்கம் 'பகவான் கிருஷ்ணரது நாமங்களை பிரச்சாரம் செய்வதுவே தான். சைதன்யர் தான்னை
எப்போதும் பகவானாக காட்டியதில்லை. எனினும் அவரை பற்றி சில தகவல்களை நங்கள் தந்துளோம்.
யாரெல்லாம்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக ஏற்று, அவரது திருநாமத்தை
அவரது சகாக்களுடன் இணைத்து,
ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய
ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த
என்று
உச்சரித்து, அதனுடன் மஹா மந்திரத்தை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே
ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரிக்கின்றார்களோ, அவர்கள் பகவான் சைதன்யரின்
கருணையைப் பெற்று இறைவனிடம் திரும்பிச் செல்வதற்கான தங்களது பாதையில் விரைவாக முன்னேறுவர்.
ஹரே
கிருஷ்ண ...